பதிவு செய்த நாள்
02 மார்2017
00:04
மும்பை : ‘பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில், ‘டிஜிட்டல்’ விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்யும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
டென்ட்சு ஏஜிஸ் நெட்வொர்க் இந்திய நிறுவனம், டிஜிட்டல் விளம்பர செலவினங்கள் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: நிறுவனங்களின் மொத்த விளம்பர செலவில், டிஜிட்டல் விளம்பரங்களின் பங்கு, தற்போது, 12 சதவீதமாக உள்ளது; இது, 2020ல், 24 சதவீதமாக உயரும். இதே காலத்தில், டிஜிட்டல் விளம்பரங்கள் வாயிலான வருவாய், ஆண்டுக்கு, சராசரியாக, 37 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,825 கோடி ரூபாயில் இருந்து, 23,795 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
இணைய பயன்பாடுநாட்டில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தகவல் பரிவர்த்தனை கட்டணம் குறைந்துள்ளதால், இணைய பயன்பாடும் பெருகி வருகிறது. ‘பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்’ போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரும் அதிகரித்துள்ளனர். இதனால், நிறுவனங்கள், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. சமூக வலைதளங்களில், விளம்பரங்களுக்காக, 1,911 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இது, டிஜிட்டல் விளம்பர செலவினத்தில்,28 சதவீதமாகும். கூகுள் போன்ற தேடல் பொறி வலைதளங்களில், விளம்பர செலவினம், 1,843 கோடி ரூபாயாக உள்ளது.
மின்னணு வர்த்தகம்இதர டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் வீடியோ விளம்பரங்களுக்கு, முறையே, 1,345 கோடி ரூபாய் மற்றும் 1,249 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. டிஜிட்டல் விளம்பரங்களுக்காக, மின்னணு வர்த்தக நிறுவனங்கள், 1,309 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. அடுத்த இடங்களில், நுகர்பொருள், தொலை தொடர்பு, வங்கி மற்றும் நிதிச் சேவை துறைகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|