பதிவு செய்த நாள்
16 ஜன2017
23:42
புதுடில்லி : இந்தியாவின் வாகனங்கள் ஏற்றுமதி, கடந்த ஆண்டில், 5 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, முன்னணி கார், இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவில், தொழிற்சாலைகள் அமைத்துள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை, அந்நிறுவனங்கள், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அதன்படி, 2016ல், மொத்த வாகனங்கள் ஏற்றுமதி, 34.34 லட்சமாக குறைந்துள்ளது. இது, 2015ல், 36.14 லட்சம் வாகனங்களாக இருந்தது. இதே காலத்தில், மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதி, 32.04 சதவீதம் குறைந்து, 4.24 லட்சத்தில் இருந்து, 2.88 லட்சமாக குறைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி, 24.60 லட்சத்தில் இருந்து, 22.94 லட்சமாக சரிவடைந்து உள்ளது. மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி, 10.96 சதவீதம் சரிவடைந்து, 22.25 லட்சத்தில் இருந்து, 19.81 லட்சமாக குறைந்து உள்ளது.
அதே சமயம், ஸ்கூட்டர் ஏற்றுமதி, 33.95 சதவீதம் உயர்ந்து, 2.19 லட்சத்தில் இருந்து, 2.94 லட்சமாக அதிகரித்துள்ளது. கார்கள் ஏற்றுமதி, 52.62 சதவீதம் அதிகரித்து, 1.02 லட்சத்தில் இருந்து, 1.56 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் கூறியதாவது: இந்திய மோட்டார் வாகனங்களுக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன. அந்நாடுகளின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் மந்தமாக இருந்தது. இதனால், இந்தியாவில் இருந்து, அந்நாடுகளுக்கான இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதி குறைந்தது. இதன் விளைவாக, கடந்த ஆண்டில், மொத்த வாகன ஏற்றுமதி, 5 சதவீதம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|