டெபாசிட்  வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரை குறைத்தது எஸ்பிஐடெபாசிட் வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரை குறைத்தது எஸ்பிஐ ... 100 நாட்­களில் 100 கிரா­மங்கள்டிஜிட்­ட­லுக்கு மாற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., 100 நாட்­களில் 100 கிரா­மங்கள்டிஜிட்­ட­லுக்கு மாற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டிஜிட்டல் வங்கிகள் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
05:02

டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப, வங்கிகள் மாற வேண்டும் என்றும், டிஜிட்டல் தன்மையே, அவற்றின் மையமாக இருக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பேங்க் புத்தகத்தில் வலியுறுத்துகிறார், வங்கித் துறை வல்லுனரான, கிரிஸ் ஸ்கின்னர். பல காலமாக, வங்கிகள், பவுதீக வினியோகத்தை தான், அடிப்படையாக கொண்டிருந்தன. கடந்த அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தான், அவை மின்னணு வினியோகத்திற்கு மாறியுள்ளன. மின்னணு வினியோகம் முதிர்ச்சியடைந்துள்ள நிலையிலும், பெரும்பாலான வங்கிகள், 20ம் நுாற்றாண்டில் சிக்கி இருக்கின்றன.
வங்கிகள், தங்கள் செயல்மாதிரியை தலைகீழாக மாற்றிக் கொண்டு, மின்னணு மேடைகளில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.வங்கிகள், தங்கள் கிளைகளின் மேல் அடுக்குகளை உண்டாக்கி வருகின்றன. முதலில், ஏ.டி.எம்.,களை சேர்த்தன. பின், கால் சென்டர்களையும், இணையத்தையும் சேர்த்துக் கொண்டன. அதன்பின், மொபைலை சேர்த்துக் கொண்டன. அவை, பல அடுக்கு சேனல்கள் வழியே செயல்படுகின்றன. ஆனால், வங்கி களுக்கு ஒரே ஒரு சேனல் தான் உண்டு. அது மின்னணு சேனல். அதுவே, மற்றவற்றுக்கு அடிப்படையாக வேண்டும்.
டிஜிட்டல் தலைமுறையினர், வளர்ந்து பெரியவர்களாகும் போது, வங்கிகளின் பவுதீக கிளைகளுக்கு மேல் இணைய சேவையை கொண்டுள்ள அமைப்பை, தலைகீழாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். மாறாக, டிஜிட்டல் வலைப்பின்னலை அடிப்படையாக கொண்டு, டிஜிட்டல் வங்கியை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளன. வங்கிகள், புதுயுக டிஜிட்டல் வங்கியை உருவாக்க முயற்சிக்கும் போது, அதன் துவக்கப்புள்ளி, வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களாக இருக்க வேண்டும்.
முக்கியமாக, டிஜிட்டல் கட்டுமானத்தை உருவாக்க வேண்டும். இதற்காக, வங்கிச் சேவை டிஜிட்டல் மயமாக வேண்டும். வங்கிச் சேவை அனைத்தும், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ற செயலிகளாகும் நிலை வரலாம்.
மேலும், வாடிக்கையாளர் சேவையும் டிஜிட்டல் மயமாகி, நேரடி தன்மை கொண்டதாகிறது. இந்த இடத்தில், பிக்டேட்டாவும் வந்து சேருகிறது. டிஜிட்டல் வங்கியாக, டிஜிட்டல் வலைப்பின்னல் வங்கியின் மையமாக இருக்க வேண்டும். கிளைகள் அமைப்பில் இருந்து அடிப்படையில் விலகிச் செல்ல வேண்டும். இது சாத்தியமில்லை என, சிலர் நினைக்கலாம். பொதுவாக, பலரும் வடிவமைப்பு உணர்ச்சியுடனும், கட்டுமானத்தை வினியோகத்துடனும், சேனல்களை உள்கட்டமைப்புடனும் சேர்த்து குழப்பிக் கொள்கின்றனர். டிஜிட்டல் வங்கியின் வடிவமைப்பு கட்டுமானத்தில் இருந்து துவங்குகிறது. இதையே, அடித்தளம் என குறிப்பிடுகிறேன். கட்டுமானத்தை வங்கி வடிவமைப்புடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. வடிவமைப்பு என்பது, வாடிக்கையாளர் சார்ந்தது. வங்கியின் வடிவமைப்பு வாடிக்கையாளரில் இருந்து துவங்கி, வாடிக்கையாளர்கள் உணர்வின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். புதுயுக வங்கி என்பது, வாடிக்கையாளர்கள் சேவைகளை வாங்க வைப்பதிலேயே, எல்லாரும் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும்.-

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)