உடனுக்குடன் நிறுவன தகவல்கள் மும்பை பங்கு சந்தையில் அறிமுகம்உடனுக்குடன் நிறுவன தகவல்கள் மும்பை பங்கு சந்தையில் அறிமுகம் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.55 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.55 ...
‘ஏழை இந்தியா எனக்கு தேவையில்லை’ ; நிறுவனர் ஆணவத்தால் மதிப்பிழந்த ‘ஸ்நாப்சாட்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
04:13

புதுடில்லி : ‘இந்­தியா, ஸ்பெ­யின் போன்ற ஏழை நாடு­களில், என் மொபைல் ­போன் ‘ஆப்’ வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்த விருப்­ப­மில்லை’ என, ‘ஸ்நாப்­சாட்’ நிறு­வ­ன­ரின் ஆணவ பேச்சு, இந்­திய மொபைல் ­போன் உல­கில், கடும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, 21 வயது இளை­ஞர் இவான் தாமஸ் சீகல், 2011ல், மொபைல் ­போ­னில் படங்­கள், வீடியோ, தக­வல்­கள் உள்­ளிட்­ட­வற்றை மிக விரை­வாக பகிர்ந்து கொள்­ளும், ஸ்நாப்­சாட் என்ற, ‘ஆப்’பை வெளி­யிட்­டார்.ஒரு வீடி­யோவை பதி­வி­றக்கி பார்த்த பின், மாய­மாக மறைந்து விடும் தொழில்­நுட்­பம் ­தான் இந்த, ‘ஆப்’பின் சிறப்­பம்­சம். மொபைல்­போன் நினை­வ­கத்தை ஆக்­கிர­மிக்­கா­மல், அதே­ ச­ம­யம், பார்த்த அந்­த­ரங்க படங்­கள் உடனே அழிந்து விடு­வ­தால், பாது­காப்­பான இந்த அப்­ளி­கே­ஷனை, கோடிக்­க­ணக்­கா­னோர் பதி­வி­றக்­கி­னர். குறு­கிய காலத்­தில், 16 கோடி பேர், தின­மும் பயன்­ப­டுத்­தக் கூடிய அள­விற்கு ஸ்நாப்­சாட் வளர்ந்­தது.
இந்­தி­யா­வில் மட்­டும், 40 லட்­சத்­திற்கும் அதி­க­மா­னோர், இந்த அப்­ளி­கே­ஷனை பயன்­ப­டுத்தி வந்­த­னர். இந்­நி­லை­யில், ‘ஸ்நாப்­சாட், பணக்­கா­ரர்­க­ளுக்கு மட்­டுமே உரு­வாக்­கப்­பட்­டது. அத­னால், இந்­தியா, ஸ்பெ­யின் போன்ற ஏழை நாடு­களில் வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்த விரும்­ப­வில்லை’ என, 2015 செப்டம்பரில், சீகல் கூறி­யதை, ஸ்நாப்­சாட் முன்­னாள் அதி­காரி, அந்­தோணி பாம்­பி­லி­யானோ தற்­போது ஒரு பேட்­டி­யில் தெரி­வித்­தார். இதை அடுத்து, சமூக வலை­த­ளங்­களில், சீக­லுக்கு எதி­ராக, கடும் கண்­ட­னக் கணை­கள் பாய்ந்­தன. ‘அவர் மன்­னிப்பு கேட்­கும் வரை, ஸ்நாப்­சாட் பயன்­ப­டுத்­தப் போவ­தில்லை’ என, லட்­சக்­க­ணக்­கான இந்­தி­யர்­கள், ஸ்நாப் சாட், ‘ஆப்’பை, மொபைல் ­போ­னில் இருந்து அகற்­றி­னர்.
ஏரா­ள­மா­னோர், ஸ்நாப்­சாட் தரத்தை குறைத்­த­தால், ஒரே நாளில், ஆண்ட்­ராய்டு பிளேஸ்­டோ­ரில், அதன் நான்கு நட்­சத்­திர தரக் குறி­யீடு, ஒன்­றாக குறைந்­தது. இத­னி­டையே, இந்­தி­யாவை தாழ்த்­திப் பேசி­ய­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டை, சீகல் மறுத்­துள்­ளார். நெட்­டி­சன்­களின் ‘டிரென்­டிங்’கில், இந்த விவ­கா­ரம் தான் முக்­கிய இடத்தை பிடித்­துள்­ளது.

சில சமூக வலை­தள பதி­வு­கள்* ஸ்நாப்­சாட் எதிர்ப்­பில், இந்து, முஸ்­லிம், சீக்­கி­யர், கிறிஸ்­த­வர் என, யாரை­யும் பிரித்து பார்க்க முடி­ய­வில்லை. எங்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­தி­ய­தற்கு நன்றி* நான் ஸ்நாப்­சாட் அடிமை. ஆனால், அதை விட, என் தேசத்தை நேசிக்­கி­றேன். இந்­தி­யர்­கள் தய­வின்றி நீ எப்­படி சம்­பா­திக்க முடி­யும் பார்க்­க­லாம்?* ஸ்நாப்­சாட் சகாப்­தம் முடிந்­தது. பாவம் இவான் சீகல் * நான்­கில் மூன்று பங்கு இந்­தி­யர்­களை நிறு­வ­னத்­தில் வைத்­துள்ள சீகல், ஏன் இப்­படி முட்­டாள்­த­ன­மாக பேசி­னார்.
பழிக்­கு பழிஇந்­தி­யா­வைச் சேர்ந்த கணினி நாச­கா­ரர்­கள், கடந்த ஆண்டு, ஸ்நாப்­சாட் வலை­த­ளத்­தில் ஊடு­ருவி கைப்­பற்­றிய, 17 லட்­சம் பய­னா­ளி­களின் விப­ரத்தை, பழிக்­குப் பழி­யாக, தற்­போது வெளி­யிட்­டுள்­ள­னர்.
ஸ்நாப்­டீல் புலம்­பல்மொபைல் ­போன் பய­னா­ளி­கள் பலர், ஸ்நாப்­சாட் ‘ஆப்’பை, அழிக்க நினைத்து, தவ­று­த­லாக ஸ்நாப்­டீல் ‘ஆப்’பை அகற்றிவிட்­ட­தாக, அந்­நி­று­வ­னம் புலம்­பி­யுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)