ஓட்டல் முன்­ப­திவில் உதவும் செய­லிகள்ஓட்டல் முன்­ப­திவில் உதவும் செய­லிகள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ...
மியூச்­சுவல் பண்­டு­களில் ‘இ – வாலட்’ மூலம் முத­லீடு செய்யும் வசதி விரைவில் அறி­முகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:28

புது­டில்லி : மொபைல் ­போனில், ‘இ – வாலட்’ மூலம், மியூச்­சுவல் பண்டு திட்­டங்­களில் முத­லீடு செய்ய அனு­ம­திப்­பது குறித்து, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ பரி­சீ­லித்து வரு­கி­றது. இது குறித்து, இந்த வாரத்தில் முடிவு எடுக்­கப்­படும் என, தெரி­கி­றது.
சிறிய முத­லீட்­டா­ளர்கள், குறிப்­பாக இளைய சமு­தா­யத்­தினர், அதிக அளவில் மியூச்­சுவல் பண்டு திட்­டங்­களில் முத­லீடு செய்ய, மொபைல் போன் வாயி­லான, ‘இ – வாலட்’ வசதி உதவும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தற்­போது, மியூச்­சுவல் பண்­டு­களில் வலை­தளம் மூலம் முத­லீடு செய்யும் வசதி இருந்­தாலும், பணம் கைமா­று­வதில் சில சமயம், சிக்கல் ஏற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இ – வாலட் எனப்­படும் மின்­னணு பணப்பை வசதி, மொபைல் போன் மூலம், திரைப்­படம் டிக்கெட், ரயில் டிக்கெட் போன்ற பல்­வேறு சேவை­களை பெற உத­வு­கி­றது. இவற்­றுடன், மியூச்­சுவல் பண்டு திட்­டங்­க­ளையும் சேர்த்தால், அவற்­றுக்கு முத­லீட்­டா­ளர்­க­ளிடம் பெரும் வர­வேற்பு கிடைக்கும் என, செபி கரு­து­கி­றது. அதனால், இ – வாலட் மூலம், மியூச்­சுவல் பண்­டு­களில் முத­லீடு செய்ய அனு­ம­திப்­பது குறித்து, செபி தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கி­றது.
இது குறித்து, செபி அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: முத­லீட்­டாளர் நலன் கருதி, பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுடன், இ – வாலட் மூலம் மியூச்­சுவல் பண்­டு­களில் முத­லீடு செய்யும் வசதி, விரைவில் அறி­மு­க­மாகும் என, தெரி­கி­றது. ரொக்கம், டெபிட் கார்டு, ‘நெட் பேங்கிங்’ போன்­ற­வற்றின் மூல­மாக, மின்­னணு பணப்பைக்கு, தொகையை மாற்றி, அதன் மூலம் மியூச்­சுவல் பண்­டு­களில் முத­லீடு செய்ய அனு­ம­திக்­கப்­படும். ஆனால், கிரெடிட் கார்டு மூலம், மின்­னணு பணப்பையில் பணத்தை போட்டு, அதன் மூலம் மியூச்­சுவல் பண்­டு­களில் முத­லீடு செய்ய அனு­ம­திக்கப்பட மாட்­டாது. அது­போல, ‘கேஷ் பேக்’ போன்ற ஊக்கச் சலுகை திட்­டங்­களில் ஈட்­டிய பரிசுப் புள்­ளிகள் அடிப்­ப­டை­யிலும் முத­லீடு செய்ய முடி­யாது. மின்­னணு பணப்பை நிறு­வ­னங்கள், நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ, ‘கேஷ்பேக்’ போன்ற ஊக்கச் சலுகை திட்­டங்­களை, மியூச்­சுவல் பண்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்கக் கூடாது.
‘லிக்யுட் பண்டு’களில் செய்யும் முத­லீட்டை, எந்த நேரத்­திலும், உட­ன­டி­யாக திரும்பப் பெறும் வசதி ஏற்­ப­டுத்­தப்­படும். ஒரு நிதி­யாண்டில், ஒருவர் மின்­னணு பணப்பை மூலம், 50 ஆயிரம் ரூபாய் வரை மியூச்­சுவல் பண்­டு­களில் முத­லீடு செய்­யலாம். ஒரு முத­லீட்­டாளர், மின்­னணு பணப்பை மூலம், ஒரு நாளைக்கு, ஒரு மியூச்­சுவல் பண்டு திட்­டத்தில், 50 ஆயிரம் ரூபாய் அல்­லது முத­லீட்டில், 90 சத­வீதம் வரை வரை, பணத்தை திரும்பப் பெற அனு­ம­திக்­கப்­படும். மின்­னணு பணப்பை சேவையை வழங்­கு­வ­தற்கு, மியூச்­சுவல் பண்டு நிறு­வ­னங்கள், அவற்றின் இயக்­குனர் குழு­விடம் ஒப்­புதல் பெற வேண்டும். இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.
மொபைல் ­போனில் மின்­னணு பணப்பை மூலம் மியூச்­சுவல் பண்­டு­களில் முத­லீடு செய்யும் திட்டம், சிறிய அளவில் சேமிக்க விரும்­பு­வோ­ரிடம் பெரும் வர­வேற்பை பெறும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்­தி­யாவில், 41 மியூச்­சுவல் பண்டு நிறு­வ­னங்கள், 5 கோடிக்கும் அதி­க­மான கணக்­கு­களின் கீழ், 18.30 லட்சம் கோடி ரூபாய் அள­வி­லான நிதியை நிர்­வ­கித்து வரு­கின்­றன.
மியூச்­சுவல் பண்டு திட்­டங்­களில் திரட்­டப்­படும் நிதி, நிறு­வன பங்­குகள், கடன் பத்­தி­ரங்கள் மற்றும் இதர நிதி இனங்­களில் முத­லீடு செய்­யப்­ப­டு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)