‘பாரத் கியூஆர் கோடு’ வசதி!‘பாரத் கியூஆர் கோடு’ வசதி! ... இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும் இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்­திய ஐ.டி., நிறு­வ­னங்­களின் வளர்ச்சி பாதிக்­குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
00:04

ஐ.டி., துறை நிறு­வ­னங்­களின் அமைப்­பான நாஸ்காம், அடுத்த நிதி­யாண்­டுக்­கான வளர்ச்சி கணிப்பை வெளி­யி­டாமல் தள்ளி வைத்­தி­ருப்­பது, இத்­துறை வளர்ச்சி தொடர்­பான கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.
அண்மை கால­மா­கவே இந்­திய ஐ.டி., துறை சவால்­க­ளையும், சோத­னை­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கி­றது. பிரெக்ஸிட் போன்ற சர்­வ­தேச நிகழ்­வு­களும் பாதிப்பை ஏற்­ப­டுத்­திய நிலையில், இத்­துறை அமைப்­பான நாஸ்காம், அண்­மையில் அடுத்த ஆண்­டுக்­கான வளர்ச்சி கணிப்பை வெளி­யி­டாமல் தள்ளி வைத்­தி­ருக்­கி­றது. இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­களின் மிகப்­பெ­ரிய சந்­தை­யான அமெ­ரிக்­காவில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்றம், பொரு­ளா­தார சூழல் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக, நாஸ்காம் வளர்ச்சி கணிப்பு அறிக்­கையை அடுத்த காலாண்டில் வெளி­யி­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளது.
அறிக்கை தாமதம்நாஸ்காம் வளர்ச்சி கணிப்பு அறிக்­கையை வெளி­யி­டாமல் தள்ளி வைப்­பது, இதுவே முதல் முறை­யாகும். ஐ.டி., துறை நிறு­வ­னங்­களின் நலன்­க­ளுக்­காக குரல் கொடுப்­பது, கொள்கை முடி­வு­களை வகுக்க அழுத்தம் கொடுப்­பது போன்­ற­வற்றில் கவனம் செலுத்தி வரும் நாஸ்காம், ஆண்­டு­தோறும், அடுத்த நிதி­யாண்­டுக்­கான வளர்ச்சி கணிப்பை விரி­வான அறிக்­கை­யாக வெளி­யிட்டு, வழி­காட்­டு­வது வழக்கம். எனினும், 2017 – 18ம் ஆண்­டுக்­கான வளர்ச்சி கணிப்பு அறிக்­கையை வெளி­யி­டு­வதை அடுத்த காலாண்­டிற்கு தள்ளி வைத்­துள்­ள­தாக, நாஸ்காம் தெரி­வித்­துள்­ளது.
மும்­பையில் நடை­பெற்ற நாஸ்காம் மாநாட்டை ஒட்டி பேசிய போது, இந்த தக­வலை தெரி­வித்த நாஸ்காம் சேர்மன் சி.பி.குர்­னானி, அர­சியல் சூழல் மற்றும் டிஜிட்டல் மாற்­றத்தால் ஐ.டி., துறையின் தற்­போ­தைய நிலை கார­ண­மாக, அடுத்த காலாண்டு வரை அறிக்­கையை தள்ளி வைத்­துள்­ள­தாக தெரி­வித்தார். தற்­போ­தைய நிலையில் புதி­தாக தெரி­விக்க எதுவும் இல்லை என்றும், ஒட்­டு­மொத்த பொரு­ளா­தார சூழல், ரூபாயின் ஏற்ற இறக்கம், அமெ­ரிக்­காவில் புதிய அரசால் ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழலால் நிச்­ச­ய­மற்­றத்­தன்மை இருப்­ப­தாக, நாஸ்காம் தலைவர் சந்­தி­ர­சேகர் தெரி­வித்தார்.
தொழில்­நுட்­பத்தின் தாக்­கத்தால், இதற்கு முன் இல்­லாத அளவு வேகத்தில் மாற்றம் ஏற்­பட்டு வரு­வ­தாக, குர்­னானி தெரி­வித்தார். இந்த சூழலில் வளர்ச்சி கணிப்பு பற்றி தீர்­மா­னிக்க மேலும் தக­வல்கள் தேவை­யென, அவர் கூறினார்.
வேலை­வாய்ப்பு குறைவு நடப்பு நிதி­யாண்டை பொருத்­த­வரை, ஐ.டி., துறை வளர்ச்சி, 8.6 சத­வீ­த­மாக இருக்கும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முதலில் இது, 10 முதல், 12 சத­வீ­த­மாக இருக்கும் எனத் தெரி­விக்­கப்­பட்டு, பின்னர் நவம்பர் மாதம் வெளி­யான கணிப்பில், 8 முதல், 10 சத­வீ­த­மாக வளர்ச்சி இருக்கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த கணிப்­பிற்கு ஏற்ப வளர்ச்சி விகிதம் அமைந்­தி­ருந்­தாலும், வேலை வாய்ப்பு வளர்ச்சி, 5 சத­வீ­த­மா­கவே இருப்­பது தெரிய வந்­துள்­ளது. வருவாய் வளர்ச்­சிக்கும், வேலை­வாய்ப்பு வளர்ச்­சிக்­கு­மான இடை­வெளி தொடரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­திய, ஐ.டி., துறை துவக்­கத்தில் இருந்தே பல்­வேறு சவால்­களை சந்­தித்து வந்­துள்­ளது என்­றாலும், தற்­போ­தைய சூழலில் பல­மு­னை­களில் தீவி­ர­மான சவால்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். முதல் சவால், டிஜிட்டல் தொழில்­நுட்ப போக்கு கார­ண­மாக சர்­வ­தேச நிறு­வ­னங்கள் செயல்­படும் விதத்தில், பெரும் மாற்றம் நிகழ்ந்து வரு­கி­றது. வழக்­க­மாக பன்­னாட்டு நிறு­வ­னங்கள், இந்­திய நிறு­வ­னங்­க­ளிடம் மென்­பொருள் உரு­வாக்கும் பணி­களை ஒப்­ப­டைக்கும். ஆனால், சில நிறு­வ­னங்கள் இப்­போது மிகவும் எளி­மை­யான மென்­பொ­ருட்கள் மற்றும் மிகவும் முக்­கி­ய­மான மென்­பொ­ருட்­களை தாங்­களே உரு­வாக்கி கொள்ளத் துவங்­கி­யுள்­ளன. இரண்­டா­வ­தாக, ஐ.டி., துறையில் வெகு­வே­க­மாக தானி­யங்­கி­ம­ய­மாக்கல் நிகழ்ந்து வரு­வதால், வேலை­வாய்ப்­புகள் குறைந்­துள்­ளன.
அமெ­ரிக்க சிக்கல்இதே போல மென்­பொ­ருட்­க­ளுக்­கான மிகப்­பெ­ரிய சந்­தை­யான அமெ­ரிக்­காவில் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்றம், வெளி­நாடு­க­ளுக்கு பணி­களை ஒப்­ப­டைப்­பது, எச்1பி விசா வழங்­கு­வது ஆகி­ய­வற்றில் புதிய கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இது போன்ற சவால்கள் இந்­திய, ஐ.டி., துறை நிறு­வ­னங்­களின் வளர்ச்சி வேகத்தை பாதிப்­ப­தாக அமைந்­துள்­ளது. எனினும், இந்த சூழ­லுக்கு ஏற்ப முன்­னணி ஐ.டி., நிறு­வ­னங்கள், தங்கள் செயல்­பாடு­களை மாற்றி அமைத்­துக்­கொள்ளும் பணியை ஏற்­க­னவே துவக்­கி­யி­ருக்­கின்­றன. வரும் மாதங்­களில் நிறு­வ­னங்­களின் செயல்­பாடு மற்றும் அவற்றின் உத்­தி­களுக்கு ஏற்­பவே வளர்ச்சி விகி­தத்தின் போக்கு அமையும் என, கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)