நாசிக்கில் 2 நாளில் ரூ.786 கோடி அச்சடிப்புநாசிக்கில் 2 நாளில் ரூ.786 கோடி அச்சடிப்பு ... பழைய நோட்டுகள் ரூ. 2,000 வரை மட்டுமே மாற்ற முடியும் பழைய நோட்டுகள் ரூ. 2,000 வரை மட்டுமே மாற்ற முடியும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கேரளாவில் ஏலக்காய் ஏலம் மீண்டும் நிறுத்தம் : கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2016
11:51

கம்பம்: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கேரளாவில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நடைபெறும் ஏலக்காய் ஏலம், இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் ஈடுபட்டுள்ளோரில் 90 சதவீதம் பேர் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள். ஏலக்காய் ஏல மையங்களில் பதிவு செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பைசஸ் வாரியத்தின் (நறுமணபொருட்கள் வாரியம்) அனுமதி பெற்ற ஏலக் கம்பெனிகள் காய்களை பதிவு செய்வர். அந்த வாரியத்தில் பதிவு செய்த விற்பனையாளர்கள் கொள்முதல் செய்வர்.கேரளாவில் கம்பம்மெட்டு அருகில் உள்ள புத்தடி, தமிழகத்தில் போடி ஆகிய இடங்களில் ஸ்பைசஸ் வாரியத்தின் ஏலக்காய் ஏலமையம் உள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இரண்டு கம்பெனிகள் ஏலம் நடத்தும். தினமும் சராசரியாக ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும்.
இந்த சீசனில் விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிலோவிற்கு ரூ. ஆயிரத்து 300 க்கும் மேல் போனது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் ஏலக்காய் வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் நவ. 10 ம் தேதி ஏலம் நிறுத்தப்பட்டது. ஆனால் மறுநாளே மீண்டும் வழக்கம் போல நடந்தது. ஆனால் அதனை தொடர முடியவில்லை. பணப்பட்டுவாடா செய்ய முடியாததே அதற்கு காரணம்.வங்கிக் கணக்கில் வரவு வைத்தாலும் விவசாயிகளால் பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் ஏலத்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர் கூலி வழங்குவதிலும், பராமரிப்பு செலவுகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் வங்கியில் பணத்தை போட வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் ஏலக்கம்பெனிகள் திணறின. இப்பிரச்னையால் நேற்று முன்தினம் முதல் ஏலக்கம்பெனிகள் தங்கள் வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இதனால் 6 ஏலங்கள் நடைபெறவில்லை.ஏலக் கம்பெனி பணியாளர்கள் தெரிவித்ததாவது: ' பணப்பிரச்னையால் வேறுவழியின்றி வர்த்தகத்தை நிறுத்திவிட்டோம். கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலைகுறைந்து வருவதால் விவசாயிகளும் தோட்டங்களில் காய் எடுப்பதை நிறுத்திவிட்டனர், என்றனர்.

இதற்கிடையே நவ. 24 ல் இது குறித்து விவாதிக்க எர்ணாகுளத்தை தலைமையிடமாக கொண்ட ஸ்பைசஸ் வாரியம், ஏல கம்பெனிகள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே ... மேலும்
business news
புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், ... மேலும்
business news
இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடுபெற்­றி­ருப்­பது தெரிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)