பதிவு செய்த நாள்
21 பிப்2017
00:15
புதுடில்லி : மின் சாதனங்கள் துறையில் ஈடுபட்டு வரும், ஹேவல்ஸ் நிறுவனம், லாயிட் எலக்ட்ரிக் அண்ட் இன்ஜினியரிங் குழுமத்தின், நுகர்வோர் சாதனங்கள் பிரிவை கையகப்படுத்த உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் அனில் ராய் குப்தா கூறியதாவது: நிறுவனத்தின் இயக்குனர் குழு, லாயிட் குழுமத்தின் நுகர்வோர் சாதனங்கள் பிரிவை, 1,600 கோடி ரூபாயில் கையகப்படுத்த ஒப்புதல் வழங்கிஉள்ளது. இதன் மூலம், ஹேவல்ஸ் தயாரிப்புகள், அனைத்து இல்லங்களிலும் பரவலாக அதிகரிக்கும். இந்த நடவடிக்கை, அடுத்த இரு மாதங்களில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நுகர்வோர் சாதனங்கள் பிரிவில், ஹேவல்ஸ் சிறப்பான வளர்ச்சி காணும்.இவ்வாறு அவர் கூறினார்.
லாயிட் எலக்ட்ரிக் அண்ட் இன்ஜினியரிங் குழுமத்தின், நுகர்வோர் சாதனங்கள் பிரிவு, ‘டிவி, வாஷிங் மிஷின், ஏர்கன்டிஷனர்’ உள்ளிட்ட, வீட்டு உபயோக சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இப்பிரிவை கையகப்படுத்துவதன் மூலம், ஹேவல்ஸ் நிறுவனத்தின் கீழ், லாயிட் தயாரிப்புகள் அனைத்தும் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|