டாடா சன்ஸ் இயக்­குனர் குழுவில் வேணு சீனி­வாசன்டாடா சன்ஸ் இயக்­குனர் குழுவில் வேணு சீனி­வாசன் ... தொழில் தர்­மத்தை கடை­பி­டிக்கஉறு­தி­மொழி எடுப்போம்: சி.ஐ.ஐ., தொழில் தர்­மத்தை கடை­பி­டிக்கஉறு­தி­மொழி எடுப்போம்: சி.ஐ.ஐ., ...
ஏற்­று­மதி அதி­க­ரிப்பால் இரண்­டா­வது காலாண்டில் தயா­ரிப்பு துறையில் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
04:58

புது­டில்லி : ‘ஏற்­று­ம­தியும், உள்­நாட்டில் பொருட்­க­ளுக்­கான தேவையும் அதி­க­ரித்­துள்­ளதால், நடப்பு ஜூலை – செப்., வரை­யி­லான காலத்தில், தயா­ரிப்பு துறை எழுச்சி காணும்’ என, இந்­திய தொழில் மற்றும் வர்த்­தக கூட்­ட­மைப்­பான, ‘பிக்கி’ வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்: நாட்டின் ஏற்­று­மதி, முந்­தைய காலாண்­டு­களை விட, நடப்பு, 2016 –17ம் நிதி­யாண்டின், ஜூலை – செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்டில், தற்­போ­தைய நில­வ­ரப்­படி அதி­க­ரித்­துள்­ளது. அது­போல, உள்­நாட்டில் பொருட்­க­ளுக்­கான தேவையும் உயர்ந்­துள்­ளது; இது, பல்­வேறு நிறு­வ­னங்­க­ளிடம் நடத்­திய ஆய்வில் இருந்து தெரிய வந்­துள்­ளது. நடப்பு நிதி­யாண்டில், ஏப்ரல் – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்டில் நடத்­திய ஆய்வில், 53 சத­வீத நிறு­வ­னங்கள், தயா­ரிப்பு துறையில் எழுச்சி காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தன. இது, நடப்பு இரண்­டா­வது காலாண்­டிற்­கான ஆய்வில், 55 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.இதே காலத்தில், ‘ஆர்­டர்’கள் அதிகம் பெற்ற நிறு­வ­னங்­களின் பங்கு, 38 சத­வீ­தத்தில் இருந்து, 49 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.
விரிவாக்க திட்டங்கள்ஏற்­று­மதி அதிகம் இருக்கும் என தெரி­வித்த நிறு­வ­னங்­களின் பங்கு, 36 சத­வீ­தத்தில் இருந்து, 41 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. அதே­ச­மயம், விரி­வாக்க திட்­டங்கள் குறித்து, அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு, எந்த முடிவும் எடுக்க வாய்ப்­பில்லை என, தெரி­வித்த நிறு­வ­னங்­களின் பங்கு, 75 சத­வீ­தத்தில் இருந்து, 73 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
பாதிப்புஇது, தயா­ரிப்பு துறையின் எழுச்சி மற்றும் மித­மான விரி­வாக்க நட­வ­டிக்­கை­க­ளுக்கு சான்­றாக உள்­ளது. ஸ்திர­மில்­லாத பொரு­ளா­தார சூழல், சாத­க­மற்ற சந்தை நில­வரம், மலிவு விலை பொருட்­களின் இறக்­கு­ம­தியால் எழுந்­துள்ள போட்டி, திட்ட அனு­மதி பெறு­வதில் ஏற்­படும் தாமதம், மின்­சாரம் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­க­ளுக்கு பற்­றாக்­குறை, அதி­க­ரித்து வரும் செல­வி­னங்கள் போன்­ற­வற்றால், விரி­வாக்கத் திட்­டங்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக, நிறு­வ­னங்கள் தெரி­வித்­துள்­ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
பொறி­யியல் சாத­னங்கள் ஏற்­று­மதி கடந்த ஜூலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்­மனி ஆகிய நாடு­க­ளுக்­கான பொறி­யியல் சாத­னங்கள் ஏற்­று­மதி அதி­க­ரித்­துள்­ளது. ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து விலக உள்ள நிலை­யிலும், பிரிட்­ட­னுக்­கான பொறி­யியல் சாத­னங்கள் ஏற்­று­மதி, 12 சத­வீதம் உயர்ந்து, 21.50 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 19.20 கோடி டால­ராக இருந்­தது. இதே காலத்தில், ஜெர்­மனி நாட்­டிற்­கான ஏற்­று­மதி, 19 சத­வீதம் அதி­க­ரித்து, 16.80 கோடி டாலரில் இருந்து, 20 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. பிரான்­சுக்­கான ஏற்­று­மதி, 2.29 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது– இந்­திய பொறி­யியல் ஏற்­று­மதி வளர்ச்சி குழு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)