இன்டர்நெட் இல்லாமல் பேடிஎம் பயன்படுத்தலாம்இன்டர்நெட் இல்லாமல் பேடிஎம் பயன்படுத்தலாம் ... மிகப்­பெ­ரிய சுத்­தி­க­ரிப்பு ஆலை எண்ணெய் நிறு­வ­னங்கள் அமைக்­கின்­றன மிகப்­பெ­ரிய சுத்­தி­க­ரிப்பு ஆலை எண்ணெய் நிறு­வ­னங்கள் அமைக்­கின்­றன ...
ஐபோன் 6 வெடிக்க காரணம் : ஆப்பிள் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2016
15:43

பெய்ஜிங் : ஆப்பிள் ஐபோன் 6 பேட்டரிகள் வெடிக்க முக்கிய காரணத்தை ஆப்பிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீன நுகர்வோர் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பெரிதும் குற்றம்சாட்டப்பட்ட ஐபோன் 6 பேட்டரி வெடிப்பு சம்பவங்களுக்கு வெளிப்புற காரணிகள் தான் முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாங்காய் நுகர்வோர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் எட்டு ஐபோன் 6 போன்களின் பேட்டரி வெடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் 6 பேட்டரிகளில் சார்ஜ் இருந்தும் ஸ்விட்ச் ஆஃப் ஆன அனைத்து போன்களும் நவம்பர் 20 ம் தேதி வெளியிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரிகள் வெடித்த ஐபோன் 6 போன்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அவை வெடித்து சிதற வெளிப்புற சேதங்கள் தான் முக்கிய காரணம் என ஆப்பிள் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 6 சார்ஜிங் கோளாறுகளுக்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ள ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் ஐபோன்களின் விற்பனை கடந்த மூன்று காலாண்டுகளில் சரிவை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. எனினும் ஐபோன் 7 விற்பனை மூலம் இந்த நிலை மாறும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தை போன்றே சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் சரிந்திருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியதும், அந்நிறுவனம் அந்த மாடல் ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றதுமே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)