கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு மோசம்:பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றச்சாட்டுகார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு மோசம்:பங்கு சந்தை கட்டுப்பாட்டு ... ... முதிர்ச்சியும், பொறு­மை­யுமே முதலீட்டாளர்களுக்கு அவசியம்: ஷ்யாம் சேகர் முதிர்ச்சியும், பொறு­மை­யுமே முதலீட்டாளர்களுக்கு அவசியம்: ஷ்யாம் சேகர் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
04:17

கச்சா எண்ணெய்
கடந்த இரு வாரங்­க­ளாக கச்சா எண்ணெய் விலை 10 சத­வீதம் குறைந்து, சர்­வ­தேச சந்­தையில் வர்த்­த­க­மா­கி­றது. அதி­கப்­ப­டி­யான அமெ­ரிக்க எண்ணெய் உற்­பத்தி மற்றும் தேவையில் ஏற்­பட்ட தொய்வு, ஈரான் நாட்டின் உற்­பத்தி பெருக்கம் போன்ற பல்­வேறு கார­ணங்­களால் விலை இறக்கம் நேரிட்­டது.மாத­மொ­ரு­முறை, இ.ஐ.ஏ., வெளி­யிடும் ‘பெட்­ரோ­லியம் சப்ளை மன்த்லி’அறிக்­கையில் பிப்., மாதத்தில் அமெ­ரிக்க கச்சா எண்ணெய் உற்­பத்தி, தின­சரி 19.00 மில்­லியன் பீப்­பாய்கள் ஆகும். இது அதற்கு முந்­தைய மாதத்தில், தின­சரி 9.30 மில்­லியன் பீப்­பாய்கள் என்­றி­ருந்­தது. மேலும், உள்­நாட்டு தேவை­யா­னது, 4.90 மில்­லியன் பீப்­பாய்­க­ளாக குறைந்­தது. இது கடந்த, 2012ம் ஆண்டை விட குறை­வாகும்.
கடந்த, 2016 நவம்­பரில் ஒபெக் மற்றும் நான் ஒபெக் நாடுகள் உற்­பத்தி குறைப்பை தீர்­மா­னித்­தன. ஈராக் நாடு தன் உற்­பத்­தியை குறைக்­காமல் அதி­க­ரித்து வரு­கி­றது. இது விலை ஏற்­றத்தை தடை செய்­கி­றது. தற்­போது தினமும், 2 லட்சம் பீப்­பாய்கள் உற்­பத்தி செய்­கி­றது. மேலும், 2018ல் 4 லட்சம் பீப்­பாய்கள் வரை உயர்த்த தீர்­மா­னித்­துள்­ளது. மார்ச் மாத உற்­பத்தி 4.46 மில்­லியன் பீப்­பாய்­க­ளாகும். இந்த ஆண்டு இறு­தியில் இதை 5 மில்­லியன் பீப்­பாய்­க­ளாக உயர்த்த திட்டம் தீட்­டி­யுள்­ளது.வரும் நாட்­களில் மந்­த­மான சூழ்­நி­லையில் வர்த்­தகம் ஆகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 47 டாலர் என்ற நிலை நல்ல ஆத­ர­வாக உள்­ளது. அதற்கு கீழ் வர்த்­த­க­மானால், விலை சரிவு தொடர்ந்து 43 டாலர் வரை நிகழ வாய்ப்பு உள்­ளது.
பொருள் வணிக சந்­தையில் கச்சா எண்ணெயின் இந்த வார அள­வுகள் (1 பீப்பாய்)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) (மே) 3,120 3,075 3,240 3,305

தங்கம் – வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த இரு வாரங்­க­ளாக சரிவு நிலையில் காணப்­பட்­டன. தங்கம், 2.60 விழுக்­காடும், வெள்ளி 8.05 விழுக்­காடும் குறைந்து வர்த்­தகம் ஆகின. தற்­போது, சர்­வ­தேச சந்­தையில், தங்கம் ஒரு அவுன்ஸ் (38.104 கிராம்) 1,268 டாலர், வெள்ளி ஒரு அவுன்ஸ் 17.15 டாலர் என்­ற­ளவில் உள்­ளது.
கடந்த வெள்­ளி­யன்று வெளி­வந்த அமெ­ரிக்க ஜி.டி.பி., விபரம், பொரு­ளா­தாரம் பின்­னேற்றம் அடைந்­ததை சுட்டிக் காட்­டி­யது. காலாண்டு ஜி.டி.பி., 0.7 விழுக்­காடு உயர்­வுடன் காணப்­பட்­டது. இது, 2014ம் ஆண்டின் காலாண்டைக் காட்­டிலும் தொய்­வான நிலை­யாகும். இந்த சூழ்­நி­லையில் அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யான, ‘பெடரல் ரிசர்வ் வங்கி’ தன் வட்­டி­வி­கி­தத்தை உயர்த்தும் முயற்­சியை செப்., 2017 வரை நீட்­டிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், யு.எஸ்.டி., எனப்­படும் அமெ­ரிக்க நாணய கணக்­கீடு குறையும். இதன் மூல­மாக தங்கம் விலை உயரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பொது­வா­கவே, தங்­கத்தில் ஏற்­படும் விலை மாற்­றங்­க­ளுக்கு இரு மடங்­காக வெள்­ளியின் விலை மாறு­படும். இதற்கு வெள்­ளியின் உப­யோகம், ஆப­ரணம் மற்றும் சேமிப்பு தேவையைக் காட்­டிலும், தொழிற்­சாலை பயன்­பா­டு­க­ளுக்கே அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.கடந்த வாரம் நடை­பெற்ற பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் மற்றும் அதன் முடி­வுகள், புதி­தாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளவரின் கொள்கை முடி­வுகள் போன்­றவை, விலை சரிய கார­ண­மா­னது. வரும் வெள்­ளி­யன்று வர உள்ள யு.எஸ்.என்.எப்.பி., டேட்டா வெள்ளி விலை போக்கை தீர்­மா­னிக்கும்.
பொருள் வணிக சந்­தையில் தங்கம் இந்த வார அள­வுகள் (10 கிராம்)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) (ஜூன்) 28,700 28,550 30,120 30,300

பொருள் வணிக சந்­தையில் வெள்ளி இந்த வார அள­வுகள் (1 கிலோ)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) (ஜூலை) 39,650 39,180 40,400 41,000

செம்பு

முந்­தைய மூன்று வாரங்­களில் ஏற்­பட்ட விலை சரிவை அடுத்து கடந்த வாரம் செம்பின் விலை சிறி­த­ளவு உயர்ந்­தது. இதற்கு காரணம், இ.சி.பி., எனப்­படும் ஐரோப்­பிய சென்ட்ரல் பேங்க் நிதி கொள்கை குறித்து கடந்த வாரம் கூட்டம் நடை­பெற்­றது. அதில் வட்டி விகி­தத்தில் எந்த மாற்றம் இல்லை என்றும், டிச., வரை குவாண்­டி­டேடிவ் ஈஸிங் (QE)) தொடரும் என்றும் அறி­வித்­த­துதான்.கடந்த ஆண்டு முதல் காலாண்டை விடவும், 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில், சீனாவின் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட செம்பு இறக்­கு­மதி, 20 விழுக்­காடு குறை­வாகும்.
ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான, மொத்த இறக்­கு­மதி, 6,99,000 டன்­க­ளாகும். மேலும், அமெ­ரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வாரம் அறி­வித்த புதிய வரி சலு­கைகள் நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மாக அமையும் என்­பதால் தொழிற்­சா­லை­க­ளுக்கு உப­யோ­க­மான செம்பு விலை உயர்ந்­துள்­ளது.
பொருள் வணிக சந்­தையில் செம்பின் இந்த வார அள­வுகள் (1 கிலோ)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) 368.50 363.00 377.00 385.00
பங்கு வர்த்­தகம்
கடந்த 4 மாதங்­க­ளாக தொடர்ந்து உயர்ந்த நிலையில் பங்கு வர்த்­தகம் காணப்­ப­டு­கி­றது. என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., குறி­யீட்டு எண்கள் புதிய உச்­சத்தை அடைந்­தன. பி.எஸ்.இ.,யின் குறி­யீ­டான, ‘சென்செக்ஸ்’ அதன், 30,000 புள்­ளி­களைக் கடந்­தது. அது போல, என்.எஸ்.இ.,யின் குறி­யீ­டான, ‘நிப்டி’ 9,300 புள்­ளி­களை கடந்­தது. வரும் நாட்­களில் இந்த உயர்வு தொடரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இன்று விடு­முறை என்­பதால், நாளை வாகன உற்­பத்தி நிறு­வ­னங்கள், நான்­கா­வது காலாண்டு முடி­வு­களை வெளி­யிட உள்­ளன. இம்­முறை அந்த அறிக்­கையில் அந்­நி­று­வ­னங்­களின் சரி­யான வளர்ச்சி விப­ரங்­களை தெரி­விக்க முடி­யாமல் போகலாம்.
காரணம் மார்ச், 30 – 31 தேதி­களில், புதிய மாசு கட்­டுப்­பாட்டு விதிகள் கார­ண­மாக, வாக­னங்­களை மிக அதிக தள்­ளு­படி விலையில் அவை விற்­றன. இரு சக்­கர வாகனம், நான்கு சக்­கர கன­ரக வாக­னங்கள் விற்­பனை குறைந்த அளவில் இருக்கக் கூடும். இந்த வாரத்தில் மிகவும் கவ­னிக்க வேண்­டிய காலாண்டு முடி­வுகள் வங்கி துறை சார்ந்­த­தாகும். வங்­கித்­து­றையில் முக்­கி­ய­மான முடி­வுகள் ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் எச்.டி.எப்.சி., ஆகும். மேலும் நிதித் துறை சார்ந்த இதர நிறு­வ­னங்­க­ளான ஆர்.பி.எல்., வங்கி, ஈக்­யூடாஸ் பாரத் பைனான்ஸ் போன்­ற­வையும் முக்­கி­ய­மா­னவை ஆகும்.
டயர் உற்­பத்­தியில் உள்ள, எம்.ஆர்.எப்., அப்­பல்லோ மற்றும் எக்­ஸைடு பேட்­டரி ஆகிய நிறு­வ­னங்­களின் காலாண்டு அறிக்­கையும் இவ்­வாரம் வெளி­வர உள்­ளது. ஏப்., மாதத்தில் பி.எம்.ஐ., எனப்­படும் சேவை மற்றும் தொழிற்­சாலை துறையின் விபரம் சந்­தையின் போக்கில் மாற்றம் நிகழ உதவும்.எப்.ஐ.ஐ., விற்கும் நிலை­யிலும், டி.ஐ.ஐ., கொள்­முதல் நிலை­யிலும் உள்­ளன. சர்­வ­தேச சந்­தையில் அமெ­ரிக்க வட்டி விகிதம் குறித்த கூட்டம், மே 5ல் வெளி­யாக இருக்கும் என்.எப்.ஏ., எனப்­படும் பொரு­ளா­தார காரணி போன்­ற­வற்­றையும் முத­லீட்­டா­ளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.என்.எஸ்.இ.,யின் குறி­யீ­டான நிப்டி, 9200 – 9460 என்ற நிலையில் இந்த வாரம் வர்த்­தகம் ஆகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்த வாரத்தில் கவ­னிக்க வேண்­டிய 5 பங்­குகள் (விலை – ரூபாயில்)நிறு­வனம் விலை ஆர் எஸ் ரிலையன்ஸ் இன்ப்ரா., 596.25 624 573 எல் அண்டு டி பைனான்ஸ் 127.60 13­4–­1­41 121 பவர்­கிரிட் 208 21­3–­2­20 203பஜாஜ் எலக்ட்­ரிக்கல்ஸ் 351.80 367 344

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)