பதிவு செய்த நாள்
28 செப்2016
04:09
மும்பை : இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் சிறப்பாக செயல்படும் முன்னணி, 10 நிறுவனங்களின் பட்டியலை, தனியார் ஆய்வு நிறுவனமான, டி.ஆர்.ஏ., வெளியிட்டு உள்ளது. அதில், ஹரியானா மாநிலம், குர்கானைச் சேர்ந்த, டி.எல்.எப்., முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில், கோத்ரெஜ் பிராப்பர்ட்டிஸ், மூன்றாவது இடத்தில், லோதா குழுமம் ஆகியவை உள்ளன.
மேலும், ஹிர்னந்தானி டெவலப்பர்ஸ், நான்காவது இடத்திலும், டாடா ஹவுசிங், ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பெங்களூரைச் சேர்ந்த, பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், ஆறாவது இடத்திலும், ரஹேஜா கார்ப்., ஏழாவது இடத்திலும் உள்ளன. ஷப்பூர்ஜி பலோன்ஜி, எட்டாவது இடத்திலும், ஓபராய் ரியாலிட்டி, ஒன்பதாவது இடத்திலும், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், 10வது இடத்திலும் உள்ளன. முதல், 10 ரியல் எஸ்டேட் நிறுவனங்களில், எட்டு நிறுவனங்கள், மும்பையில் இருப்பதாக, ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|