பதஞ்சலியால் பன்னாட்டு நிறுவனங்கள்; துாக்கமிழந்து தவிக்கின்றன: பாபா ராம்தேவ்பதஞ்சலியால் பன்னாட்டு நிறுவனங்கள்; துாக்கமிழந்து தவிக்கின்றன: பாபா ... ... புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் ...
ஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
06:04

புதுடில்லி : அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப்­பின் கொள்­கை­க­ளால் ஏற்­ப­டக் கூடிய தாக்­கம் குறித்து, அவ­ரி­டம் நேர­டி­யாக விளக்க, ‘நாஸ்­காம்’ எனப்­படும், தேசிய மென்­பொ­ருள் மற்­றும் சேவை நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு முடிவு செய்­துள்­ளது.
அமெ­ரிக்க அதி­ப­ருக்­கான தேர்­தல் பிரச்­சா­ரத்­தின்­போது, ‘இந்­தியா, சீனா போன்ற நாடு­க­ளால் பறி­போன உள்­நாட்டு வேலை­வாய்ப்­பு­கள், திரும்­பக் கொண்டு வரப்­படும்; வெளி­நாட்டு பணி­யா­ளர்­க­ளுக்­கான, ‘எச் 1பி’ விசா­வுக்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­படும்’ என, டொனால்டு டிரம்ப் தெரி­வித்­தி­ருந்­தார்.அவர், அமெ­ரிக்க அதி­ப­ராக நேற்று பொறுப்­பேற்­றதை அடுத்து, தேர்­தல் பிர­சா­ரத்­தில் தெரி­வித்த கொள்­கை­களை அமல்­ப­டுத்­து­வார் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இத­னால், அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளுக்­கும், அவற்­றுக்கு பணி­களை செய்து தரும், இந்­தி­யா­வின், பி.பி.ஓ., நிறு­வ­னங்­கள், மென்­பொ­ருள் சேவை­களை வழங்­கும், ஐ.டி., நிறு­வ­னங்­கள் ஆகி­யவை பாதிக்­கும் வாய்ப்பு உள்­ளது.
இது குறித்து, ‘நாஸ்­காம்’ தலை­வர் சந்­தி­ர­சே­கர் கூறி­ய­தா­வது: அமெ­ரிக்­கா­வில், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­கள், 4.11 லட்­சம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்ளன; அவற்­றில், 1.50 லட்­சம் நேரடி வேலை­வாய்ப்­பு­கள் ஆகும். அத்­து­டன், அமெ­ரிக்க அர­சுக்கு வரி செலுத்­து­வது, சமூக பாது­காப்பு திட்­டங்­க­ளுக்கு செல­வி­டு­வது உள்­ளிட்­ட­வற்­றின் மூலம், அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்­திற்­கும், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­கள் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்றன.
இந்­திய, ஐ.டி.,நிறு­வ­னங்­களின் சிறப்­பான பங்­க­ளிப்­பு­க­ளை­யும், அவற்­றின் பல்­வேறு பரி­மா­ணங்­க­ளை­யும், டொனால்டு டிரம்ப் அர­சில் அங்­கம் வகிக்­கும் புதி­ய­வர்­கள் முழு­மை­யாக அறி­யா­மல் இருக்­கக் கூடும்.‘அடுத்த ஆண்டு, ஐ.டி., துறை­யில், 10 லட்­சத்­திற்­கும் அதி­க­மான காலி பணி­யி­டங்­கள், நிரப்­பப்­ப­டா­மல் இருக்­கும்’ என, அமெ­ரிக்க அரசு ஏற்­க­னவே தெரி­வித்­துள்­ளது.அமெ­ரிக்­கா­வில்,‘ஸ்டெம்’ எனப்­படும், அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகி­யவை சார்ந்த வல்­லு­னர்­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ளது. வெளி­நாட்டு வல்­லு­னர்­கள் மூல­மா­கத்­தான், இந்த பற்­றாக்­குறை சரி­செய்­யப்­ப­டு­கிறது.
இந்­நி­லை­யில், அமெ­ரிக்க அர­சின் விசா கட்­டுப்­பா­டு­கள், அந்­நாட்டு நிறு­வ­னங்­க­ளை­யும் கடு­மை­யாக பாதிக்­கும். அவை, உள்­நாட்டு வல்­லு­னர்­களை அதிக ஊதி­யத்­தில் பணி­ய­மர்த்­து­வ­தால், அவற்­றின் செல­வி­னம் கூடும். இது­போன்ற பல்­வேறு அம்­சங்­கள் குறித்து, டொனால்டு டிரம்பை நேரில் சந்­தித்து, விரி­வாக விளக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதற்­காக, நாஸ்­காம் குழு, பிப்­ர­வரி அல்­லது மார்ச்­சில், அமெ­ரிக்க செல்ல முடிவு செய்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)