17 வகை சைக்­கிள்கள் அறி­முகம் செய்­தது ஹீரோ 17 வகை சைக்­கிள்கள் அறி­முகம் செய்­தது ஹீரோ ... போலி மருந்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசின் அதிரடி; கூடுதல் ஆய்வாளர்களை நியமிக்க திட்டம் போலி மருந்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசின் அதிரடி; கூடுதல் ... ...
ரியல் எஸ்டேட் துறையில் 200 கோடி டாலர் அன்­னிய முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
00:23

புது­டில்லி : ‘இந்­திய ரியல் எஸ்டேட் துறையில், 200 கோடி டாலர் அள­விற்கு முத­லீடு செய்ய, அன்­னிய நிறு­வ­னங்கள் முன்­வந்­துள்­ளன’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ தெரி­வித்­துள்­ளது.
அதன் விபரம்:இந்­திய ரியல் எஸ்டேட் துறையில், நிலத்தில் முத­லீடு செய்­வது பிர­தா­ன­மாக இருந்து வந்­தது. இந்த நிலைப்­பாடு, கடந்த 10 ஆண்­டு­களில் மாறி­யுள்­ளது. அதிக பாதிப்­பில்­லாத குடி­யி­ருப்பு, வணிக வளாக திட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கி­றது.இத்­த­கைய திட்­டங்­களில், கூட்­டாக இணைந்து செயல்­ப­டு­வதும், கூட்டு முத­லீ­டு­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன.சமீ­பத்தில், ரியல் எஸ்டேட் திட்­டங்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நிர்­வா­கத்­திலும், கூட்டு நட­வ­டிக்கை ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய, குறைந்த இடர்ப்­பா­டு­களைக் கொண்ட, முத­லீட்­டிற்கு அதிக பாதிப்­பில்­லாத, இந்­திய ரியல் எஸ்டேட் துறை, சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்கத் துவங்­கி­யுள்­ளது.
இதற்கு, 2014 – 15ம் நிதி­யாண்டு முதல், ரியல் எஸ்டேட் துறை கண்டு வரும் எழுச்­சியும் துணை புரிந்­துள்­ளது. இதன் விளை­வாக, இந்­திய ரியல் எஸ்டேட் துறையில், 200 கோடி டாலர் முத­லீடு செய்­வ­தாக, அன்­னிய நிறு­வ­னங்கள் உறுதி அளித்­துள்­ளன. இதை­ய­டுத்து, பல நிறு­வ­னங்கள், கூட்­டாக புதிய திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வதில் தீவிரம் காட்டி வரு­கின்­றன. உதா­ர­ண­மாக, கோத்ரெஜ் பிராப்­பர்ட்டீஸ் நிறு­வனம், நெதர்­லாந்தைச் சேர்ந்த, ஏ.பி.ஜி.ஏ.எம்., நிறு­வ­னத்­துடன் இணைந்து, 27.50 கோடி டாலர் முத­லீட்டு திட்­டத்தை அறி­வித்­துள்­ளது. டாடா ஹவுசிங் நிறு­வனம், பிரிகேட் நிறு­வ­னத்­து­டனும், டி.எல்.எப்., நிறு­வனம், ஜி.ஐ.சி., நிறு­வ­னத்­து­டனும் இணைந்து, செயல்­பட்டு வரு­கின்­றன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
இந்­திய ரியல் எஸ்டேட் துறையில், 200 கோடி டாலர் முத­லீடு செய்­வ­தாக, அன்­னிய நிறு­வ­னங்கள் உறுதி அளித்­துள்­ளன. இதை­ய­டுத்து, பல நிறு­வ­னங்கள், புதிய திட்­டங்­களில் தீவிரம் காட்டு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)