தரச்சான்று தரு­வதில் தாம­தமா: ஐ.எஸ்.டி.ஏ.ஏ., மறுப்புதரச்சான்று தரு­வதில் தாம­தமா: ஐ.எஸ்.டி.ஏ.ஏ., மறுப்பு ... இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைந்து வருகிறது இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைந்து வருகிறது ...
சொந்த வீடு வாங்க சரியான நேரம் இது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2016
05:04

சொந்த வீடு வாங்கும் விருப்பம் கொண்­ட­வர்கள் அதற்­காக திட்­ட­மிடும் போது, தற்­போது சாத்­தி­ய­மாகும் அள­வி­லான சிறிய வீட்டை வாங்­கு­வதா அல்­லது மேலும் நன்­றாக திட்­ட­மிட்டு காத்­தி­ருந்து, வச­தி­யான இடத்தில் பெரிய வீடாக வாங்­கு­வதா? எனும் கேள்­வியால் உண்­டாகும் குழப்பத்தை எதிர்கொள்ள வேண்டி வரலாம். பொது­வாக, ஒரு­வரின் சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் தான் வீட்டுக் கடன் கிடைக்கும். விரும்­பிய பட்­ஜெட்டில் வீடு வாங்­கு­வ­தற்­கான சம்­பளம் இல்லை என்றால், கிடைக்கும் வீட்டுக் கட­னுக்கு ஏற்ற வீட்­டையே தேர்வு செய்ய வேண்­டி­யி­ருக்கும்.
இதனால், அளவில் சிறிய வீட்டை தான் வாங்க முடியும் என்­ப­தோடு, அந்த வீடும் நக­ருக்கு வெளியே தொலைவில் அமைவ­தற்­கான வாய்ப்பும் உள்­ளது. இது பல்­வேறு சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தலாம், என்­றாலும், வேறு வழி­யில்­லாமல் நடுத்­தர மக்கள் பலரும், விர­லுக்­கேற்ற வீக்­கமே சரி என்று, தங்கள் கடன் தகு­திக்கு சாத்­தி­ய­மான வீட்டை வாங்கிக் கொண்டு விடு­கின்­றனர்.இதற்கு மாறாக, இப்­போ­தைய நிலையில், பெரிய வீடு வாங்­கு­வது சாத்­தி­ய­மில்லை என்­பதை புரிந்து கொண்டு, வீடு வாங்கும் முடிவை 3 முதல் 5 ஆண்­டுகள் தள்­ளிப்­போடலாம். இடைப்­பட்ட காலத்தில் திட்­ட­மிட்டு சேமித்து கணி­ச­மான தொகை­யையும் கையில் வைத்­தி­ருக்­கலாம். மேலும் சம்­பள உயர்வு மூலம் கடன் தகு­தியும் அதி­க­ரித்­தி­ருக்கும் என்­பதால் எதிர்­கா­லத்தில் விரும்­பி­யது போல பெரிய வீட்டை, விரும்­பிய பகு­தியில் வாங்­கு­வது சாத்­தி­ய­மா­கலாம்.இப்­போது ஒற்றை படுக்­கை­யறை வீடு தான் வாங்க முடியும் என்றால், சில ஆண்­டுகள் காத்­தி­ருந்து திட்­ட­மிட்டால் இரட்டை படுக்­கை­யறை வீடு வாங்­கலாம். எனவே, தற்­போது சாத்­தி­ய­மாகும் வீட்டை வாங்­கு­வதா அல்­லது எதிர்­கா­லத்தில் வாங்க கூடிய வச­தி­யான வீட்­டிற்கு காத்­தி­ருப்­பதா எனும் கேள்வி எழலாம். வாங்கும் வீட்டை எல்லா வச­தி­க­ளு­டனும் வாங்க வேண்டும் என விரும்­பு­வது சரி­யா­னது தான். அதற்­காக காத்­தி­ருந்து திட்­ட­மி­டு­வ­திலும் தவ­றில்லை தான். ஆனால், இதில் பாத­க­மான அம்­சங்கள் இருப்­ப­தையும் கவ­னிக்க வேண்டும். வாழ்க்கை எதிர்­பார்த்­த­படி அமைய வாய்ப்­பில்லை என்­பதால், எதிர்­கா­லத்தில் சம்­பள உயர்வு எதிர்­பார்த்­த­படி இருக்கும் என்­பது நிச்­ச­ய­மில்லை. 2008 பொரு­ளா­தார தேக்க நிலை அல்­லது பிரெக்ஸிட் பிரச்னை போன்­றவை பாதிப்பை உண்­டாக்­கினால் சிக்கல்.
மேலும், சில ஆண்­டு­களில் கடன் தகுதி உயரும் என்­றாலும், அதற்­கேற்ப வீடு­களின் விலையும் அதி­க­ரித்­தி­ருக்கும். இந்த அம்­சங்கள் வருங்­கால வீடு திட்­ட­மி­டலை கேள்­விக்­குள்­ளாக்­கலாம். இதை தவிர்க்க, தற்­போது சாத்­தி­ய­மாகும் வீட்டை வாங்­கு­வதே புத்­தி­சா­லித்­தனம் என்று வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். அதற்­காக எலி வலை வீடு தான் நமக்கு என இருந்­து­விட வேண்­டி­ய­தில்லை. இப்­போது வீட்டை வாங்­கி­விட்டு, தொடர்ந்து தீவி­ர­மாக சேமித்தும் வர வேண்டும். சில ஆண்­டுகள் கழித்து பதவி உயர்வு போன்­றவை கைகொ­டுக்கும் போது, முதல் வீட்டை விற்று விட்டு பெரிய வீடாக வாங்கி கொள்­ளலாம். இதற்குள் முதல் வீட்டின் மதிப்பும் கணி­ச­மாக உயர்ந்­தி­ருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)