யு.பி.ஐ., செயலி மூலம் மியூச்­சுவல் பண்ட்!யு.பி.ஐ., செயலி மூலம் மியூச்­சுவல் பண்ட்! ... உங்கள் முத­லீ­டு­களின்  பலனை ஆய்வு செய்­யுங்கள் உங்கள் முத­லீ­டு­களின் பலனை ஆய்வு செய்­யுங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கிரெடிட் அறிக்­கைக்கு விண்­ணப்­பிக்­க­லாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
03:01

இந்த ஆண்­டுக்­கான நிதி செயல்­பா­டு­களில் கிரெடிட் அறிக்­கையை பெறு­வ­தையும் நீங்கள் குறித்து வைத்­துக்­கொள்­ளலாம். ஆம், இந்த ஆண்டு முதல் ஆண்­டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்­கையை அனைவரும் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். இதற்­கான உத்­த­ரவை கடந்த ஆண்டு செப்­டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி பிறப்­பித்­தது. இதன் படி, கிரெடிட் தகவல் நிறு­வ­னங்கள் வாடிக்­கை­யா­ளர்கள் கோரும் போது அவர்­க­ளு­டைய முழு கிரெடிட் அறிக்­கையை ஒரு முறை இல­வ­ச­மாக அளிக்க வேண்டும். ஜன­வரி முதல் டிசம்பர் மாதத்­திற்குள் ஒரு முறை இவ்­வாறு கடன் தகவல் அறிக்­கையை கோரிப்­பெ­றலாம்.
கடன் தகுதி அறிய கிரெடிட் அறிக்­கையில் ஒரு­வ­ரது கடன் வர­லாறு தொடர்­பான தக­வல்கள் அனைத்தும் இடம்­பெற்­றி­ருக்கும். ஒருவர் கட­னுக்­கான தவ­ணையை முறை­யாக செலுத்தி வந்­தி­ருக்­கி­றாரா? என்­பது போன்ற விப­ரங்­க­ளையும் இதன் மூலம் தெரிந்து கொள்­ளலாம். வங்­கிகள் கடன் தகு­தியை தீர்­மா­னிக்கும் போது மற்ற அம்­சங்­க­ளுடன் கடன் அறிக்­கை­யையும் பரி­சீ­லிக்­கின்­றன. சிபில், ஈக்­விபேக்ஸ், எக்ஸ்­பி­ரீயன் உள்­ளிட்ட கடன் தகவல் நிறு­வ­னங்­க­ளிடம் இருந்து வங்­கிகள் இந்த அறிக்­கையை பெறு­கின்­றன.
வாடிக்­கை­யா­ளர்­களும் இந்த அறிக்­கையை விண்­ணப்­பித்து பெறலாம். ஆனால், அதற்கு கட்­டணம் செலுத்த வேண்டும். எனினும், ஆண்­டுக்கு ஒரு முறை இந்த அறிக்கை கோரிக்­கையின் பேரில் இல­வ­ச­மாக வழங்­கப்­பட ரிசர்வ் வங்கி வழி செய்­துள்­ளது.தனி நபர்கள் இந்த அறிக்கை மூலம் தங்கள் கடன் தகு­தியை அறிந்து கொள்­ளலாம். பொது­வாக 300 முதல் 900 மதிப்பெண் வரை இவை அமை­கின்­றன. நல்ல கிரெடிட் மதிப்பெண் இருந்தால் கடன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
எப்­படி பெறு­வது?புதி­தாக கடன் கேட்டு விண்­ணப்­பிக்கும் போது வங்­கி­க­ளிடம் அளிக்­கப்­படும் கிரெடிட் அறிக்­கையில் இடம்­பெற்­றுள்ள தக­வல்­களை இல­வச அறிக்கை மூலம் வாடிக்­கை­யா­ளர்­களும் பெற முடியும். இதில் ஏதேனும் தவ­றுகள் இருந்தால் அவற்றை சரி செய்­யவும் அணு­கலாம். அறிக்­கையின் விசா­ரணை பகு­தியில், எந்த வங்­கிகள் எல்லாம் உங்கள் கடன் அறிக்­கையை கேட்டு பெற்­றுள்­ளன என தக­வ­லையும் தெரிந்து கொள்­ளலாம். கடன் அறிக்­கைக்­கான மதிப்­பீடு முறை நிறு­வ­னங்­க­ளுக்கு இடையே மாறு­ப­டு­வது போலவே அவற்றை பெற விண்­ணப்­பிக்கும் முறையும் மாறு­ப­டு­கி­றது. இதற்­கான வழி­மு­றை­களை நிறு­வ­னங்கள் தங்கள் இணை­ய­த­ளங்­களில் குறிப்­பிட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறி­வு­றுத்­தி­யுள்­ளது.
சிபில் வழங்கும் கடன் அறிக்­கையை அதன் இணை­ய­த­ளத்தில் உள்ள விண்­ணப்ப படி­வத்தை பதி­வி­றக்கம் செய்து விண்­ணப்­பிக்­கலாம். சில நேரங்­களில் மாதத்­த­வணை அல்­லது கடன் தொடர்­பான தவ­றான தக­வல்­களும் இடம்­பெற்­றி­ருக்­கலாம். இவற்றை கண்­ட­றிந்து சரி செய்­வது உங்கள் கடன் வர­லாற்­றுக்கு நல்­லது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)