முடிவுக்கு வரும் நிதி­யாண்டு... முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நம்­பிக்கை தருமா? ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்முடிவுக்கு வரும் நிதி­யாண்டு... முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நம்­பிக்கை தருமா? ... ... இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கனவு பெரிது; செயல் சிறிது; திட்­ட­மி­டு­வதில் பின்­தங்­கி­யுள்ள இந்­தி­யர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
03:18

மும்பை : இந்­தி­யர்­க­ளுக்கு, வள­மான வாழ்க்கை குறித்து ஏரா­ள­மான கன­வுகள் இருந்­தாலும், அவற்றை நன­வாக்­கு­வ­தற்­கான நிதி வளத்தை திட்­ட­மிட்டு பெருக்­கு­வதில் அவர்கள் மிகவும் பின்­தங்­கி­யுள்­ள­தாக, ஆய்­வொன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.
அவிவா லைப் இன்­சூரன்ஸ் நிறு­வனம், இந்­தி­யர்கள் எவ்­வாறு தங்கள் நிதி வளத்தை திட்­ட­மிட்டு செயல்­ப­டுத்­து­கின்­றனர் என்­பது குறித்து, நாட்டின், 8 முக்­கிய நக­ரங்­களில், ஆய்வு மேற்­கொண்­டது. இதற்கு, மக்­களின், வருங்­கால வாழ்க்கை குறித்த கனவும், அதை நன­வாக்க அவர்கள் எத்­த­கைய முறையில் நிதி­யா­தா­ரத்தை பெருக்க முயற்சி மேற்­கொள்வர் என்ற இரு அம்­சங்கள் அள­வீ­டாக எடுத்துக் கொள்­ளப்­பட்­டன.
அவற்றின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் விபரம்: உல­க­ளவில், பல்­வேறு துறை­களில் இந்­தியா வேக­மாக முன்­னேறி வரு­கி­றது. அதில் எந்த ஐயமும் இல்லை. அதே­ச­மயம், இந்­தி­யர்கள், தங்கள் எதிர்­கால வாழ்க்கை குறித்து கன­வுக்கு ஏற்ப, தங்கள் நிதி செயல்­பா­டு­களை அமைத்துக் கொள்­வதில் மிகவும் பின்­தங்­கி­யுள்­ளனர். இதற்கு, மக்­க­ளிடம் நிதி, முத­லீடு உள்­ளிட்­டவை சார்ந்த கல்­வி­ய­றிவு மிகக் குறை­வாக உள்­ளது தான் முக்­கிய காரணம்.
ஆய்வில் பங்­கேற்ற பெரும்­பா­லா­னோ­ருக்கு, தங்கள் வாழ்கை லட்­சி­யத்தை அடைய, எத்­த­கைய முறையில், நிதியை நிர்­வ­கிக்க வேண்டும் என, தெரி­ய­வில்லை. அதே­ச­மயம், 25 – 29 வய­துள்­ளோ­ருக்கு, முத­லீ­டுகள் குறித்த விழிப்­பு­ணர்வு உள்­ளது. திட்­ட­மிட்டு நிதியை பரா­ம­ரிப்­பதில், அவர்­களின் பங்கு, ஒட்­டு­மொத்த பங்­கேற்­பா­ளர்­களின் மதிப்­பீட்டை விட, 25 சத­வீதம் அதி­க­மாக உள்­ளது.
நிதியை திட்­ட­மி­டு­வதில், பெண்கள், ஆண்­களை விஞ்சி நிற்­கின்­றனர். குழந்­தைகள் உள்ள தம்­ப­தி­யரை விட, குழந்­தைகள் இல்­லாத தம்­ப­தியர், நிதி நிர்­வா­கத்தில் சிறப்­பாக செயல்­ப­டு­கின்­றனர்.அதிக வருவாய் உள்ளோர் தான், திட்­ட­மிட்டு செயல்­பட்டு, நிதி வளத்தை பெருக்கிக் கொள்­வ­தாக, பொது­வான கருத்து உள்­ளது. ஆனால், இந்த ஆய்வில், அவ்­வாறு இல்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதி­க­மாக சம்­பா­திப்போர் கூட, நிதியை திட்­ட­மி­டு­வதில் சரி­வர செயல்­ப­டாமல் உள்­ளனர். அவர்­களின் பங்கு, திட்­ட­மிட்டு நிதி செயல்­பா­டு­களை வகுப்­போ­ருடன் ஒப்­பி­டு­கையில், 5 சத­வீதம் குறை­வாக உள்­ளது. இந்த ஆய்வில், வட மாநிலங்­களில் வசிப்­போரை விட, தென்­ மாநிலங்களில் உள்ளோர், நிதி நிர்­வா­கத்தில் மேம்­பட்டு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
எதிர்­கால வாழ்க்­கையை வள­மாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற பெரிய கனவு, எல்­லோ­ருக்கும் உள்­ளது. அதை நிறை­வேற்­று­வ­தற்­கான அடித்­த­ளத்தை வலு­வாக அமைத்துக் கொள்­வது அவ­சியம். அதற்கு, ஒவ்­வொ­ரு­வரும், தங்கள் நிதி­யா­தா­ரத்தை பெருக்க, திட்­ட­மிட்டு செயல்­பட வேண்டும். அத்­த­கைய முயற்சி, அவர்­களின் வருங்­கால கனவை நன­வாக்கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)