பதிவு செய்த நாள்
25 ஆக2016
00:22
புதுடில்லி : ஹீரோ நிறுவனம், 17 வகை புதிய சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ சைக்கிள்ஸ், 17 வகை சைக்கிள்களை, ‘ஹீரோ ஸ்பிரின்ட் புரோ’ என்ற பெயரில் அறிமுகம் செய்து உள்ளது. அவற்றின் விலை, 7,000 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் என்றளவில் உள்ளது. ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், அண்மையில் இலங்கையை சேர்ந்த, ‘பி.எஸ்.எச்., வென்ச்சர்ஸ்’ சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் ஆலையில், நவீன சைக்கிள்களை தயாரித்து, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, ஹீரோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, ஹீரோ சைக்கிள்ஸ் தலைவர் பங்கஜ் முஞ்சால் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனம், இளைஞர்கள் விரும்பும் வகையில், நவீன சைக்கிள்களை தயாரித்து வருகிறது. இந்த சைக்கிள், உடற்பயிற்சி செய்ய ஏதுவாகவும், உடல் வலிமையை பேணி காக்கும் வகையிலும் இருக்கும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|