‘முதலீட்டாளர்களை இழுக்க நிதி கல்வியறிவு அவசியம்’‘முதலீட்டாளர்களை இழுக்க நிதி கல்வியறிவு அவசியம்’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.34 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.34 ...
இன்போசிஸ், காக்னிஸன்ட், டி.சி.எஸ்., ‘எச் – 1பி’ விசா விதிகளை மீறி விட்டன: அமெரிக்க அரசு பகிரங்க குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
01:17

வாஷிங்­டன் : வெளி­யாட்­களை பணிக்கு அமர்த்­தும், ‘எச் – 1பி’ விசா விதி­மு­றை­களை, இன்­போ­சிஸ், காக்­னி­ஸன்ட், டி.சி.எஸ்., நிறு­வ­னங்­கள் மீறி­யுள்­ள­தாக, அமெ­ரிக்க அரசு பகி­ரங்­க­மாக குற்­றஞ்­சாட்டி உள்­ளது.
இது குறித்து, அமெ­ரிக்க அதி­ப­ரின் வெள்ளை மாளிகை வலை­த­ளத்­தில், அரசு அதி­காரி தெரி­வித்த கருத்து வெளி­யி­டப்­பட்டு உள்­ளது. அதன் விப­ரம்: வெளி­நாட்­டி­னரை பணிக்கு அமர்த்­தும், ‘எச் – 1பி’ விசா கோரி, முன்­னணி நிறு­வ­னங்­க­ளான, இன்­போ­சிஸ், காக்­னி­ஸன்ட், டி.சி.எஸ்., போன்­றவை, அவற்­றுக்கு கிடைக்­கும் இடங்­களை விட, மிக அதி­க­மான விண்­ணப்­பங்­களை அளித்து வரு­கின்றன. இதன் மூலம், இந்­நி­று­வ­னங்­கள், விசா ஒதுக்­கீட்­டில், பெரும் பங்கை கைப்­பற்றி விடு­கின்றன.
வலுவான சான்று:
இப்­படி பெறப்­படும் விசா மூலம், இந்­நி­று­வ­னங்­கள், குறைந்த திறன் உள்ள ஊழி­யர்­களை, இந்­தி­யா­வில் இருந்து அமெ­ரிக்­கா­விற்கு வர­வ­ழைத்து, குறைந்த ஊதி­யச் செல­வில் பணி­களை முடித்­துக் கொள்­கின்றன.உதா­ர­ண­மாக, அமெ­ரிக்­கா­வில், சாப்ட்­வேர் பொறி­யா­ளர் ஒரு­வ­ரின் சரா­சரி ஊதி­யம், 1.50 லட்­சம் டால­ராக உள்ள நிலை­யில், இன்­போ­சிஸ், காக்­னி­ஸன்ட், டி.சி.எஸ்., ஆகி­யவை, சரா­ச­ரி­யாக, 60 ஆயி­ரம் – 65 ஆயி­ரம் டாலர் ஊதி­யத்­தில், இந்­திய பொறி­யா­ளர்­களை வேலை­யில் அமர்த்தி, பணி­களை முடித்­துக் கொள்­கின்றன.
‘வல்­லு­னர்­களை மட்­டுமே பணிக்கு அமர்த்த வேண்­டும்’ என, ‘எச் – 1பி’ விசா விதி­முறை கூறு­கிறது. ஆனால், இந்த மூன்று நிறு­வ­னங்­களும், இந்த விசா மூலம், சாதா­ரண, துவக்க நிலை பணி­யா­ளர்­களை வேலைக்கு அமர்த்தி உள்ளன. இதற்கு வலு­வான சான்று உள்­ளது. இந்த வகை­யில், தற்­போது, ‘எச் – 1பி’ விசா பெறு­வோ­ரில், 80 சத­வீ­தம் பேர், உள்­நாட்­டி­னர் சரா­ச­ரி­யாக பெறும் ஊதி­யத்தை விட, குறை­வாக பெறு­வது, வெட்ட வெளிச்­ச­மாகி உள்­ளது.
தொழி­லா­ளர் நலத்­துறை, ஊழி­யர்­க­ளுக்கு நான்கு நிலை ஊதி­யத்தை நிர்­ண­யித்­துள்­ளது. அதில், உச்­ச­பட்ச ஊதி­யம் பெறும், ‘எச் – 1பி’ விசா பணி­யா­ளர்­களின் பங்கு, 5 – 6 சத­வீ­தம் என்ற அள­விற்­குத் தான் உள்­ளது. அதிக திறன் பெற்ற வல்­லு­னர்­க­ளுக்­கான பணி­யில், அமெ­ரிக்க ஊழி­யர்­களை அகற்­றி­விட்டு, அவர்­க­ளுக்கு அளிக்­கப்­ப­டு­வதை விட, குறைந்த ஊதி­யத்­தில், வெளி­நாட்­டி­னர் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வது, ‘எச் – 1பி’ விசா விதி­களை மீறு­வ­தா­கும். இது, எந்த நோக்­கத்­திற்­காக விசா வழங்­கப்­ப­டு­கி­றதோ, அதற்கு நேர்­மா­றா­னது.
வேலை வாய்ப்பு :
ஒரு­வர், திறன் பெற்ற வல்­லு­னரா அல்­லது அவ­ருக்­கான ஊதி­யம், திறன் சார்ந்த பணி­களின் அடிப்­ப­டை­யில் வழங்­கப்­ப­டு­கி­றதா என்­பதை எல்­லாம் பார்க்­கா­மல், குலுக்­கல் முறை­யில், ‘எச் – 1பி’ விசா வழங்­கி­யதே, இந்த விதி­மீ­றல் நடை­பெ­று­வ­தற்கு வித்­திட்­டுள்­ளது.அத­னால், தற்­போது, திறன் சார்ந்த வல்­லு­னர்­க­ளுக்கு மட்­டுமே, ‘எச் – 1பி’ விசா வழங்­கும் நடை­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. இந்த விசா மூலம், திறன் சார்ந்த வல்­லு­னர்­களின் பணி­யி­டத்­தில், வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளால் சாதா­ரண திற­னுள்ள ஊழி­யர்­களை, பணிக்கு அமர்த்த முடி­யாது. இது, அமெ­ரிக்க வல்­லு­னர்­களின் வேலை­யி­ழப்பை தடுக்­கும் என்­ப­து­டன், அவர்­களின் வேலை­வாய்ப்­பை­யும் அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)