பங்குச்சந்­தையில் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள்பங்குச்சந்­தையில் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் ... உங்கள் நிதித்­தன்மை என்ன? உங்கள் நிதித்­தன்மை என்ன? ...
கறுப்பு பணத்தை கட்­டுப்­ப­டுத்த...‘கிரெடிட், டெபிட்’ கார்டு பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க ஆய்­வுக்­குழு அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2016
02:01

புது­டில்லி:மத்­திய அரசு, ரொக்கப்பரி­மாற்­றங்­களை குறைத்து, ‘கிரெடிட், டெபிட்’ கார்­டுகள் மற்றும் கணினி வாயி­லான மின்­னணு பரி­வர்த்­த­னை­களை அதி­க­ரிப்­பதன் மூலம், கறுப்பு பணத்தை கட்­டுப்­படுத்த திட்­ட­மிட்டு, அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.இதன்­படி, முதற்­கட்­ட­மாக, கிரெடிட், டெபிட் கார்­டுகள் மற்றும் கணினி வாயி­லான மின்­னணு பணப் பரி­மாற்­றங்­க­ளுக்கு வசூ­லிக்­கப்­படும் கூடுதல் வரி, சேவை வரி, பரி­வர்த்­தனை கட்டணம் ஆகி­ய­வற்றை நீக்க, முடிவு செய்­துள்­ளது.
இத்­துடன், குறிப்­பிட்ட தொகைக்கு மேற்­பட்ட பரி­வர்த்­த­னை­களை, கட்­டாயம் கிரெடிட், டெபிட் கார்­டுகள் அல்­லது மின்­னணு முறையில் தான் மேற்­கொள்ள வேண்டும் என்ற, திட்­டத்­தையும் நடை­மு­றைப்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ளது. இவற்­றுடன், கிரெடிட், டெபிட் மற்றும் மின்­னணு வாயி­லான பணப் பரி­வர்த்­தனை ஊக்­கு­விப்பு திட்­டங்கள் குறித்து ஆராய்­வ­தற்கு, உயர்­மட்டக் குழு ஒன்றை அமைப்­ப­தற்கு, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஏற்கனவே ஒப்­புதல் அளித்­துள்­ளது.
இந்­நி­லையில், மத்­திய நிதி­ய­மைச்­சகம், கிரெடிட், டெபிட் கார்­டுகள் மற்றும் மின்­னணு பரி­மாற்­றங்­களை ஊக்­கு­விப்­பது தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க, உயர்­மட்டக் குழு ஒன்றை அமைத்­துள்­ளது. நிதித்­துறை முன்னாள் செயலர் ரத்தன் பி.வாட்டல் தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள, 11 உறுப்­பி­னர்­களைக் கொண்ட இக்­குழு, ஓராண்­டிற்குள், அதன் பரிந்­து­ரையை, நிதி­ய­மைச்­ச­கத்­திடம் வழங்கும்.
இது­கு­றித்து, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:உயர்­மட்­டக்­குழு, கிரெடிட், டெபிட் கார்­டுகள் மற்றும் மின்னணு வாயி­லான பணப்­ப­ரிவர்த்தனை­க­ளுக்கு, வரி விலக்கு, பணம் திரும்பப் பெறு­வது உள்­ளிட்ட சலு­கைகள்வழங்­கு­வது குறித்து ஆராயும். இத்­த­கைய பரி­வர்த்­த­னை­களின் ஒருங்­கி­ணைந்த தகவல் தொகுப்பை உரு­வாக்­கு­வது குறித்தும் பரி­சீ­லிக்கும். இதன் மூலம், வர்த்­த­கர்­களும், நுகர்­வோரும், தங்­களின் அனைத்து மின்­னணு சார்ந்த பணப் பரி­வர்த்­த­னை­களை உட­னுக்­குடன் அறிந்து கொள்ள முடியும். கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் மின்­னணு பரி­வர்த்­த­னைகள் அனைத்­தையும், ஒற்றை சாளர வழி­மு­றையில் இணைப்­பது குறித்தும், உயர்­மட்­டக்­குழு பரி­சீ­லிக்கும்.
பல்­வேறு அரசு அமைப்பு­களில், வெவ்­வேறு வலை­தளங்கள் வாயி­லாக மேற்­கொள்­ளப்­படும் பணப்­ப­ரி­வர்த்­த­னை­களை, ஒரே குடையின் கீழ் கொண்டு வரு­வது குறித்தும், உயர்­மட்­டக்­குழு பரி­சீ­லித்து, அதன் பரிந்­து­ரை­களை வழங்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)