ஹோண்டா கார்ஸ் இந்­தியாவிற்­பனை கடும் பாதிப்பு ஹோண்டா கார்ஸ் இந்­தியாவிற்­பனை கடும் பாதிப்பு ... மாருதி சுசூகி இந்­தியா ‘இக்னிஸ்’ கார் அறி­முகம் மாருதி சுசூகி இந்­தியா ‘இக்னிஸ்’ கார் அறி­முகம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா மோட்டார்ஸ் மாற வேண்டும்: மிஸ்­திரி எச்­ச­ரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2016
03:23

புது­டில்லி;‘‘டாடா மோட்டார்ஸ் நிறு­வனம், காலத்­திற்­கேற்ப புதிய வாக­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தாமல் உள்­ளதால், பாதிப்பு ஏற்­படும்,’’ என, அந்­நி­று­வ­னத்தின் இயக்­குனர், சைரஸ் மிஸ்­திரி எச்­ச­ரித்து உள்ளார்.
டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின், சிறப்பு பொதுக்­குழு கூட்டம், 22ம் தேதி, நடை­பெற உள்­ளது. அதில், டாடா மோட்டார்ஸ் நிறு­வ­னத்தின் இயக்­குனர் பத­வியில் இருந்து, சைரஸ் மிஸ்­திரி நீக்­கப்­ப­டுவார் என, தெரி­கி­றது.இக்­கூட்­டத்தில், தனக்கு ஆத­ரவு தரு­மாறுக் கோரி, சைரஸ் மிஸ்­திரி, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு கடிதம் அனுப்­பி­உள்ளார்.
அதன் விபரம்:டாடா மோட்டார்ஸ், பாரம்­ப­ரிய கார்­க­ளையே தயா­ரிக்­கி­றது. தரம் மற்றும் சேவைகள் தொடர்­பான பிரச்­னை­களும் உள்­ளன. கடந்த நான்கு ஆண்­டு­களில், ஐந்து பன்­னாட்டு நிறு­வ­னங்கள், 50க்கும் மேற்­பட்ட புதிய கார்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளன. ஆனால், டாடா மோட்டர்ஸ், ‘போல்ட், ஜெஸ்ட்’ என்ற, இரு புதிய கார்­களை மட்­டுமே அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. ‘மான்ஸா, விஸ்டா, சபாரி ஸ்டார்ம்’ ஆகி­யவை, பழைய மாடல்­களின்
மேம்­பட்ட வடி­வங்­களே.நாம், இன்னும் பாரம்ப­ரி­ய­மான கார்­க­ளையே தயா­ரித்து வரு­கிறோம். அவற்­றுக்கு ஏரா­ள­மான சலு­கைகள் வழங்­கு­வதால், வருவாய் பாதிக்­கப்­பட்டு, சந்தை பங்­க­ளிப்பும், பிராண்டு மதிப்பும் குறைந்து வரு­கி­றது. பிரிட்­டனில், ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தயா­ரிப்பில், பிரச்­னைகள் உள்­ளன; அதே சமயம், ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­களும் உள்­ளன.இத்­த­கைய சூழலில், டாடா மோட்டார்ஸ், புதிய, மேம்­பட்ட தொழில்­நுட்­பத்தில் கார்­களை தயா­ரிக்க வேண்டும். நிறு­வ­னத்­திற்கு, பல சவால்கள் காத்­தி­ருக்­கின்­றன. சிறப்பு பொதுக்­குழு கூட்­டத்தில் எடுக்­கப்­படும் முடிவு, அந்­நி­று ­வ­னத்தின் எதிர்­கா­லத்தை நிர்­ண­யிக்கும்.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)