கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார்கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார் ... சென்செக்ஸ் மீண்டும் 30 ஆயிரம் புள்ளிகள் வர்த்தகம் சென்செக்ஸ் மீண்டும் 30 ஆயிரம் புள்ளிகள் வர்த்தகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முதிர்ச்சியும், பொறு­மை­யுமே முதலீட்டாளர்களுக்கு அவசியம்: ஷ்யாம் சேகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
04:18

இந்­திய பங்குச் சந்தை, எக்­கா­லத்­திலும் இல்­லாத உயர் அளவை, கடந்த வாரம் தொட்டு, சாதனை படைத்­தது. இந்த சாத­னைக்கு முக்­கிய காரணம், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­களே ஆவர். எப்.ஐ.ஐ.,கள் கடந்த வாரமும் தொடர்ந்து இந்­திய பங்­கு­களை, 1,926 கோடி ரூபாய்க்கு விற்­றனர்.
அவர்­களின் விற்­ப­னை­யையும் விஞ்சும் அளவில், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் பங்கு முத­லீடு, 4,911 கோடி ரூபா­யாக அமைந்­தது. வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் தொடர்ந்து, மூன்று வாரங்­க­ளாக, இந்­திய பங்­கு­களை விற்றும், சந்தை தொடர்ந்து உயர்ந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­திய பங்­குகள் மீதுள்ள அப­ரி­மி­த­மான உள்­நாட்டு நம்­பிக்கை, சந்­தைக்கு பக்­க­ப­ல­மாக தொட­ருமா என்­ப­தற்கு, வரும் வாரங்கள் விடை தரும். ஆனால், இந்த நம்­பிக்­கைக்­கான அடிப்­படை காரணம், பிற சொத்து முத­லீ­டுகள் வலு­வி­ழந்­ததே ஆகும். வங்கி வைப்பு கணக்­குகள், தங்கம், நிலம் மற்றும் வீடு­களில் செய்யும் முத­லீ­டுகள், இனி தேவை­யான லாபம் ஈட்­டாது என்ற அள­வீடே, இந்த மாற்­றத்­திற்கு முக்­கிய காரணம்.
ஒரு சொத்து வகையில் இருந்து, இன்­னொரு சொத்து வகைக்கு மாறும் போது, அந்த மாற்றம் தங்­க­ளுக்கு உகந்­தது தானா என, ஆய்வு செய்த பின்­னரே, பண ஒதுக்­கீ­டுகள் செய்ய, முத­லீட்­டா­ளர்கள் முனைய வேண்டும். ஆனால், பெரு­வா­ரி­யான முத­லீட்டு முடி­வுகள், இந்த ஆய்­வின்­றியே எடுக்­கப்­ப­டு­கின்­றன. அப்­படி எடுக்­கப்­பட்ட முடி­வுகள், சந்தை ஒரு­வேளை தற்­கா­லிக சரிவை சந்­தித்தால், அவை நிலை­யா­ன­வை­யாக தொடர்­வ­தில்லை என்­பதே, நம் சமீ­ப­கால வர­லாறு. இந்த ஆண்டின், முக்­கிய முத­லீட்டு தேவையே முதிர்ச்சியும், பொறு­மையும் தான். பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்கள், இந்­திய பங்­கு­களை தொடர்ந்து விற்­றாலும், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் தொடர்ந்து பொறுமை காத்து, மேலும், அதி­க­மான முத­லீ­டு­களை தொடர்ந்து மேற்­கொள்ள வேண்டும்.
சந்தை வீழ்ந்­தாலும், பொறு­மையும், நம்­பிக்­கையும் சிறிதும் குறை­யாமல், நம் உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் தொடர்ந்து பய­ணிக்க வேண்டும். பரு­வ­மழை துவங்க, இன்னும் ஒரு மாதம் இருக்கும் நேரத்தில், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் இந்த புதிய வேகமும், நம்­பிக்­கையும் எப்­படி பய­ணிக்­கின்­றன என்­பதை, நாம் அனை­வரும் கூர்ந்து கவ­னிக்க வேண்­டி­யது மிக அவ­சியம். அதே நேரத்தில், சொந்த நம்­பிக்­கையை வளர்த்து, பொறுமை குணத்தை தொடர்ந்து கடை­பி­டிப்­பது, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ருக்கும் அதை­வி­டவும் மிகவும் அவ­சியம்.
நிறு­வ­னங்கள் தொடர்ந்து கடந்த ஆண்­டுக்­கான லாபக்­க­ணக்­கு­களை அறி­வித்த வண்ணம் உள்­ளன. முதலில் அறி­விக்­கப்­பட்ட நிறு­வ­னங்­களின் முடி­வு­களில் விற்­பனை உயர்ந்த அள­விற்கு, லாபம் உய­ர­வில்லை என்­பதே முக்­கிய அம்சம். பொது­வாக, முடி­வு­களை முதலில் அறி­விக்கும் நிறு­வ­னங்கள் சிறப்­பான லாப வளர்ச்சி காட்டும். இந்த ஆண்டு முதலில் வந்த அறி­விப்­பு­களில் நிலவும் மந்த வளர்ச்சி கவலை அளிக்­கி­றது. இனி வரும் வாரத்தில் அறி­விக்­கப்­படும் நிறு­வ­னங்­களின் ஆண்டு முடி­வுகள், சிறந்த லாப வளர்ச்சி காட்ட வேண்டும். அப்­படி இன்றி, அந்த முடி­வுகள் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்தால், அவை சந்­தையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.
இன்னும் பெரு­வா­ரி­யான நிறு­வ­னங்கள் ஆண்டு முடி­வு­களை அறி­விக்க வேண்­டிய சூழலில், அந்த முடி­வு­களை சீரான ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி, அதன்பின் முத­லீட்டு முடி­வு­களை எடுப்­பது நல்­லது. முடி­வு­களை இறு­தி­யாக அறி­விக்கும் நிறு­வ­னங்­களின் முடி­வுகள், பொது­வாக மோச­மாக அமையும். ஆகவே, முடி­வு­களை எதிர்­பார்த்து முத­லீடு செய்­வதை விட, அவற்றை ஆய்வு செய்­தபின் முத­லீடு குறித்து முடி­வெ­டுப்­பது நல்­லது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)