ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.64 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.64 ...
அடிப்படை கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:04

புதுடில்லி : மாநில அர­சின் கீழ் உள்ள பொதுத் துறை நிறு­வ­னங்­கள், பெரிய அள­வி­லான அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களை நிறை­வேற்ற, நேர­டி­யாக, வெளி­நாட்டு அரசு அமைப்­பு­க­ளி­டம் இருந்து நிதி­யு­தவி பெறு­வ­தற்­கான, புதிய விதி­முறை அம­லுக்கு வர உள்­ளது. இதற்கு, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.
இதன் மூலம், மாநி­லங்­களில், நிதி பற்­றாக்­கு­றை­யால் செயல்­ப­டுத்த முடி­யா­மல் உள்ள, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, விடிவு காலம் பிறக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.தற்­போ­தையை விதி­மு­றைப்­படி, மாநில அர­சு­களின் கீழ் உள்ள பொதுத் துறை நிறு­வ­னங்­கள், வெளி­நாட்டு அரசு முகமை அமைப்புகளி­டம் இருந்து, நேர­டி­யாக கடன் பெற அனு­ம­தி­யில்லை. இந்த கட்­டுப்­பாடு நீக்­கப்­ப­டும்­பட்­சத்­தில், வலு­வான நிதி­நிலை கொண்ட, மாநில அரசு பொதுத் துறை நிறு­வ­னங்­கள், நேர­டி­யாக, அன்­னிய முகமை அமைப்­பு­க­ளி­டம் கடன் பெற்று, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேற்­கொள்­ள­லாம்.
மாநில அரசை சார்ந்­தி­ரா­மல், வட்­டி­யு­டன், கடன் தவ­ணையை முகமை அமைப்­பு­க­ளுக்கு, நேர­டி­யாக செலுத்­த­லாம்.இந்த திட்­டத்­தால், மாநில அர­சு­களின் நிதிச் சுமை­யும் குறைக்­கும். அன்­னிய முகமை அமைப்­பு­க­ளி­டம், மாநில பொதுத் துறை நிறு­வ­னங்­கள் பெறும் கட­னுக்கு, மத்­திய, மாநில அர­சு­கள் உத்­த­ர­வா­தம் வழங்­கும். ஒரு மாநி­லத்­தின் மொத்த உற்­பத்தியில், 3 சத­வீ­தம் வரை­யி­லான நிதி பற்­றாக்­கு­றையை சமா­ளிக்க, அரசு கடன் பெற­லாம்.
இந்த வரம்பை தாண்­டிய மாநில அர­சு­க­ளுக்கு, அன்­னிய கடன் பெற அனு­மதி கிடை­யாது. இதன் கார­ண­மா­கவே, நிதி பற்­றாக்­குறை அதி­க­மாக உள்ள பல மாநி­லங்­களில், அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களை விரைந்து நிறை­வேற்ற முடி­யாத நிலை உள்­ளது. இந்த பிரச்­னைக்கு, புதிய விதி­முறை தீர்­வ­ளிக்­கும். மேலும், 14வது நிதிக் குழு, சில நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யில்,மாநி­லங்­கள் கூடு­த­லாக, 0.50 சத­வீதம் கடன் பெற அனு­ம­திக்­க­லாம் என, தெரி­வித்­துள்­ளது. இந்த கூடு­தல் வரம்பு, மாநில அர­சின் கீழ் உள்ள நிறு­வ­னங்­கள், அன்­னிய நிதி­யு­த­வியை பயன்­ப­டுத்தி, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களை நிறை­வேற்­றிக் கொள்ள உத­வும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
அடுத்த 5 ஆண்­டு­களில்..சாலை, துறை­மு­கம், விமான நிலை­யம் உள்­ளிட்ட, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 43 லட்­சம் கோடி ரூபாய் தேவைப்­படும். இதில், 70 சத­வீ­தம், மின்­சா­ரம், சாலை­கள் மற்­றும் நகர்ப்­புற மேம்­பாட்­டிற்கு செல­வா­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி:குறைந்த தரத்­தில், பாது­காப்­பற்ற பொருட்­களின் இறக்­கு­ம­தியை தடுக்க வேண்­டு­மென்­றால், உள்­நாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:என்.எஸ்.இ., என சுருக்­க­மாக அழைக்­கப்­படும் தேசிய பங்­குச் சந்தை, புதிய பங்கு வெளி­யீட்­டில் ... மேலும்
business news
புதுடில்லி:டி.வி.எஸ்., மோட்­டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 126.77 கோடி ரூபாயை, ... மேலும்
business news
மும்பை:பொதுத்­ து­றையைச் சேர்ந்த, ‘ஹட்கோ’ எனப்­படும், ‘ஹவு­சிங் அண்டு அர்­பன் டெவ­லப்­மென்ட் கார்ப்­ப­ரே­ஷன்’ ... மேலும்
business news
மும்பை:ஹிமா­லயா பேபி கேர் நிறு­வ­னம், தாய்­மார்­கள் மற்­றும் குழந்­தைக­ளுக்கு தேவை­யான அனைத்து பொருட்­க­ளை­யும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Manian - Chennai,India
21-ஏப்-201702:58:34 IST Report Abuse
Manian போச்சுடா , உள்ளூர்காரனை ஏமாத்தற மாதிரி இந்த பயலுகளையும் ஏமாத்த நல்ல வழி. ஆனா, டோல் ரோட்டிலி அவங்க ஆளுங்களை அவங்க ஆரிமி அலோடு வைக்கனுமுன்னு சொன்னா என்நா செய்ய முடியும்? இல்லாட்டி, இந்தாங்க என்க நிலத்தடி கனிமங்கள் அள்ளிக்கிட்டு போங்க இம்பாங்களா ? மாமூல் 40 % கட்டிங் உண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)