வரு­மான வரி கணக்கு தாக்கல்: அவ­சி­யமும், பலன்­களும்!வரு­மான வரி கணக்கு தாக்கல்: அவ­சி­யமும், பலன்­களும்! ... தங்­க­மான முத­லீடு தங்­க­மான முத­லீடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி வாழ்க்­கையை சீர­மைக்கும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:14

பணம் என்­பது ஒரு கருவி தான், அதை சரி­யாக பயன்­ப­டுத்த நிதி திட்டம் தேவை என்­கிறார் ரெஜினா லீட்ஸ். அவர் எழு­திய, ‘ஆர்­க­னைஸ்டு பைனான்­சியல் லைப்’ புத்­த­கத்தில் நிதி திட்­ட­மி­ட­லுக்­கான வழியை விவ­ரிக்­கிறார். பணத்­திற்கு ஏதோ மந்­திர சக்தி இருப்­ப­தாக நாம் நினைக்­கிறோம். பணம் கை ந­ழுவி செல்­வது பற்றி அல்­லது பாக்­கெட்டை பதம் பார்ப்­பது பற்றி, அச்சம் கொள்­கிறோம். ஆனால், பணம் நல்­லதும் அல்ல; தீயதும் அல்ல. ஆனால், பணத்தை சிறப்­பாக நிர்­வ­கிக்க முடியும் என்றால், அது நம் வாழ்க்­கையில் மிகுந்த நன்­மை­களை ஏற்­ப­டுத்தி தரும்.
பணம் என்­பது ஒரு கருவி தான். அதன் ஆற்றல் அதை நாம் பயன்­படுத்தும் விதத்தில் தான் இருக்­கி­றது. நல்ல திட்­ட­மிடல் இல்­லா­விட்டால் பணத்தால் சிக்கல் ஏற்­ப­டலாம்.உங்கள் கோப்­புகள் மற்றும் பில்­களை ஒழுங்­குப்­ப­டுத்­து­வது, தற்­போ­தைய நிதி நிலையை அறி­வது, வரி சேமிப்பு, பில்­களை முறை­யாக செலுத்­து­வது, பட்­ஜெட்­டிற்குள் செயல்­ப­டு­வது, பிள்­ளை­களுக்கு பணம் பற்றி கற்­றுத்­தரு­வது, தேவை­யில்­லாத செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது, கடைசி நேரத்தில் வரி சேமிப்பு முடி­வு­களை மேற்­கொள்­வதை தவிர்ப்­பது உள்­ளிட்­டவை மிகவும் அவ­சியம்.
பணத்தை நிர்­வ­கிப்­பதை கையில் எடுத்­துக் ­கொள்ள பலரும் தயங்­கலாம்; தள்­ளிப் ­போ­டலாம். இதை எங்­கி­ருந்து துவங்­கு­வது என்று தெரி­யாமல் தடு­மா­றலாம். முத­லீடு தொடர்­பாக தவ­றான முடிவு எடுத்து விடு­வோமோ என அஞ்­சலாம். எனினும், நிதி கல்­விக்­கான அடிப்­படை எளி­மை­யா­னவை. நிதி திட்­ட­மி­டலை படிப்­ப­டி­யாக மேற்­கொள்­ளலாம். எந்த ஒரு திட்­டத்தின் முதல் அம்சம் தேவை­யில்­லா­த­வற்றை அகற்­று­வ­தாகும். இது ஒரு சுவா­ரஸ்­ய­மான முயற்­சி­யா­கவும் கூட இருக்கும். தேவை­யில்­லாத பொருட்­களை நன்­கொ­டை­யாக அளிக்­கலாம். நிதி திட்­ட­மி­டலில் நீக்­கு­வதும், அழிப்­பதும் உங்கள் சிறந்த நண்­ப­ராக விளங்கும். இந்த செய­லுக்குப் பின், நீங்கள் ஒரு தெளிவை உணரும் வாய்ப்பு இருக்­கி­றது. தேவை­யில்­லா­த­வற்றை நீங்கள் வாங்­கு­வ­தையும் தவிர்க்­கலாம். வீணான விஷ­யங்­களை அகற்­று­வ­தற்­கான புதிய வழி­களை நீங்கள் கண்­ட­றி­யலாம்.
அடுத்த கட்டம் வகைப்­ப­டுத்­து­வது. உண்­மையில் இது முந்­தைய கட்­டத்தில் இருந்தே துவங்கி விடு­கி­றது. நீங்கள் தேவை என தேர்வு செய்­தி­ருக்கும் விஷ­யங்­களை அவற்­றுக்­கு­ரிய வகையில் பிரித்­தாலே போது­மா­னது. வகைப்­ப­டுத்­து­வது உங்­க­ளுக்கு ஆற்­றலை அளிக்கும். ஏற்­க­னவே உள்ள பொருட்­களை வாங்­கு­வதை தவிர்க்­கலாம். இதன் மூலம் சேமிப்பும் அதி­க­மாகும். மேலும், வகைப்­ப­டுத்­து­வதன் மூலம் பாலி­சிகள், வரிச்­சான்­றி­தழ்கள் எல்­லா­வற்­றையும் ஒழுங்­குப்­ப­டுத்­தலாம். அவை அங்கும் இங்கும் சித­றிக்­கி­டப்­பதை தவிர்க்­கலாம். தொடர்­பு­டைய விஷ­யங்­களை ஒருங்­கி­ணைத்து வைப்­பது உங்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டை அளிக்கும். இதன் பின், பய­னுள்ள குறிப்­பு­களை அமல் செய்யத் துவங்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)