காலாண்டு முடிவுகள்: ஏ.சி.சி., நிறு­வனத்தின் வருவாய் ரூ.3,663 கோடிகாலாண்டு முடிவுகள்: ஏ.சி.சி., நிறு­வனத்தின் வருவாய் ரூ.3,663 கோடி ... காளையின் ஆதிக்கம் - பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் காளையின் ஆதிக்கம் - பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆண்டு கணக்­குகள் சொல்லும் அறி­கு­றிகள்: ஷ்யாம் சேகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:28

இது, நிறு­வ­னங்கள் ஆண்டு கணக்­கு­களை அறி­விக்கும் காலம். ஆண்டின் லாபக் கணக்­குகள் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு முக்­கிய அறி­கு­றி­களை தரு­கின்­றன. முதலில், முடிந்த ஆண்டின் லாபம் எந்த அளவு எதிர்­பார்ப்­பு­களை நிறைவு செய்­தது என்ற தெளிவை அது தரும். அடுத்து, வரும் ஆண்­டிற்­கான லாபம் குறித்த எதிர்­பார்ப்பு ஏற்­ப­டுத்­தப்­படும்.
ஒரு நிதி­யாண்டின் நிறைவு, முத­லீட்­டா­ளர்கள் மனதில் எந்த அளவு நிறை­வையும், நம்­பிக்­கை­யையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன என்­பதன் மூல­மாக, சந்­தையின் போக்கை தீர்­மா­னிக்­கக்­கூடிய வல்­லமை கொண்­டது. அடுத்த ஆண்டு என்ன எதிர்­பார்க்க வேண்டும் என்று முத­லீட்­டா­ளர்கள், ஆண்டு லாபக் கணக்கைப் பார்த்த பின் முடிவு செய்­வது மரபு. இது­வரை, சில பெரு­நி­று­வ­னங்­களின் முடி­வுகள் மட்­டுமே வெளி­வந்­து உள்ளன. தனியார் வங்­கிகள் மற்றும் மென்­பொருள் நிறு­வ­னங்கள் தங்கள் கணக்­கு­களை அறி­வித்து உள்­ளன. இண்­டஸ்இண்ட் வங்கி மற்றும் யெஸ் வங்­கியின் முடி­வுகள் எதிர்­பார்ப்பை விஞ்­ச­வில்லை. மாறாக, இந்த வங்­கி­களின் வாராக்கடன்கள் அதி­க­ரிக்­குமோ என்ற அச்சம் தொடர்­கி­றது.
எச்.டி.எப்.சி., வங்­கியின் முடி­வுகள் எதிர்­பார்ப்பை விஞ்­சின. இந்த நிறு­வனம் தொடர்ந்து சந்­தையின் எதிர்­பார்ப்பை விஞ்சும் என்றே முத­லீட்­டா­ளர்கள் எதிர்­பார்ப்பு அமைந்­துள்­ளது. இந்­நி­று­வனம் தொடர்ந்து இந்­திய சந்­தையின் தலைமை நிறு­வ­ன­மாக விளங்கும் என்று நிச்­சயம் எதிர்­பார்க்­கலாம். முக்­கிய மென்­பொருள் நிறு­வ­னங்­களான இன்­போசிஸ் மற்றும் டி.சி.எஸ்., முத­லீட்­டா­ளர்கள் எதிர்­பார்ப்பை பொய்­யாக்­கி­விட்­டன என்றால் அது மிகை­யல்ல. எதிர்­கா­லத்தைப் பற்றி ஒரு நம்­பிக்­கை­யான நிலைப்­பாட்டை ஏற்­ப­டுத்த இந்த இரு பெரு­நி­று­வ­னங்­களும் தவ­றி­யது பெரும் ஏமாற்றத்தை விதைத்­து­விட்­டது. எதிர்­காலம் பற்­றிய சந்­தே­கங்கள் வலுக்கத் துவங்­கி­விட்­டன. இவற்றை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கோடு டிவிடெண்டு மற்றும் ‘பைபேக்’ நட­வ­டிக்­கை­களை, இவ்­விரு நிறு­வ­னங்­களும் அதி­க­ரித்­துள்­ளன. முத­லீட்­டா­ளர்­களின் மன­நிலை மீது இந்த முடி­வுகள் ஏற்­ப­டுத்தும் தாக்கம் போகப்­போ­கத்தான் புரியும்.
ஆனால், இரு­பத்­தைந்து ஆண்­டு­களாக தொடர்ந்து பல இடர்­களை மீறி வெற்­றி­க­ர­மாக பய­ணித்த இந்த துறை, இந்த முறை பெரும்­பாடு படும் என்­பது சந்­தையின் மதிப்­பீடு. இந்த பங்­குகள் மீது இருந்த நம்­பிக்­கையை அவை இழந்து நிற்­பதன் மூல­கா­ரணம், நிறு­வன தலைமை சந்­தையின் எதிர்­பார்ப்­பு­களை ஏற்றி, பின் அவற்றை நிறைவு செய்யத் தவ­றி­யதே ஆகும். வரும் ஆண்டில், இந்த நிலை மாறுமா என்று சந்தை கூர்ந்து கவ­னிக்கும். பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்கள் தொடர்ந்து இந்­திய பங்­கு­களை விற்­ற ­வண்ணம் உள்­ளனர். ஆனால், உள்­நாட்டு முதலீட்­டாளர்­களின் அப­ரி­மிதமான நம்­பிக்கை நகர்­வு­களை உத­றித்­தள்ளும் வண்ணம் அமைந்­தன. இந்த வாரத்தில், தொடர்ந்து வெளி­வரும் ஆண்டு லாபக் கணக்­கு­களும், பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­களின் தொடர்­மு­டி­வு­களும் சந்­தையின் போக்கை முடிவு செய்யும்.
பொது­வாக, பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்கள் தொடர்ந்து பங்­கு­களை விற்றால், இந்­திய முதலீட்­டா­ளர்­களும் தயக்கம் காட்­டு­வர். அந்த தயக்கம் தற்­போது இல்லை. ஆனால், தொடர்ந்து என்ன நடக்­கி­றது என்று பார்க்க வேண்டும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)