லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்; இரண்டு திட்டங்கள் அறிமுகம்லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்; இரண்டு திட்டங்கள் அறிமுகம் ... புதிய மொபைல் போன் சேவைக்கு விதிமுறைகளை உருவாக்கும் ‘டிராய்’ புதிய மொபைல் போன் சேவைக்கு விதிமுறைகளை உருவாக்கும் ‘டிராய்’ ...
நலிந்த 5 பொது துறை நிறுவனங்களின் நிலம், தொழிற்சாலைகள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2017
01:19

புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, நலி­வ­டைந்த ஐந்து நிறு­வ­னங்­க­ளுக்­குச் சொந்­த­மான நிலம் மற்­றும் தொழிற்­சா­லை­கள் விற்­பனை செய்­யப்­பட உள்ளன. இதற்­கான அறி­விப்பை, சொத்து விற்­ப­னையை நிர்­வ­கிக்­கும், பொதுத் துறை­யைச் சேர்ந்த, என்.பி.சி.சி., நிறு­வ­னம் வெளி­யிட்டு உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் அனுப் குமார் மிட்­டல் கூறி­ய­தா­வது: நலி­வுற்ற, எச்.எம்.டி., பேரிங், இந்­துஸ்­தான் கேபிள்ஸ், இன்ஸ்ட்­ரு­மென்­டே­ஷன், எச்.எம்.டி., வாட்­சஸ், துங்­க­பத்ரா ஸ்டீல் புரா­டெக்ட்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் நிலம், அசையா சொத்­து­கள் உள்­ளிட்­டவை, விற்­பனை செய்­யப்­பட உள்ளன. இதில், மத்­திய, மாநில அரசு துறை­கள், பொதுத் துறை நிறு­வ­னங்­கள், அரசு அமைப்­பு­கள் ஆகி­யவை மட்­டுமே பங்­கேற்­க­லாம். ஒரு மாதத்­திற்­குள், விண்­ணப்­பங்­களை அளிக்க வேண்­டும். சந்தை நில­வ­ரம் அல்­லது கைய­கப்­ப­டுத்­தும் சொத்­து­களின் மதிப்பு அடிப்­ப­டை­யில், விற்­பனை விலை நிர்­ண­யிக்­கப்­படும்.
டில்லி, குஜ­ராத், கர்­நா­டகா, மஹா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான், உத்­த­ர­கண்ட், தெலுங்­கானா, உ.பி., மேற்கு வங்­கம் ஆகிய மாநி­லங்­களில், இந்த சொத்­து­கள் உள்ளன. உத்­த­ர­கண்­டில், எச்.எம்.டி., வாட்­சஸ் நிறு­வ­னத்­தின், 92.3 ஏக்­கர் பரப்­பி­லான, இரு சொத்­து­கள் விற்­கப்­பட உள்ளன. ஐத­ரா­பாத்­தில் உள்ள, எச்.எம்.டி., பேரிங் நிறு­வ­னத்­தின், 29.33 ஏக்­கர் நிலம், கர்­நா­டக மாநி­லம், பெல்­லா­ரி­யில் உள்ள, துங்­க­பத்ரா ஸ்டீல் புரா­டெக்ட்ஸ் நிறு­வ­னத்­தின், 80 ஏக்­கர் பரப்­பி­லான அசையா சொத்து ஆகி­யவை விற்­பனை செய்­யப்­படும்.அது போல, இன்ஸ்ட்­ரு­மென்­டே­ஷன் நிறு­வ­னத்­தின், நிலம் உள்­ளிட்ட ஒன்­பது சொத்­து­கள், இந்­துஸ்­தான் கேபிள்ஸ் நிறு­வ­னத்­தின், எட்டு அசையா சொத்­து­கள் விற்­பனை செய்­யப்­பட உள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)