சொந்த வீடு தேர்வு: நான்கு முக்கிய அம்சங்கள்சொந்த வீடு தேர்வு: நான்கு முக்கிய அம்சங்கள் ... பண பரிவர்த்தனை வசதிகள்:  தேர்வு செய்வது எப்படி? பண பரிவர்த்தனை வசதிகள்: தேர்வு செய்வது எப்படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஷாப்பிங் ரகசியங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2016
23:43

ஷாப்பிங் செய்து விட்டு வரும்­போது வாங்க நினைத்­தி­ருந்த பொருட்கள் தவிர, தேவை­யில்­லாத பொருட்கள் பல­வற்­றையும் வாங்­கி­யதை நினைத்து நொந்து போகும் அனு­பவம் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றதா? இதற்கு காரணம், நீங்கள் திட்­ட­மி­டாமல் ஷாப்பிங் செய்­தது மட்டும் அல்ல, சூப்பர் மார்க்கெட் மற்றும் மால்கள் பின்­பற்றும் கண்­ணுக்குத் தெரி­யாத விற்­பனை உத்­தி­களும் தான். வாடிக்­கை­யா­ளர்கள் அதி­க­மாக செலவு செய்­யத்­துாண்டும் வகையில் ஷாப்பிங் மால்கள் பல வகை­யான விற்­பனை தந்­தி­ரங்­களை கடை­பி­டிக்­கின்­றன.
விலை மாயம்பல விற்­பனை மையங்­களில் இந்த உத்தி பின்­பற்­றப்­ப­டு­கி­றது. 1,000 ரூபாய் மதிப்பு பொருள், 500 ரூபாய் மற்றும், 1,200 ரூபாய் மதிப்­புள்ள பொருட்­க­ளுக்கு நடுவே வைக்­கப்­பட்­டி­ருக்கும். இதை பார்க்கும் போது, 1,000 ரூபாய் என்­பது நல்ல விலை போன்ற எண்ணம் ஏற்­பட்டு பலரும் அந்த பொருளை வாங்­கு­வார்கள். இதே போல,400 ரூபாய் விலை கொண்ட பெரிய ஷாம்பு பாட்­டிலை வாங்­கத்­த­யங்கும் பலரும், 100 ரூபாய் கொண்ட சிறிய ஷாம்பு பாட்­டிலை பர்த்­த­வுடன் வாங்­கு­வார்கள். இத்­த­கைய சிறிய பொருட்கள் அதிக அளவில் வைக்­கப்­பட்­டி­ருக்கும்.
பை நிறைய பொருட்கள்பல மால்­களில் உள்ளே நுழந்­த­துமே பொருட்­களை போட்­டுக்­கொள்ள கேரி பேக் போன்ற பை கொடுக்­கப்­படும். இதற்கு காரணம், பொருட்­களை கையில் வைத்­துக்­கொண்­டி­ருந்தால் குறை­வான பொருட்­க­ளையே வாங்­கு­வார்கள். அதோடு பையில் பொருட்­களை வைத்­தி­ருந்தால், அதை வேண்டாம் என எடுத்து வைக்க மனது வராது. இதே போல பின்­ன­ணியில் ஒலிக்கும் இசை, வாடிக்­கை­யா­ளர்கள் மனதை லேசாக்கி, செலவு செய்­வதை உற்­சா­க­மா­ன­தாக மாற்­று­கி­றது.
மேலும் கீழும்எந்த பொருட்கள் எந்த இடத்தில், எப்­படி வைக்­கப்­ப­டு­கின்­றன என்­பதில் விஷயம் இருக்­கி­றது. அதிக லாபம் உள்ள பொருட்கள் முகப்­பி­லேயே வைக்­கப்­பட்­டி­ருக்கும். அதிக விலை கொண்ட பொருட்கள், கண் பார்­வையில் படும் வகையில் இருக்கும். சிறார்­களை கவ­ரக்­கூ­டிய பொருட்கள், அவர்கள் பார்­வையில் படும் வகையில் கீழ் தட்­டு­களில் வைக்­கப்­பட்­டி­ருக்கும். அத்­தி­யா­வ­சி­ய­மாக வாங்க வேண்­டிய பொருட்கள், கடைசி இடத்தில் இருக்கும். அவற்றை தேடிச்­செல்லும் போது மற்ற பொருட்­களை வாங்­கத்­துாண்டும் வகையில் இந்த ஏற்­பாடு.
இல­வச துாண்டில்இல­வச சாம்­பிள்கள் அளிக்­கப்­ப­டு­வது புதிய பொருட்­களை அறி­முகம் செய்ய மட்டும் அல்ல: வாடிக்­கை­யா­ளர்­களை தடுத்து நிறுத்தி, அந்த இடத்தில் கூடுதல் நேரத்தை செல­விட வைத்து, அரு­கா­மையில் வைக்­கப்­பட்­டுள்ள பொருட்­களை வாங்க துாண்­டு­வ­தற்­கா­கவும் தான்! வாயிலில் பில் கவுண்டர் அருகே எளி­தாக வாங்­கத்­துாண்டும் சாக்லெட் போன்­றவை வைக்­கப்­பட்­டி­ருக்கும்.
ஆன்லைன் உத்திஆன்­லைனில் ஷாப்பிங் செய்யும் போது, மாறு­பட்ட விலை உத்தி கடை­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. அதிக நேரம் செல­வி­டு­ப­வ­ருக்கு முன்­வைக்­கப்­படும் விலை அதி­க­மாக இருக்கும். மாறாக வந்­த­வுடன் வெளி­யேறும் தன்மை கொண்­ட­வரை கவர குறைந்த விலை முன்­வைக்­கப்­ப­டலாம். பய­னா­ளிகள் இணை­ய­த­ளத்தை பயன்­ப­டுத்தும் விதத்தின் அடிப்­ப­டையில் இது தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)