ரூ.1.24 லட்சம் கோடி பிரீமியம் எல்.ஐ.சி., நிறுவனம் வசூல்ரூ.1.24 லட்சம் கோடி பிரீமியம் எல்.ஐ.சி., நிறுவனம் வசூல் ... இணைப்பு – கையகப்படுத்தல் நடவடிக்கை; 1,790 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து இணைப்பு – கையகப்படுத்தல் நடவடிக்கை; 1,790 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து ...
சகாராவின் ரூ.7,400 கோடி சொத்துகளை ஏலம் எடுக்க போட்டா போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:01

புதுடில்லி : நாட்­டில், பல்­வேறு இடங்­களில் உள்ள, சகாரா குழு­மத்­தின், 7,400 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­களை வாங்க, டாடா, அப்­பல்லோ, அதானி, பதஞ்­சலி உட்­பட, பல நிறு­வ­னங்­கள் போட்டி போடு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.
முறை­கே­டாக நிதி திரட்­டிய வழக்­கில், சகாரா குழு­மம், அதன் சொத்­து­களை விற்று, வரும் ஆகஸ்ட் மாதத்­திற்­குள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­யத்­தி­டம், 10,500 கோடி ரூபாய், ‘டிபா­சிட்’ செய்ய வேண்­டும் என, சுப்­ரீம் கோர்ட் உத்­த­ர­விட்டு உள்­ளது. இதை­ய­டுத்து, டில்லி, புனே, லக்னோ, கோவை உள்­ளிட்ட நக­ரங்­களில், சகா­ரா­வுக்­குச் சொந்­த­மான, 30 அசையா சொத்­து­கள் ஏலம் விடப்­பட உள்ளன. இதில் பங்கு கொள்ள, முன்­னணி நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பித்து உள்ளன. இது குறித்து, ஏல விற்­பனை மேற்­கொள்­ளும், நைட் பிராங்க் இந்­தியா நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:
சகாரா குழு­மத்­தின் சொத்து விற்­பனை குறித்து வெளி­யிட்ட விளம்­ப­ரத்­திற்கு, நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. ஓமக்ஸ், எல்­டெகா உள்­ளிட்ட, பல ரியல் எஸ்­டேட் நிறு­வ­னங்­களும், வெளி­நா­டு­களில் உள்­ள­வர்­களும், ஏலத்­தில் பங்­கேற்க விருப்­பம் தெரி­வித்து உள்­ள­னர். பொதுத் துறை­யைச் சேர்ந்த, இந்­தி­யன் ஆயில் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­ன­மும் விண்­ணப்­பித்­துள்­ளது. லக்­னோ­வில் உள்ள சகாரா மருத்­து­வ­ ம­னையை வாங்க, சென்­னை­யைச் சேர்ந்த அப்­பல்லோ மருத்­து­வ­மனை விண்­ணப்­பம் செய்­துள்­ளது. மொத்­தம், 59 நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து, 163 விண்­ணப்­பங்­கள் வந்­துள்ளன. அவை, விரை­வில் பரி­சீ­லிக்­கப்­பட்டு, ஏலத்­தில் பங்­கேற்க தகு­தி­யான நிறு­வ­னங்­கள் தேர்வு செய்­யப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சகாரா குழு­மத்­தின் சொத்­து­களை வாங்க, டாடா, அதானி, பதஞ்­சலி குழு­மங்­களும் விருப்­பம் தெரி­வித்­து உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இன்று (நவ.,18) அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.184 ம், கிராமுக்கு ரூ.23 ம் அதிகரித்துள்ளது. ... மேலும்
business news
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, 13 ... மேலும்
business news
பெங்களூரு : அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘விர்­ஜின் ஹைப்­பர்­லுாப் ஒன்’ நிறு­வ­னம், ‘ஹைப்­பர்­லுாப்’ எனப்­படும், ... மேலும்
business news
புதுடில்லி : ஜப்­பா­னைச் சேர்ந்த, சுசூகி மோட்­டார் கார்ப்­ப­ரே­ஷன், டொயொட்டா மோட்­டார் நிறு­வ­னத்­து­டன் ... மேலும்
business news
மும்பை : ரிலை­யன்ஸ் குழும தலை­வர், முகேஷ் அம்­பானி, அடுத்து, வலை­த­ளத்­தில் பொருட்­களை விற்­கும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)