ஓட்டல் முன்­ப­திவில் உதவும் செய­லிகள்ஓட்டல் முன்­ப­திவில் உதவும் செய­லிகள் ... மியூச்­சுவல் பண்­டு­களில் ‘இ – வாலட்’ மூலம் முத­லீடு செய்யும் வசதி விரைவில் அறி­முகம் மியூச்­சுவல் பண்­டு­களில் ‘இ – வாலட்’ மூலம் முத­லீடு செய்யும் வசதி ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:23

கச்சா எண்ணெய்
சர்­வ­தேச சந்­தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் 8 சத­வீதம் அள­வுக்கு சரிவை சந்­தித்­தது. அதற்கு முந்­தைய மூன்று வாரங்­களில், விலை உயர்ந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.அமெ­ரிக்­காவின் இருப்பு விகிதம் உயர்வு மற்றும் உற்­பத்­தியில் சிறிது ஏற்றம் போன்­றவை விலை இறங்க கார­ண­மா­கி­யது.அதி­க­ரித்து வரும் அமெ­ரிக்க எண்ணெய் உற்­பத்தி, சந்­தையில் மிகப்பெரிய மாற்­றத்தை உரு­வாக்­கு­கி­றது. கடந்த 14ம் தேதி ­வரை உற்­பத்தி, 9.252 மில்­லியன் பேர­லாக உயர்ந்­தது. இந்த உயர்வு, 2015 ஆகஸ்ட் மாதத்தை காட்­டிலும் அதி­க­மாகும். ஒன்­பது வாரங்­க­ளாக தொடர்ந்து எண்ணெய் உற்­பத்தி அதி­க­ரித்து வரு­கி­றது.மறு­பக்கம், வளை­குடா நாடுகள் உற்­பத்தி குறைப்பில் ஈடு­பட்­டுள்ள நிலையில், அமெ­ரிக்க உற்­பத்தி, வளைகுடா நாடுகளுக்கு சவா­லாக இருந்து வரு­கி­றது. தற்­போது, தின­சரி உற்­பத்தி 20 ஆயிரம் பேரல்­க­ளாக உள்­ளது. இந்­நிலை தொட­ரும்­போது, உற்­பத்தி 30 ஆயிரம் பேரல்­களை எட்டும் என ணிக்­கப்­படு­கி­றது. வரும் நாட்­களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 47 டாலர் வரை குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பொருள் வணிக சந்­தையில் கச்சா எண்ணெயின் இந்த வார அள­வுகள் (1 பீப்பாய்)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) 3,175 3,120 3,250 3,305என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 47.50 45.00 51.80 53.30

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஒபெக் உறுப்பு நாடுகள் முதன் முறை­யாக உற்­பத்தி குறைப்பில் ஈடு­பட முடி­வெ­டுத்­தன. அதன் விளை­வாக, 26 டாலர் என இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 55 டாலர் வரை சில மாதங்­களில் உயர்ந்­தது.
ஒபெக் நாடு­களின் உற்­பத்தி அட்­ட­வணை (தின­சரி / மில்­லியன் பேரல்கள்)ஒபெக் நாடுகள் உற்­பத்தி குறைப்பு பிப்­ர­வரி மாத உற்­பத்தி மார்ச் மாத உற்­பத்திஅல்­ஜீ­ரியா 1.039 1.053 1.056அங்­கோலா 1.673 1.641 1.614ஈகு­வடார் 0.522 0.526 0.526காபான் 0.193 0.194 0.198ஈரான் 3.797 3.814 3.790ஈராக் 4.351 4.414 4.402குவைத் 2.707 2.709 2.702கத்தார் 0.618 0.622 0.612சவுதி அரே­பியா 10.058 9.797 9.994ஐக்­கிய அரபு நாடுகள் 2.874 2.925 2.895வெனின்­சுலா 1.972 1.987 1.972மொத்தம் 29.804 29.682 29.761

தங்கம் – வெள்ளி
கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து காணப்­பட்­டது. இதற்கு முந்­தைய வாரங்­களில் உயர்­வினை சந்­தித்த நிலையில், அமெ­ரிக்க நாண­யத்தின் மதிப்பு கூடி­யதன் விளை­வாக சந்­தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்­தது. பொது­வாக, அமெ­ரிக்க டாலரின் மதிப்பு உயர்வு தங்கம் மற்றும் வெள்­ளியின் விலையை அதி­க­மாக பாதிக்கும். மார்ச் மாத இறு­தியில் தாம்சன் ராய்ட்டர்ஸ், ஜி.எப்.எம்.எஸ்., மற்றும் மெட்டல் போகஸ் ஆகி­யவை இணைந்து நடத்­திய கருத்துக் கணிப்பில், 2017ல் சர்­வ­தேச சந்­தையில் ஒரு அவுன்ஸ் தங்கம், 1,259 டாலர் என, ஜி.எப்.எம்.எஸ் தெரி­வித்­தது. மெட்டல் போகஸ், 1,285 டாலர் எனவும் தெரி­வித்­தது.உலகின் ஒட்­டு­மொத்த தங்­கத்தின் தேவை­யா­னது, 2016ல், 18 சத­வீதம் குறைந்து, 3,559 டன்­னாக இருந்­தது. இதற்கும் ஆப­ர­ணத்தின் தேவை குறைவே முக்­கிய கார­ண­மாக இருந்­தது.இந்­திய சந்­தையில், 38 சத­வீதம் ஆப­ரண உற்­பத்தி குறை­வாகும். இதற்கு கலால் வரி, பணப்­பு­ழக்கம் குறைவு போன்­றவை கார­ணங்­க­ளாக சொல்­லப்­ப­டு­கி­றது. சீன சந்­தை­யிலும் ஆப­ர­ணத்தின் தேவை, 17 சத­வீதம் குறை­வாகும்.
பொருள் வணிக சந்­தையில் தங்கம் இந்த வார அள­வுகள் (10 கிராம்)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) 29,140 28,900 29,410 29,600காம்எக்ஸ் (டாலர்) 1,275 1,260 1,298 1,310

பொருள் வணிக சந்­தையில் வெள்ளி இந்த வார அள­வுகள் (1 கிலோ)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) 41,000 40,350 41,650 42,100காம்எக்ஸ் (டாலர்) 17.35 16.90 18.10 18.50

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)