வாகன கடன் சந்தை ரூ.2.60 லட்சம் கோடி­யாக உயரும்வாகன கடன் சந்தை ரூ.2.60 லட்சம் கோடி­யாக உயரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.91 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.91 ...
‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் தோல்­வியை தவிர்க்க மத்­திய அரசு ஆத­ர­வ­ளிப்­பது அவ­சியம்: ‘பிக்கி’ ஆய்­வ­றிக்கை வெளி­யீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
00:42

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் தோல்­வியை தவிர்க்க, மத்­திய அரசு, மேலும் பல ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு, ஆத­ர­வ­ளிக்க வேண்டும்’ என, ‘பிக்கி’ எனப்­படும், இந்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
இந்த அமைப்பு, பிரிட்டன் மற்றும் இந்­தி­யாவில் உள்ள, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் செயல்­பா­டுகள் குறித்த ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.
அதன் விபரம்: வலை­த­ளங்கள் மூலம், புது­மை­யான வர்த்­த­கங்­களில் ஈடு­படும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், பல்­வேறு சவால்­களை சந்­தித்து வரு­கின்­றன.
ஊக்கச்சலுகைகள் ஒரு ஸ்டார்ட் அப் நிறு­வனம், முத­லீ­டு­களை திரட்டி, பணிக்கு ஆட்­களை அமர்த்தி, வர்த்­த­கத்தை துவக்கும் வரை, பல­த­ரப்­பட்ட பிரச்­னை­களை எதிர்­கொள்­கி­றது. சர்­வ­தேச ஸ்டார்ட் அப் மையங்­களில் ஒன்­றாக விளங்கும் லண்­டனில், ஒரு ஸ்டார்ட் அப் நிறு­வனம் தோல்வி அடை­வதில் ஆச்­ச­ரியம் இல்லை. ஆனால், இந்­தியா போன்ற நாடு­களில், எத்­த­கைய இடர்­பா­டு­க­ளையும் துணி­வுடன் எதிர்­கொள்ளும் திறன் பெற்ற தொழில்­மு­னைவோர், தோல்வி அடை­வது ஏற்­பு­டை­ய­தல்ல.
அத்­த­கைய தோல்­வி­க­ளுக்­கான கார­ணங்­க­ளையும், வெற்­றிக்­கான தடை­க­ளையும் ஆராய்ந்து, அவற்றை களைய வேண்டும். மத்­திய அரசு, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் தன்­மையை ஆய்வு செய்து, அத­ன­டிப்­ப­டையில், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஊக்­கச்­ச­லு­கை­களை வழங்­கலாம். இதன் மூலம், சிறப்­பான வர்த்­தக வாய்ப்­புள்ள திட்­டங்­களை கைவசம் வைத்­தி­ருந்தும், முத­லீ­டின்றி தவிக்கும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு விடிவு பிறக்கும். கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து, பொருட்­களை கொள்­முதல் செய்­வதன் வாயி­லாக, சந்தை வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி தரலாம்.
மத்­திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்­தியா’ வலை­த­ளத்தில் உள்ள, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் பொருட்கள், சேவைகள் ஆகி­ய­வற்றின் கொள்­மு­தலை ஊக்­கு­விக்க, நட­வடிக்கை எடுக்­கலாம்.தொழில் முனைவோர், நவீன தொழில்­நுட்­பங்­களை பின்­பற்றி, தொழிலில் வெற்றி பெறு­வ­தற்கு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி தர வேண்டும்.
புதுமையும், கண்டுபிடிப்பும்இதற்கு, தொழில் முனைவோர் குழுக்­களை, வெளி­நா­டு­க­ளுக்கு அழைத்துச் சென்று, அங்­குள்ள, நவீன தொழில்­நுட்ப ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், ஆய்வுக் கூடங்கள் ஆகி­ய­வற்றின் செயல்­பா­டு­களை, நேரில் காண ஏற்­பாடு செய்­யலாம். இதனால், இந்­திய நிறு­வ­னங்கள், வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து வர்த்­தகம் புரிய, வாய்ப்பு கிடைக்கும்.புது­மையும், கண்­டு­பி­டிப்பும் இணைந்த ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், புதிய இந்­தி­யாவின் முது­கெ­லும்­பா­கவும், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கும் மையங்­க­ளா­கவும் உரு­வெ­டுத்து வரு­கின்­றன. இதற்கு, ‘மேக் இன் இந்­தியா, டிஜிட்டல் இந்­தியா, ஸ்டார்ட் அப் இந்­தியா’ உள்­ளிட்ட, பல திட்­டங்கள் துணை புரி­கின்­றன. இத்­த­கைய சூழலில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் தோல்­வியை குறைக்க, நட­வ­டிக்கை எடுப்­பது மிகவும் அவ­சியம். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)