பதப்­ப­டுத்­தப்­படும் உண­வு­க­ளுக்கு தர கட்­டுப்­பாடு பதப்­ப­டுத்­தப்­படும் உண­வு­க­ளுக்கு தர கட்­டுப்­பாடு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.11 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.11 ...
‘கேர் ரேட்டிங்ஸ்’ ஆய்­வ­றிக்கை; சீரிய வளர்ச்சி பாதையில் ‘செராமிக் டைல்ஸ்’ துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
04:44

மும்பை : ‘இந்­தி­யாவில், ‘செராமிக் டைல்ஸ்’ எனப்­படும், பீங்கான் ஓடு­களின் பயன்­பாடு குறை­வாக உள்ள போதிலும், வரும் ஆண்­டு­களில் அத்­து­றையின் வளர்ச்சி, மேலும் சிறப்­பாக இருக்கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்:உல­க­ளவில், செராமிக் டைல்ஸ் தயா­ரிப்பு மற்றும் பயன்­பாட்டில், சீனா, பிரே­சிலை அடுத்து, இந்­தியா மூன்­றா­வது இடத்தில் உள்­ளது.ஆண்­டுக்கு, 82.50 கோடி சதுர மீட்டர் அள­விற்கு, இந்­தி­யாவில் செராமிக் டைல்ஸ் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. ஐந்து லட்சம் பேர், இத்­தொ­ழிலில் உள்­ளனர். எனினும், இந்­தி­யாவில், தனி­நபர் செராமிக் டைல்ஸ் பயன்­பாடு, 0.59 சதுர மீட்டர் என்ற அள­விற்கே உள்­ளது.
செழிக்க செய்யும்:இதற்கு, ரியல் எஸ்டேட் துறையின் மந்­த­நி­லையும் ஒரு காரணம். இத்­த­கைய சூழ­லிலும், செராமிக் டைல்ஸ் துறை, சிறப்­பான வளர்ச்சி கண்டு வரு­கி­றது. பெருகி வரும் நக­ரங்­களும், அதி­க­ரித்­துள்ள மக்­களின் செல­வ­ழிப்பு வரு­வாயும், மத்­திய, மாநில அர­சு­களின் கொள்கை திட்­டங்­களும், செராமிக் டைல்ஸ் துறை மேலும் வளர்ச்சி காண உதவும். குறிப்­பாக, மத்­திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி, துாய்மை இந்­தியா, அம்ருத், 2022ல் அனை­வ­ருக்கு வீடு’ போன்ற, கட்­டு­மானம் சார்ந்த திட்­டங்கள், செராமிக் டைல்ஸ் துறை, வள­மான வளர்ச்சி காண துணை­ பு­ரியும்.
அறி­மு­க­மாக உள்ள, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி திட்­டமும், செராமிக் டைல்ஸ் துறையை செழிக்கச் செய்யும். இத்­து­றையில், உற்­பத்தி வரி, மத்­திய விற்­பனை வரி, மதிப்பு கூட்டு வரி என, 26 சத­வீத அள­விற்கு, பல­முனை வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. ஜி.எஸ்.டி., மூலம், செராமிக் டைல்ஸ் துறையின் வரிச்­சுமை குறையும். தேசிய அளவில், ஒரே சீரான வரி விதிப்பு, கால தாம­த­மற்ற விரை­வான சரக்கு போக்­கு­வ­ரத்து போன்­ற­வற்றின் மூலம், செராமிக் டைல்ஸ் துறையின் செல­வினம் குறையும். அமைப்பு சாரா துறை­யி­னரும், ஜி.எஸ்.டி., வரி விதிப்­பிற்குள் வருவர் என்­பதால், விற்­பனை விலை சீராகும். இதனால், அமைப்பு சார்ந்த செராமிக் டைல்ஸ் துறை, ஆதாயம் பெறும்.
சீனா டைல்ஸ்:மூலப்­பொ­ருட்கள், தொழில்­நுட்பம், தொழி­லாளர் வளம், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் என, செராமிக் டைல்ஸ் துறைக்கு பல அம்­சங்கள் சாத­க­மாக உள்­ளன. சீனாவின் மலிவு விலை செராமிக் டைல்ஸ் இறக்­கு­ம­தியால் ஏற்­பட்ட பாதிப்­பிற்கும், தற்­போது தீர்வு காணப்­பட்டு உள்­ளது. கடந்த மார்ச் முதல், 1 சதுர மீட்டர் சீன செராமிக் டைல்­சுக்கு, 1.37 டாலர் வீதம், அதிக பொருள் குவிப்பு வரி விதிக்­கப்­ப­டு­வதால், விலை வித்­தி­யாசம் குறைந்­துஉள்­ளது.இவ்­வாறு அறிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
சீனாவில், தனி­நபர், ‘செராமிக் டைல்ஸ்’ பயன்­பாடு, 4.12 சதுர மீட்டர் என்­ற­ளவில் உள்­ளது. இது, பிரேசில், வியட்னாம் மற்றும் இந்­தி­யாவில், முறையே, 3.33, 2.80, 0.59 சதுர மீட்டர் ஆக உள்­ளது

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)