ஷாப்பிங் செய்யும் முன்!ஷாப்பிங் செய்யும் முன்! ... குறையும் வட்டி விகிதம் ; முத­லீட்டில் மாற்றம் தேவையா? குறையும் வட்டி விகிதம் ; முத­லீட்டில் மாற்றம் தேவையா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெற்­றிக்கு உதவும் பழக்­கங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
07:35

பழக்­கங்கள் தான், நம்­மு­டைய தின­சரி வாழ்க்­கையின் கண்­ணுக்குத் தெரி­யாத கட்­டு­மானம் என்றும், நல்ல பழக்­கங்­களை ஏற்­ப­டுத்திக் கொள்ள சுய கட்­டுப்­பாடு தேவை என்றும் கூறு­கிறார், கிரெட்சன் ரூபின். வாழ்க்­கையை மாற்­றக்­கூ­டிய வகையில் பழக்­கங்­களை அமைத்துக் கொள்­வது பற்­றியும், ‘பெட்டர் தன் பிபோர்’ புத்­த­கத்தில் அவர் விவ­ரிக்­கிறார்:
நாம் நம்­மு­டைய பழக்க வழக்­கங்­களில், 40 சத­வீதம் செயல்­களை தொடர்ந்து செய்­கிறோம். எனவே, பழக்­கங்கள் தான் நம்­மு­டைய இருப்பை, எதிர்­கா­லத்தை உரு­வாக்­கு­கின்­றன. பழக்­கங்­களை மாற்றிக் கொண்டால், நம்மால் வாழ்க்­கையை மாற்றிக் கொள்ள முடியும்.சுய கட்­டுப்­பாடு என்­பது, நம்­மு­டைய வாழ்க்­கையில் மிகவும் முக்­கி­ய­மான அம்சம். சிறந்த சுய கட்­டுப்­பாடு உள்­ள­வர்கள் (சுய ஒழுக்கம் அல்­லது மன உறுதி) மகிழ்ச்­சி­யா­ன­வர்­க­ளா­கவும், ஆரோக்­கி­ய­மா­ன­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். அவர்கள் வலு­வான உற­வு­களை பெற்­றி­ருக்­கின்­றனர். வெற்­றி­க­ர­மான பணி வாழ்க்­கையை பெற்­றி­ருக்­கின்­றனர். முரண்கள் மற்றும் மன­அழுத்­தத்தை சிறப்­பாக கையாள்­கின்­றனர்.மோச­மான பழக்­கங்­களில் இருந்து விலகி இருக்­கின்­றனர். சுய கட்­டுப்­பாடு, நம் மீதே உறுதி கொள்ள வைக்­கி­றது. பழக்­கங்கள் மூலம் நாம் சுய கட்­டுப்­பாட்டை உரு­வாக்கி கொள்­ளலாம். எனினும், சுய கட்­டுப்­பாட்டை பயன்­படுத்தி, நமது செயல்­களை கட்­டுப்­ப­டுத்த முய­லும் ­போது, பாதி நேரங்­களில் மட்­டுமே வெற்றி கிடைப்­ப­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. எனவே தான், பழக்­கங்கள் முக்­கி­ய­மா­கின்­றன.
பழக்­கங்கள் நம்மை முடிவு எடுப்­பதில் இருந்தும், சுய கட்­டுப்­பாட்டை பயன்­ப­டுத்­து­வதில் இருந்தும் விடு­விக்­கின்­றன. வாய்ப்பு கிடைக்­கும்­போது, மூளை ஒரு செயலை பழக்­க­மாக்கி கொள்­கி­றது. இது, நேரம் மற்றும் முயற்­சியை மிச்­ச­மாக்கி, சிக்­க­லான சூழலை எதிர்­கொள்ள உத­வு­கி­றது. பழக்­கங்கள், முடி­வெ­டுக்க தடு­மா­றாத நிலையை, வாய்ப்­பு­களை எடை­போடும் நிலையை ஏற்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றன. நாம் கவலை கொள்­ளும்­போது அல்­லது அதிக சிக்­கல்­க­ளுக்கு இலக்­கா­கும்­போது, பழக்­கங்கள் தான் நமக்கு ஆறுதல் அளிக்­கின்­றன. பழக்­க­மான செயல்­களில் ஈடு­ப­டும்­போது, மனி­தர்கள் அதிக கட்­டுப்­பாட்டை உணர்­வ­தா­கவும், பதற்­றத்தை குறை­வாக உணர்­வ­தா­கவும் ஆய்வுகள் தெரி­விக்­கின்­றன. இந்த கார­ணத்­தினால், நம்­மு­டைய பழக்­கங்­களை, நல்­ல­வி­த­மாக அமைத்துக் கொள்­வது முக்­கி­ய­மா­கி­றது.
பழக்­கங்கள், நேரத்தை மிச்­ச­மாக்­கு­கின்­றன. ஆனால், பழக்­கங்கள் தடை­ப­டும்­போது, மூளை கூடுதல் தக­வல்­களை பரி­சீ­லிக்க வேண்­டி­யி­ருப்­பதால், நேரம் அதி­க­மாக தேவைப்­ப­டு­கி­றது. பழக்­கங்கள் விசு­வா­ச­மான ஊழியர் போன்­றவை. ஆனால், அவை மோச­மான எஜமான். பழக்­கங்கள் தரும் பலன்கள் நமக்குத் தேவை என்­றாலும், நமது பழக்­கங்­களிலேயே சிறை­பட்டு விடக்­கூ­டாது.நம்­மு­டைய பழக்­கங்­களை மாற்­றிக்­கொள்ளும் போது, வாழ்க்­கையை மாற்றிக் கொள்­கிறோம். நமக்குத் தேவை­யான பழக்­கங்­களை உரு­வாக்கி கொள்ள வேண்டும். மன­உ­றுதி மூலம், நல்ல பழக்­கங்­களை ஏற்­ப­டுத்திக் கொண்டு, பின்னர் பழக்­கங்கள் நம் வாழ்க்­கையை கட்­டுப்­ப­டுத்த அனு­ம­திக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)