உணவை செய்தி தாள்­களில் வைத்து கொடுக்க தடைஉணவை செய்தி தாள்­களில் வைத்து கொடுக்க தடை ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.58 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.58 ...
பண மதிப்பு நீக்கம், ஆர்­ஜியோ போட்டியால்...தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்கள் வருவாய் 6 சத­வீதம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2016
04:38

புது­டில்லி:‘மத்­திய அரசின், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யாலும், ஆர்­ஜியோ நிறு­வ­னத்தின் போட்டி கார­ண­மா­கவும், தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­களின் வருவாய், 5 –- 6 சத­வீதம் குறையும்’ என, தர நிர்­ணய அமைப்­பான, ‘இக்ரா’ தெரி­வித்து உள்­ளது.
அதன் விபரம்:தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்கள், பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றன. அலை­வ­ரிசை உரிமம் பெறு­வ­தற்கு, அதி­க­ளவில் முத­லீடு செய்­துள்ள நிறு­வ­னங்கள், விதி­மு­றைப்­படி, சிறிய நக­ரங்­க­ளிலும் மொபைல் போன் சேவையை விரி­வு­ப­டுத்தும் கட்­டா­யத்தில் உள்­ளன. அதற்­கான, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு, குறிப்­பிட்ட தொகை ஒதுக்க வேண்­டி­யுள்­ளது.
கடன்:விளம்­ப­ரங்கள், சலுகை திட்­டங்கள் மூலம், வாடிக்­கை­யா­ளர்­களை தக்க வைத்துக் கொள்­வ­தற்­கான செல­வி­னங்­களும், நிறு­வ­னங்கள் வரு­வாயில், தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. இது போன்ற கார­ணங்­களால், தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்கள், 4.25 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்­த­ளித்து வரு­கின்­றன.
இத்­த­கைய சூழலில், ரிலையன்ஸ் குழு­மத்தைச் சேர்ந்த, ஆர்­ஜியோ நிறு­வனம், மொபைல் போன் சேவையில் கள­மி­றங்கி, சந்தைப் போட்­டியை மேலும் சூடாக்­கி­யுள்­ளது. அதுவும், செப்., 5 முதல், டிச., இறுதி வரை, இல­வச சேவை என அறி­வித்து, தற்­போது, 2017 மார்ச் வரை, இச்­ச­லு­கையை நீட்­டித்­துள்­ளது. இதனால், முன்­னணி தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­களின் புதிய வாடிக்­கை­யாளர் வளர்ச்சி சரிந்­துள்­ளது.அதே சமயம், ஆர்­ஜியோ, மூன்று மாதங்­களில், 5.20 கோடி வாடிக்­கை­யா­ளர்­களை கவர்ந்து, வேக­மாக முன்­னேறி வரு­கி­றது. இந்­நி­லையில், மத்­திய அரசின், பண மதிப்பு நீக்க அறி­விப்பால், பணத் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு, மக்கள் செல­வ­ழிப்­பது குறைந்­துள்­ளது.
பண தட்டுப்பாடு:இதனால், குறிப்­பாக, ‘பிரீ­பெய்டு’ பிரிவில், மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­களின் வருவாய், பெரு­ம­ளவு குறைந்­துள்­ளது. பணத் தட்­டுப்­பாடு பிரச்னை, டிசம்­ப­ருக்கு பின், படிப்­ப­டி­யாக குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
ஆர்­ஜி­யோவின் இல­வச சேவை, அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்டு இருப்­பதால், அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு, தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­களின் வருவாய், 5 – 6 சத­வீதம் குறையும். ஆர்­ஜியோ நிறு­வ­னத்தின் வருவாய் வளர்ச்சி, நீண்ட கால அடிப்­ப­டையில், நிலை­யாக இருக்கும். இந்­நி­று­வ­னத்­திற்கு, கடன் பிரச்­னைகள் எழும்­பட்­சத்தில், அதை சமா­ளிக்க, தாய் நிறு­வ­ன­மான ரிலையன்ஸ் உதவும். அதனால், ஆர்­ஜி­யோ­விற்கு, கடன் தகுதி மதிப்­பீட்டில், ஸ்திரத்­தன்மை பிரிவு அளிக்­கப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)