பி.என்.பி.பரிபாஸ் அசெட் ‘பேலன்ஸ்டு பண்டு’ அறி­முகம்பி.என்.பி.பரிபாஸ் அசெட் ‘பேலன்ஸ்டு பண்டு’ அறி­முகம் ... கனவு பெரிது; செயல் சிறிது; திட்­ட­மி­டு­வதில் பின்­தங்­கி­யுள்ள இந்­தி­யர்கள் கனவு பெரிது; செயல் சிறிது; திட்­ட­மி­டு­வதில் பின்­தங்­கி­யுள்ள ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முடிவுக்கு வரும் நிதி­யாண்டு... முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நம்­பிக்கை தருமா? ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
03:17

பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்கள் தொடர்ந்து, இந்­திய சந்­தையில் முத­லீடு செய்து வரு­வது, சந்­தைக்கு ஒரு நிலை­யான தன்­மையை தந்து வரு­கி­றது.
உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளான, பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், தொடர்ந்து பங்­கு­களை இந்த வாரமும் ரூ.2,589 கோடிக்கு விற்­றனர். அதே­ச­மயம், எப்.ஐ.ஐ., முத­லீடு ரூ.3,714 கோடி­யாக இருந்­தது. பங்­கு­களை, எப்.ஐ.ஐ., நிறு­வ­னங்கள் அதிகம் வாங்­கியும், சந்தை சென்ற வாரத்­தை­விட, நிப்­டியில் 0.57 சத­வீ­தமும், சென்­செக்ஸில் 0.77 சத­வீ­தமும் குறை­வா­கவே முடிந்­தது. தொடர்ந்து எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்கள், இந்­திய பங்­கு­களை வாங்கிக் குவித்தால், இந்­திய முத­லீட்­டா­ளர்­களும் வாங்க வேண்­டிய கட்­டா­யத்­திற்கு தள்­ளப்­ப­டுவர். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
வரும் வாரத்தில், உலகச் சந்­தைகள், அமெ­ரிக்­காவில் நிலவும் ஒபா­மாகேர் என்ற மருத்­துவ காப்பு திட்டம் சார்ந்த அர­சியல் நகர்­வு­களை கூர்ந்து கவ­னிக்கும். இந்த திட்டம் அகற்­றப்­பட வேண்டும் என்ற, ட்ரம்ப் அரசின் நோக்கு நிறை­வேறத் தவ­றினால், சந்­தையில் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாதிப்­புகள் ஏராளம். சந்­தையில் இவற்றின் தாக்கம் போகப் போகத்தான் தெரியும்.
கேள்­விக்­கு­றிஅமெ­ரிக்க மக்கள் பல­ருக்கு, இந்த திட்டம் கொடுக்கும் மருத்­துவ வச­தி­களை திரும்ப பெற திட்­ட­மிட்டே, ட்ரம்ப் மாற்­றங்­களை கொண்டு வரு­கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால், பல அமெ­ரிக்­கர்கள் பாதிப்­புக்கு உள்­ளா­வார்கள். உல­க­ளவில், மருந்து உற்­பத்தி தொழிலும் பின்­ன­டை­வு­களை சந்­திக்கும் என்ற அச்சம் நில­வு­கி­றது. இந்த சர்ச்­சையில் முடிவு எப்­படி ஏற்­படும் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.
அண்­மையில் வெளி­வந்த, இந்­திய ஏற்­று­மதி சார்ந்த புள்­ளி­வி­ப­ரங்கள் மிகவும் உற்­சாகம் ஊட்டும் வகையில் அமைந்­தன. தொடர்ந்து மார்ச் மாதம் வரும் எண்கள், பொரு­ளா­தார திருப்­பத்தின் வேகத்தை தெளி­வு­ப­டுத்தும். வரி வசூல் சார்ந்து வெளி­வந்த புள்­ளி­வி­பரங்கள், சற்றே மந்த நிலையை உணர்த்­தி­னாலும், அரசு தொடர்ந்து வரி வசூலை நிலை­நாட்ட தொடர்­மு­யற்­சிகள் மேற்கொண்டு வரு­கி­றது.
ஏற்­று­ம­தியை கூட்­டு­வதும், வரி வசூலை பெருக்­கு­வதும் மோடி அரசின் பொரு­ளா­தார சீர­மைப்பின் முக்­கிய நகர்­வுகள். இதில் அரசு வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த முயற்­சி­களின் வெற்றி, நிதி பற்­றாக்­கு­றையை திட்­ட­மிட்­ட­படி கட்­டுப்­ப­டுத்த, அர­சுக்கு அவ­சியம். கடந்த வார சந்­தையின் முக்­கிய நிகழ்­வாக, டிமார்ட் நிறு­வனம் வெளி­யிட்ட பங்கின் பட்­டி­ய­லி­டு­தலை சொல்­லலாம். முதல்நாள் அன்றே இரு­ம­டங்கு விலை உயர்ந்த இந்த பங்கு, இந்­தி­யாவின் முக்­கிய முத­லீட்­டா­ள­ரான ராதா­கிஷன் தமானி அவர்­களால் நிறு­வப்­பட்­டது.
இந்த பங்கு வெளி­யீட்டின் அபார வெற்றி, சந்­தையில் சிறந்த பங்­கு­களை வாங்க இருக்கும் அசா­தா­ரண மோகத்­தையே வெளிக்­காட்­டு­கி­றது. இதற்கு முத­லீட்­டா­ளர்கள் ஆர்வம் முக்­கிய காரணம் என்­றாலும், நிதி நிறு­வ­னங்கள் கொடுக்கும் முத­லீட்டு கடன்­களும் முக்­கிய காரணம் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்து பல நிறு­வ­னங்கள் தங்கள் பங்­கு­களை சந்­தை­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு டிமார்ட் பங்கு வெளி­யீடு ஒரு திருப்பு முனை என்றே சொல்ல வேண்டும்.
நம்­பிக்­கைஇந்த வாரம், நிதி­யாண்டின் இறுதி வாரம். இந்த காலத்தில், பரஸ்­பர நிதிகள் தங்கள் திட்­டங்­களின் மதிப்பைக் கூட்டும் வகையில் முத­லீ­டு­களை அமைப்­பது வழக்கம். எப்.­அண்ட்.ஓ.,வின் முடிவும் சேர்ந்து வரு­வதால் சந்­தையில் ஏற்ற நகர்வு ஏற்­பட வாய்ப்­புக்கள் அதிகம். இறக்க ஏற்­றங்கள் நிறைந்த நிதி­யாண்டு முடி­வுக்கு வரு­வது முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஆறு­தலும் நம்­பிக்­கையும் கொடுக்கும் என்­பது உறுதி.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)