பதிவு செய்த நாள்
27 அக்2016
07:37
புதுடில்லி : வீடியோகான், மொபைல் போன் விற்பனையில், உள்நாட்டில், முன்னணி ஐந்து நிறுவனங்களில், ஒன்றாக திகழ திட்டமிட்டுள்ளது.
வீடியோகான் நிறுவனம், ‘டிவி’ உள்ளிட்ட வீட்டு நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த ஒன்பது மாதங்களில், 15 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி அக் ஷய் துாத் கூறியதாவது: எங்கள் நிறுவனம், மொபைல் போன் உற்பத்திக்காக, 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது. அடுத்த ஒன்பது மாதங்களில், 15 லட்சம் போன்கள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மொபைல் போன் விற்பனையில், நாட்டில் முன்னணி ஐந்து நிறுவனங்களில், ஒன்றாக திகழ, வீடியோகான் முடிவு செய்துள்ளது. விரைவில், 20 – 25 மாடல்களில் புதிய போன்கள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|