ஜவுளி, வாகனம், ஆபரணம் ஏற்றுமதி உயர வாய்ப்புஜவுளி, வாகனம், ஆபரணம் ஏற்றுமதி உயர வாய்ப்பு ...  நடமாடும் ‘வை பை’ நிலையம் புதிய இணைய வசதி அறிமுகம் நடமாடும் ‘வை பை’ நிலையம் புதிய இணைய வசதி அறிமுகம் ...
ரூ.10,300 கோடி முதலீடு: கோட்டை விட்டது தமிழகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2017
06:38

– நமது நிரு­பர் –சென்னை அருகே, கார் ஆலை­கள் நடத்தி வரும், ‘ஹூண்­டாய்’ நிறு­வ­னத்­தின், துணை நிறு­வ­ன­மான, ‘கியா’ மோச­மான அர­சி­யல் சூழல் கார­ண­மாக, தமி­ழ­கத்தை புறக்­க­ணித்­து­ விட்டு, ஆந்­தி­ரா­வில், 10,300 கோடி ரூபாய் முத­லீட்­டில், புதிய ஆலை அமைக்க முடி­வெ­டுத்து உள்­ளது.காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், ஸ்ரீபெ­ரும்­பு­துார் அரு­கில் உள்ள, இருங்­காட்­டுக்­கோட்­டை­யில், தென் கொரி­யா­வைச் சேர்ந்த, ‘ஹூண்­டாய்’ வெற்­றி­க­ர­மாக செயல்­பட்டு வரு­கிறது. அங்கு, 535 ஏக்­கர் பரப்­பில், ஆண்­டுக்கு, ஏழு லட்­சம் கார்­கள் உற்­பத்தி செய்­யும், இரு ஆலை­கள் நிறு­வப்­பட்டு உள்ளன.ஹூண்­டா­யின் துணை நிறு­வ­ன­மான, ‘கியா’ பல்­வேறு ரக கார்­களை தயா­ரித்து வரு­கிறது. அந்த நிறு­வ­ன­மும், இந்­தி­யா­வில் ஆலை துவங்க விரும்­பி­யது. இங்கு, முத­லி­டத்­தில் உள்ள மாரு­தி­யின் போட்­டியை சமா­ளிக்க, கியா­வின் வருகை உத­வும் என, ஹூண்­டா­யும் கரு­தி­யது. அந்த நிறு­வ­னம், தற்­போது, ஆந்­திர மாநி­லம், அனந்­த­பூர் மாவட்­டம், பெனு­கொண்டா என்ற இடத்­தில், 10,300 கோடி ரூபா­யில், கார் தயா­ரிப்பு ஆலை அமைக்க உள்­ளது.இந்­தி­யா­வில், ஹூண்­டா­யின் தாய­க­மாக திக­ழும் தமி­ழ­கம், அதன் துணை நிறு­வ­னம் துவங்­க­வுள்ள, முதல் ஆலையை பெற முடி­யா­மல், கோட்டை விட்­டுள்­ளது.இது குறித்து, தமி­ழக ஆட்டோ மொபைல் துறை­யி­னர் கூறி­ய­தா­வது:கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக, ஹூண்­டாய் நிறு­வ­னம், கியா ஆலைக்­காக இடம் தேடி­யது. இங்கு நில­வும் அர­சி­யல் பிரச்­னை­கள், கமி­ஷன் கேட்­கும் அர­சி­யல்­வா­தி­கள், அதி­கா­ரி­கள், எளி­மை­யில்­லாத ஒப்­பு­தல் நடை­மு­றை­கள் போன்ற கார­ணங்­க­ளால், தொழில் வாய்ப்­பு­கள் பறி­போ­கின்றன.இந்த கார­ணங்­க­ளால் தான், ஹூண்­டாய் நிறு­வ­னம், தமி­ழ­கத்­தில் கியா ஆலை அமைப்­ப­தற்கு, சாத­க­மான கருத்­துக்­களை கூற­வில்லை. ஆந்­தி­ராவில், ஏப்., 12ல், கியா நிறு­வன அதி­கா­ரி­கள், அம்­மா­நில முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயு­டுவை சந்­தித்­த­னர். அடுத்த சில நாட்­களில், 600 ஏக்­கர் நிலத்தை கைய­கப்­ப­டுத்­தும் பணி துவங்­கி­யது. மே மாதத்­தில், கட்­டு­மா­னப் பணி­கள் துவங்­க­வுள்ளன. முதற்­கட்­ட­மாக, 6,000 கோடி ரூபா­யும், இரண்­டாம் கட்­டத்­தில், மீதத் தொகை­யும் முத­லீடு செய்­யப்­பட உள்­ளது.கியா வரு­கை­யால், ஆண்­டுக்கு, 10 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட கார்­களை, ஹூண்­டாய் குழும நிறு­வ­னங்­க­ளால் தயா­ரிக்க முடி­யும்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.
சந்­தி­ர­பாபு சாதுர்­யம்பிர­த­ம­ரின், ‘மேக் இன் இந்­தியா’ திட்­டம், வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளி­டம் நல்ல வர­வேற்பை பெற்­றுள்­ளது. புதிய ஆலை­களை ஈர்க்க, அதிக சலு­கை­கள் வழங்­கு­வ­தில், மாநி­லங்­கள் போட்டி போடு­கின்றன.ஆந்­திர முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு, கியா திட்­டம் பற்றி அறிந்­த­தும், ஹூண்­டாய் அதி­கா­ரி­களை, ஆந்­திர அதி­கா­ரி­கள் சந்­திக்க ஏற்­பாடு செய்­தார். பின், கியா நிறு­வ­னத்தை நேர­டி­யாக தொடர்பு கொண்டு, காரி­யத்தை சாதித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)