பதிவு செய்த நாள்
09 டிச2016
04:32
புதுடில்லி:கடந்த நவ., மாதம், உள்நாட்டில், 15.63 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த நவ., மாதம், இந்தியாவில், கார்கள் விற்பனை, 1.73 லட்சமாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், விற்பனையான கார்களை விட, 495 கார்கள் அதிகம். இதே காலத்தில், பயணிகள் வாகன விற்பனை, 1.82 சதவீதம் உயர்ந்து, 2.36 லட்சத்தில் இருந்து, 2.40 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே சமயம், மோட்டார் சைக்கிள் விற்பனை, 10.21 சதவீதம் குறைந்து, 8.66 லட்சத்தில் இருந்து, 7.78 லட்சமாக குறைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை, 5.85 சதவீதம் குறைந்து, 13.20 லட்சத்தில் இருந்து, 12.42 லட்சமாக சரிவடைந்து உள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை, 11.58 சதவீதம் குறைந்து, 45 ஆயிரத்து, 773 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை, 5.48 சதவீதம் குறைந்து, 16.54 லட்சத்தில் இருந்து, 15.63 லட்சமாக சரிவடைந்து உள்ளது. மத்திய அரசு, நவ., மாதம் துவக்கத்தில் வெளியிட்ட, செல்லாத நோட்டு அறிவிப்பால் தான், வாகன விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக, வாகன தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|