ஜி.எஸ்.எம்.ஏ., தலைவராகசுனில் பார்தி மிட்டல் தேர்வுஜி.எஸ்.எம்.ஏ., தலைவராகசுனில் பார்தி மிட்டல் தேர்வு ... வரும் 2020ம் ஆண்டில்...நம் நாட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள்எண்­ணிக்கை 10,500 ஆக உயரும் வரும் 2020ம் ஆண்டில்...நம் நாட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள்எண்­ணிக்கை ... ...
ரத்தன் டாடா – மிஸ்­திரி மோதல்: ‘செபி’ விசா­ரணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
04:05

புது­டில்லி:டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா – சைரஸ் மிஸ்­திரி இடையி­லான மோதலின் பின்­ன­ணியில், நிறு­வன விதி­மு­றைகள் மீறப்­பட்­ட­னவா; நிதி முறை­கே­டுகள் நடை­பெற்­ற­னவா என்­பது குறித்து, பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ ஆய்வு மேற்­கொள்ள உள்­ள­தாக தகவல் வெளி­யாகி உள்­ளது.
டாடா குழும நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கிய, டாடா சன்ஸ் நிறு­வன தலைவர் பத­வியில் இருந்து, சைரஸ் மிஸ்­திரி, சில தினங்­க­ளுக்கு முன் நீக்­கப்­பட்டார். தற்­கா­லிக தலை­வ­ராக, மீண்டும் ரத்தன் டாடா பொறுப்­பேற்று உள்ளார்.இதை­ய­டுத்து, சைரஸ் மிஸ்­திரி, ரத்தன் டாடா மீது பல்­வேறு புகார்­களை தெரி­வித்து, டாடா சன்ஸ் இயக்­குனர் குழு­வுக்கு கடிதம் எழு­தி­யுள்ளார்.
அதில் கூறி­யி­ருப்­ப­தா­வது:கடந்த, 2012 டிசம்­பரில், டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் தலை­வ­ராக பொறுப்­பேற்ற போது, எனக்கு முழு சுதந்­திரம் கொடுக்­கப்­படும் என, ரத்தன் டாடா தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், அவ்­வாறு செய்­ய­வில்லை. டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின், விதி­மு­றைகள் திருத்­தப்­பட்­டன. ஏர் ஏஷியா மற்றும் சிங்­கப்பூர் ஏர்லைன்ஸ் நிறு­வ­னங்­க­ளுடன் கூட்டு சேர்ந்து செயல்­பட, ரத்தன் டாடா வற்­பு­றுத்­தினார். இந்த ஒப்­பந்­தத்தின் கீழ், இந்தியா, சிங்­கப்பூர் நாடு­களில் இல்­லாத நபர்­க­ளுக்கு, 22 கோடி ரூபாய் தரப்­பட்­டுள்­ளது, சமீ­பத்­திய விசார­ணையில் தெரிய வந்துள்ளது.
கடு­மை­யான இழப்பில் உள்ள, ‘நானோ’ கார் திட்­டத்தை கைக­ழுவ வேண்டும் என்றேன். அவ்­வாறு செய்தால், நானோ தொழிற்­சாலை மூலம், டாடா முத­லீடு செய்­துள்ள, மின்­சார கார் தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு அனுப்பும் சாத­னங்கள் சப்ளை முடங்கும் என்­பதால் மூடவில்லை.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
இதை­ய­டுத்து, டாடா குழுமம், நிறு­வன சட்­டங்­களை மீறி­யுள்­ளதா; சைரஸ் மிஸ்­திரி நீக்­கத்­திற்கு முன், டாடா நிறு­வன பங்­குகள் விலையில், செயற்­கை­யாக ஏற்ற, இறக்­கங்கள் நிகழ்ந்­த­னவா என்­பது குறித்தும், ‘செபி’ விசா­ரிக்க உள்­ள­தாக, தகவல் வெளி­யாகி உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)