ஷாப்பிங் ரகசியங்கள்!ஷாப்பிங் ரகசியங்கள்! ... பெடரல் வங்கி முடிவால்  தங்கம் விலை சரிவு  பெடரல் வங்கி முடிவால் தங்கம் விலை சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பண பரிவர்த்தனை வசதிகள்: தேர்வு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2016
23:43

மொபைல் வாலெட்கள், கிரெடிட் கார்­டுகள், செய­லிகள், யு.பி.ஐ., என பண பரி­வர்த்­த­னைக்­கான வச­திகள் அதி­க­ரித்து வரும் நிலையில், உங்­க­ளுக்கு பொருத்­த­மான முறையை தீர்­மா­னிப்­பது எப்­படி?
டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தின் தாக்­கத்தால் இணையம் மூலமே பணம் செலுத்­து­வது, பெறு­வது எளி­தாகி இருக்­கி­றது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்­டுகள் தவிர, நெட் பேங்கிங், மொபைல் வாலெட்கள், வங்கி செய­லிகள் போன்­றவை மூலமும் பண பரி­வர்த்­தனை மேற்­கொள்ள முடி­கி­றது. அண்­மையில் அறி­முகம் ஆகி­யுள்ள வசதி­யான யு.பி.ஐ., தனி­ந­பர்­க­ளுக்கு இடை­யி­லான பண­ப­ரி­வர்த்­த­னையில் பெரும் மாற்­றத்தை கொண்டு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பண பரி­வர்த்­த­னைக்­கான வச­திகள் அதி­க­ரிப்­பது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான வாய்ப்­பு­களை அதி­க­மாக்­கி­யுள்­ளது என்­றாலும், எந்த சேவையை பயன்­ப­டுத்­து­வது எனும் குழப்­பத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
சாத­கங்கள், பாத­கங்கள்!அதோடு மொபைல் வாலெட்கள் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலு­கைகள் போன்­ற­வற்றை அளித்து கவர முயன்று வரு­கின்­றன. இந்த சூழலில், பய­னா­ளிகள் தங்கள் தேவைகள் மற்றும் தேவை­க­ளுக்கு ஏற்ப பண பரி­வர்த்­தனை வச­தி­களை தேர்வு செய்­வது பொருத்­த­மாக இருக்கும் என வல்­லுனர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.பல்­வேறு வகை­யான பண பரி­வர்த்­தனை வச­திகள் இருந்­தாலும், பயன்­படுத்தும் சூழ­லுக்கு ஏற்ப ஒவ்­வொன்­றிலும் சாத­க­மான மற்றும் பாத­க­மான அம்­சங்கள் இருக்­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு, மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்­து­வது எளி­தாக அமை­கி­றது.
நெட் பேங்கிங் சேவையை பயன்­படுத்தும் போது, இரண்டு அடுக்கு பாது­காப்பு முறையை பய­னா­ளிகள் தாங்­க­ளா­கவே மேற்­கொள்ள வேண்­டி­யி­ருப்­பதால், மொபைல் மூலம் பண செலுத்­து­வது இதை­விட எளி­தாக அமை­கி­றது. இப்­போது அறி­முகம் ஆகி­யுள்ள யு.பி.ஐ., வச­தியும் மிகவும் எளி­மை­யாக பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அதே போல, மொபைல் வாலெட்கள், டெபிட் கார்­டு­க­ளுக்கு மாற்­றாக அமை­கின்­றன. பய­ணத்தின் போது பயன்­ப­டுத்த மற்றும் பரிசு வழங்க இவை அதிகம் நாடப்­ப­டு­கின்­றன. ஆனால், மொபைல் வாலெட்­க­ளுக்கு வரம்பு உண்டு என்­பதால் இவற்றில் அடிக்­கடி பணத்தை நிரப்­பிக்­கொண்­டி­ருக்க வேண்டும். இது பல நேரங்­களில் சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம். ஆனால், வங்­கி­களின் பிரத்­யேக செய­லி­களை பயன்­ப­டுத்தும் போது இத்­த­கைய பிரச்­னைகள் இல்லை.
எந்த சேவை எப்­போது?பொது­வாக, பலரும் தேவைக்­கேற்ப பண பரி­வர்த்­தனை முறை­களை தேர்வு செய்­வது வழக்­க­மாக உள்­ளது. மொபைல், டி.டி.எச்., ரீசார்ஜ் போன்ற குறைந்த தொகை பயன்­பாட்­டிற்கு வாலெட்கள் அதிகம் நாடப்­ப­டு­கின்­றன. பெரும்­பாலும், 100 முதல் 250 ரூபாய் வரை­யான பரிவர்த்த­னைகள் இதன் மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அதே போல, பணம் அனுப்­பு­வ­தற்கு, வங்கி செய­லிகள் ஏற்­ற­தாக அமை­கின்­றன. ஐ.பி.எம்.எஸ்., மேடை சார்ந்து இயக்கும் இவை உட­ன­டி­யாக பணம் அனுப்ப, பெற உத­வு­கின்­றன. அண்­மையில் அறி­முகம் செய்­யப்­பட்ட யு.பி.ஐ., வசதி, இ–மெயில் போன்ற தனித்­தன்மை மிக்க விர்ச்­சுவல் அடை­யாளம் மூலம் தனி­ந­பர்கள் பண பரி­வர்த்­தனை செய்ய வழி செய்­கி­றது. தற்­போது, 21 வங்­கிகள் இந்த வச­தியை வழங்­கு­கின்­றன. தற்­போ­தைய நிலையில், பண பரி­வர்த்­த­னைக்கு, வங்கி செய­லிகள் அதிக அளவில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பொருட்­களை வாங்­கு­வது, பணம் செலுத்­துதல் போன்­ற­வற்­றுக்கு நெட் பேங்கிங் வசதி, மொபைல் வாலெட்­களும் அதிகம் பயன்­ப­டு­கின்­றன.
உங்கள் தேர்வு என்ன?பய­னா­ளிகள், தங்கள் தேவைக்கு ஏற்ற வச­தியை தேர்வு செய்ய, சேவை­களின் முக்கிய அம்­சங்­களை பரி­சீ­லிப்­ப­தோடு, அவற்­றுக்­கான கட்­ட­ணத்­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். அதோடு, தள்­ளு­படி சலு­கைகள் போன்­ற­வற்­றையும் மனதில் கொள்ள வேண்டும். யு.பி.ஐ., வசதி பய­னா­ளி­க­ளுக்கு இல­வ­ச­மாக அமை­கி­றது, என்­றாலும் வங்­கி­க­ளுக்­கான செலவு ஐ.எம்.பி.எஸ்., பரி­வர்த்­தனை போலவே அமை­கி­றது.வழக்­க­மாக வங்­கிகள் பண பரி­வர்த்­தனை செலவை மொபைல் செய­லிகள் மற்றும் நெட் பேங்கிங் வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் இருந்து வசூ­லிக்­கின்­றன. பாது­காப்பு அம்­சத்தை பொருத்­த­வரை, ரிசர்வ் வங்கி எல்லா வகை­யான பண பரி­வர்த்­த­னைக்கும் இரண்டு அடுக்கு பாது­காப்பை வலி­யு­றுத்­து­கி­றது. வங்­கிகள், பரி­வர்த்­தனை வரம்பு தேர்வு போன்ற கூடுதல் பாது­காப்பு அம்­சங்­களை அளிக்­கின்­றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)