பதிவு செய்த நாள்
28 மார்2017
02:14
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், ஏப்., – பிப்., வரையிலான காலத்தில், ஸ்கூட்டர் விற்பனையில், ஹீரோ மோட்டார் கார்ப்., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ‘நம்பர் – 2’ இடத்தை பிடித்துள்ளது.
டி.வி.எஸ்., ஸ்கூட்டர் விற்பனை, 11 மாத காலத்தில், 5.07 சதவீதம் அதிகரித்து, 7,43,838 ஆக உள்ளது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலத்தில், 7,07,884 ஆக இருந்தது. இதன் மூலம், இந்நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையில், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.அதே சமயம், இரண்டாவது இடத்தில் இருந்த, ஹீரோ மோட்டா கார்ப்., ஸ்கூட்டர் விற்பனை, இதே காலத்தில், 1.64 சதவீதம் குறைந்து, 7,31,967லிருந்து, 7,19,987 ஆக சரிவடைந்து, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. நான்காவது இடத்தில், யமஹா; ஐந்தாவது இடத்தில், சுசூகி ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனத்தின், ஸ்கூட்டர் விற்பனை, 15.32 சதவீதம் ஏற்றம் கண்டு, 25,44,872லிருந்து, 29,34,794 ஆக உயர்ந்து, முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|