ஐபோன் 7 போன்றே உருவாகும் சாம்சங் எஸ்8ஐபோன் 7 போன்றே உருவாகும் சாம்சங் எஸ்8 ... இன்டர்நெட் இல்லாமல் பேடிஎம் பயன்படுத்தலாம் இன்டர்நெட் இல்லாமல் பேடிஎம் பயன்படுத்தலாம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மலிவு விலை 4ஜி போன்களை வெளியிட்ட மைக்ரோமேக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2016
15:11

புதுடில்லி : மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் Vdeo மாடலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் 4ஜி VoLTE தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய Vdeo மாடல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையை பொருத்த வரை ரூ.5000/- பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன்களுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு மற்றும் கூகுள் டூயோ ஆப் உள்ளிட்டவை இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன் வீடியோ காலிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளன.
மைக்ரோமேக்ஸ் Vdeo 1 மற்றும் Vdeo 2 ஸ்மார்ட்போன்களில் 4ஜி VoLTE, ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளமும் கழற்றக் கூடிய பேக் கவர் மற்றும் மெட்டல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் Vdeo ஸ்மார்ட்போன்களின் விலையைப் பொருத்த வரை Vdeo 1 ரூ.4,440/- என்றும், Vdeo 2 ரூ.4,990/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பொருத்த வரை Vdeo 2 போன் பெரிய 4.5 இன்ச் FWVGA திரை மற்றும் 1800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. Vdeo 1 போனில் 4.0 இன்ச் WVGA திரை மற்றும் 1600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 1 ஜிபி ரேம், குவாட் கோர் பிராசஸர், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, மற்றும் 2 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி ஒடிஜி, 3ஜி மற்றும் 4ஜி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)