சென்னை ஸ்டார்ட் அப் சூழ­ல­மைப்பு: அறிக்கை வெளி­யீடு சென்னை ஸ்டார்ட் அப் சூழ­ல­மைப்பு: அறிக்கை வெளி­யீடு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.15 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.15 ...
விதி­­களை மீறாமல் வியா­பாரம் செய்­யுங்க!; ‘ஆன்லைன்’ நிறு­வ­னங்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
00:09

மும்பை : ‘வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்யும், ‘ஆன்லைன்’ நிறு­வ­னங்கள், விதி­மு­றை­களை மீறாமல் வியா­பாரம் செய்ய வேண்டும்’ என, மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.
சமீ­பத்தில், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்­ளிட்ட வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், குறைந்த விலையில், ‘ஸ்மார்ட்போன், ‘டிவி’, ஆடைகள், கால­ணிகள் உள்­ளிட்ட பொருட்­களை அதி­ர­டி­யாக விற்­பனை செய்­தன. இதற்­காக பத்­தி­ரி­கைகள், வானொலி, ‘டிவி’ உள்­ளிட்ட ஊட­கங்­களில் மிகப் பிரம்­மாண்­ட­மான விளம்­பர பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இது­போன்ற அதி­ரடி தள்­ளு­படி விற்­பனை மற்றும் விளம்­ப­ரங்கள், அன்னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை அப்­பட்­ட­மாக மீறும் செயல் என, கடை­களில் ஸ்மார்ட்போன், ‘டிவி’ உள்­ளிட்ட பொருட்­களை விற்கும் வர்த்­த­கர்கள் குமு­று­கின்­றனர்.
கடும் நடவடிக்கைஇது­கு­றித்து, இந்­திய வர்த்­த­கர்கள் கூட்­ட­மைப்­பான, ‘கெய்ட்’, தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறை­யிடம் புகார் அளித்­துள்­ளது.
அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், வர்த்­த­கர்­க­ளுடன் தான் வியா­பாரம் செய்ய வேண்டும் என்ற அன்னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றையை மீறி நுகர்­வோ­ருக்கு நேர­டி­யாக பொருட்­களை விற்­கின்­றன.கடந்த மார்ச்சில், ஆன்லைன் சில்­லரை விற்­ப­னையில், அரசு அனு­மதி தேவை­யின்றி நேர­டி­யாக, 100 சத­வீத அந்­நிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. அதற்­கான விதி­மு­றை­களில், ‘மின்­னணு வணி­கத்தில் பொருட்­களை இருப்பு வைத்து விற்­பனை செய்­வ­தற்கு அனு­மதி இல்லை’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. மேலும் வலை­தள சந்தை நிறு­வ­னங்கள் நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ, சரக்­குகள் மற்றும் சேவை­களின் விலையை நிர்­ண­யிக்கக் கூடாது எனவும் கூறப்­பட்டு உள்­ளது.
கடை­களில் விற்­கப்­படும் விலைக்கு நிக­ரா­கவே, ஆன்லைன் பொருட்­களின் விலை இருக்க வேண்டும்; ஊடக விளம்­ப­ரங்­களில் தள்­ளு­ப­டியை, சப்­ளை­யர்கள் மற்றும், ‘பிராண்­டு’கள் தான் வழங்­கு­கின்­றன என்­பதை அறி­விக்க வேண்டும் எனவும் விதி­முறை கூறு­கி­றது.மேலும், ஒரு வலை­தள சந்தை நிறு­வ­னத்தின் மொத்த வர்த்­த­கத்தில், ஒரு சப்­ளையர் உட­னான வர்த்­தகம், 25 சத­வீ­தத்தை தாண்டக் கூடாது எனவும் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவற்­றை­யெல்லாம் மீறி வலை­த­ளத்தில் வர்த்­தகம் புரிந்து வரும் ஆன்லைன் நிறு­வ­னங்கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
அறிவுரைஇந்த புகாரை தொடர்ந்து, தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் தலை­மையில், நுகர்வோர் விவ­கார துறை செயலர், பல்­வேறு அரசு துறை­களின் உயர் அதி­கா­ரிகள் கூட்டம், டில்­லியில் நடை­பெற்­றது.‘இக்­கூட்­டத்தில் பங்­கேற்ற ஆன்லைன் சில்­லரை விற்­பனை நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளிடம், மின்­னணு வர்த்­தக விதி­மு­றை­களை பின்­பற்றி வியா­பாரம் செய்­யு­மாறு அறி­வுரை வழங்­கப்­பட்­டது’ என, தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறை உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)