வீடு விற்பனை 30 சதவீதம் சரிவடையும்: ‘பிட்ச்’ மதிப்பீடுவீடு விற்பனை 30 சதவீதம் சரிவடையும்: ‘பிட்ச்’ மதிப்பீடு ... ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் ...
தங்க நகை­களின் சில்­லரை விற்­ப­னை­யில் பெரிய நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு உய­ரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2017
23:59

மும்பை : ‘மத்­திய அர­சின், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், தங்க நகை­களின் சில்­லரை விற்­ப­னை­யில், பெரிய நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு, 40 சத­வீ­த­மாக உய­ரும்’ என, உலக தங்க கவுன்­சில் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்: உல­கின் இரண்­டா­வது மிகப்­பெ­ரிய தங்க நகை சந்­தை­யாக, இந்­தியா திகழ்­கிறது. நகை வியா­பா­ரத்­தில், 4 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர் ஈடு­பட்­டுள்­ள­னர். அவர்­களில் பெரும்­பான்­மை­யா­னோர், தங்க நகை­களை ரொக்­கத்­தில் தான் விற்­பனை செய்­கின்­ற­னர். தங்க நகை விற்­ப­னை­யில், 70 சத­வீ­தம் ரொக்­கத்­தில் தான் நடை­பெ­று­கிறது.
வெளிப்படை தன்மை:சில்­லரை வியா­பா­ரி­கள், அர­சுக்கு வரி செலுத்­து­வதை தவிர்க்க, ரசீது இல்­லா­மல் நகை­களை விற்­கின்­ற­னர். பணக்­கா­ரர்­கள், வரு­மான வரித்­து­றைக்கு கணக்கு காட்­டா­மல் வைத்­துள்ள பணத்­தில், ரசீது இன்றி நகை­களை வாங்­கு­கின்­ற­னர்.இந்­நி­லை­யில், தங்­கம் இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்­டுள்ள, 10 சத­வீத சுங்க வரி கார­ண­மாக, சில ஆண்­டு­க­ளாக, இந்­தி­யா­வுக்கு தங்­கம் கடத்­து­வ­தும் அதி­க­ரித்­து உள்­ளது. கடந்த ஆண்டு, கடத்­தல்­கா­ரர்­கள், ஒரு அவுன்ஸ் தங்­கத்­தின் விலை­யில், 100 டாலர் வரை குறைத்து விற்­பனை செய்­த­னர். இத­னால், தங்­கம் இறக்­கு­மதி செய்­யும் நகை நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­பட்­டன.
இத்­த­கைய சூழ­லில் தான், பிர­த­மர் மோடி, கறுப்­புப் பணத்தை கட்­டுப்­ப­டுத்­த­வும், கள்ள நோட்டு புழக்­கத்தை ஒழிக்­க­வும், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை, 2016, நவ., 8ல் அறி­வித்­தார்.இதன் விளை­வாக, பணத் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்­துள்ளன. இத்­த­கைய ரொக்­க­மில்லா பரி­வர்த்­த­னை­கள் பெரு­கும் போது, கள்­ளச் சந்­தை­யில் தங்­கம் விற்­பனை செய்­வது பெரு­ம­ளவு குறைந்து விடும்.இத­னால், ஆப­ர­ணங்­கள் துறை மட்­டு­மின்றி, நகை வாங்­கு­வோ­ரும் பயன் பெறு­வர்.தங்க நகை வர்த்­த­கத்­தில் வெளிப்­ப­டைத் தன்மை இல்லை. இதுவே, இத்­து­றை­யின் உண்­மை­யான வளர்ச்­சிக்­கும் தடை­யாக உள்­ளது.
பிராண்டு நகைகள்:பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யின் தாக்­கத்­தால், தற்­போது, காசோலை, ‘இ – வாலட், கிரெ­டிட், டெபிட்’ கார்­டு­கள் போன்­றவை வாயி­லாக நகை வாங்­கு­வது அதி­க­ரித்­துள்­ளது.இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டம், ‘பிராண்டு’ தங்க நகை­க­ளுக்கு வர­வேற்பு பெருகி வரு­கிறது. இத­னால், டைட்­டன், பி.சி.ஜூவல்­லர், கீதாஞ்­சலி ஜெம்ஸ் போன்ற, அமைப்பு சார்ந்த நிறு­வ­னங்­களின், சந்தை பங்­க­ளிப்பு, 2015ல், 30 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது; இது, 2020ல், 40 சத­வீ­த­மாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.தங்க நகை விற்­ப­னை­யில், வெளிப்­ப­டைத் தன்மை அதி­க­ரித்து வரு­வது, பிராண்டு நகை­க­ளுக்கு பெருகி வரும் வர­வேற்பு, மின்­னணு பணப் பரி­வர்த்­தனை ஆகி­யவை, இந்த வளர்ச்­சிக்கு துணை புரி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)