இரண்டு நாளில் ரூ.2,000 கோடி கடன் இந்தியன் வங்கி பொது மேலாளர் தகவல்இரண்டு நாளில் ரூ.2,000 கோடி கடன் இந்தியன் வங்கி பொது மேலாளர் தகவல் ... மியூச்சுவல் பண்ட் முதலீடுகளின் நிலை மியூச்சுவல் பண்ட் முதலீடுகளின் நிலை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இல்லை என சொல்லும் கலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2016
23:40

நிதி சாத­னங்­க­ளுக்­கான பரிந்­து­ரை­யாக இருந்­தாலும் சரி, சேமிப்­புக்­கான ஆலோ­ச­னை­யாக இருந்­தாலும் சரி, நாம் எல்­லா­வற்­றையும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்­றில்லை. சில நேரங்­களில் இல்லை என மறுத்து சொல்­வது அவ­சியம்.
பொது­வா­கவே, நாம் மறுக்க விரும்பும் போது தயக்­கத்­துடன் ஆமாம் என்று சொல்லும் நிலைக்கே பழக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். இந்த பிரச்­னைக்கு வழி காட்டும் வகையில், ‘தி புக் ஆப் நோ’ புத்­த­கத்தில், சூசன் நியூமன், இல்­லை­யென சொல்­வது எப்­படி என ஊக்­க­ம­ளிக்­கிறார்:ஆம், நிச்­ச­ய­மாக, ஒரு பிரச்­னையும் இல்லை, போன்ற வார்த்­தைகள் நாம் அவற்றின் தன்­மையை உணர்­வ­தற்கு முன்பே நம்­மிடம் இருந்து வந்து விழுந்து விடு­கி­றது. ஆனால், இதை நிறை­வேற்­று­வ­தற்­கான நேரமோ, வாய்ப்போ இல்லை என்­பதை தாம­த­மாக தான் உணர்­கிறோம். இது போன்ற சூழல் அடிக்­கடி ஏற்­படும் நிலை இருந்தால் யோசித்­தாக வேண்டும்.
சிறு வயதில், இல்லை, முடி­யாது என, மறுத்துச் சொல்­வதில் எந்த சிக்­கலும் இருக்­க­வில்லை. ஆனால், வளர வளர, இல்லை எனும் வார்த்தை மெல்ல மறைந்து விடு­கி­றது. இல்லை என சொன்னால், பெற்றோர் கோப­மடை­கின்­றனர். ஆசி­ரி­யர்­களும், இல்லை என்பதை ஏற்­ப­தில்லை; நண்­பர்­களும் தான். சிறு வயதில் தயக்­க­மில்­லாமல் சொன்ன வார்த்தை வளர்ந்த பிறகு சாத்­தியம் இல்­லாமல் போகி­றது. இல்லை என மறுத்தால், ஏற்­படும் விளை­வு­களை கண்டு அஞ்ச பலரும் பழக்­கப்­பட்­டுள்­ளனர். எப்­போதும் ஆமாம் என சொல்லி பழ­கி­ய­வர்கள் சிக்கி கொண்­டது போல உணர்­கின்­றனர்.
நண்­பர்கள் வட்டம்: உங்­க­ளிடம் எல்­லோரும் உதவி கேட்டு வரு­வது எதற்­காக தெரி­யுமா? நீங்கள் சிறப்­பாக செயல்­ப­டு­வதால் அல்­லது உங்­க­ளிடம் அதிக நேரம் இருப்­பதால் தான். ஆனால், எப்­போதும் ஆமோ­தித்து ஒப்­புக்­கொள்­வது உங்­க­ளுக்கு தற்­கா­லிக பாராட்­டு­களை மட்டுமே பெற்­றுத்­தரும். பலரும் உங்­களை எளிதாக எடுத்­துக்­கொள்ளத் துவங்கி விடுவர்.
குடும்­பத்­தினர்: உங்கள் குடும்­பத்­தி­னரே கூட உங்கள் நேரத்தை எளி­தாக எடுத்­துக்­கொள்­ளலாம். பிள்­ளைகள் சலுகை எடுத்­துக்­கொள்ள முயற்­சிக்கும் போது தீர்­மா­ன­மாக இருங்கள். பெற்றோர் ஏதேனும் வேலை செய்யு­மாறு கூறினால், முடி­யாத சூழலில் பணிவாக மறுத்துச் சொல்­லுங்கள்.
பணி­யி­டத்தில்: மேல­தி­காரி, திடீ­ரென ஆண்டு அறிக்­கையை கேட்­கலாம். நீங்­களும் சரி என்று கூறி விடா­தீர்கள். இதை தயார் செய்யும் பணி நடந்து வந்­தாலும், இடையே வேறு முக்­கிய வேலைகள் வந்­து­விட்­டன என்­பதை எடுத்துக் கூறுங்கள். உடனே தயார் செய்­வ­தற்­கில்லை, அவ­காசம் தேவை என சொல்­வதே சரி­யாக இருக்கும். சிக்­க­லான மனி­தர்கள்: பல நேரங்­களில் முன் பின் தெரி­யா­த­வர்­க­ளிடம் இல்லை என சொல்­வது கடி­ன­மாக இருக்­கலாம். அது விற்­பனை பிர­தி­நி­தி­யாக இருக்­கலாம்: நன்­கொடை கேட்­ப­வ­ராக இருக்­கலாம். அல்­லது ரியல் எஸ்டேட் முக­வரின் பரிந்­து­ரை­யாக இருக்­கலாம். ஆனால், அது அவர்­களின் வேலை. எனவே, உங்கள் தேவையின் அடிப்­ப­டையில் யோசித்து செயல்­ப­டவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)