பிரிட்­டனை மிஞ்சும் இந்­திய பொரு­ளா­தாரம்பிரிட்­டனை மிஞ்சும் இந்­திய பொரு­ளா­தாரம் ... 1.51 லட்சம் கார்கள் விற்பனை மாருதி இந்தியா சாதனை 1.51 லட்சம் கார்கள் விற்பனை மாருதி இந்தியா சாதனை ...
இ.பி.எப்., உறுப்­பி­னர்களுக்கு மருத்­துவர் சான்­றிதழ் இன்றி முன்­பணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
04:19

புது­டில்லி : இ.பி.எப்., எனப்­படும், தொழி­லாளர் சேம நல நிதியத்தின் உறுப்­பி­னர்கள், மருத்­துவ சிகிச்­சைக்கு, மருத்­துவர் சான்­றிதழ் இன்றி, தங்கள், இ.பி.எப்., கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி அம­லுக்கு வந்­துள்­ளது.
தற்­போது, இ.பி.எப்., உறுப்­பி­னர்கள், தங்­க­ளுக்கோ அல்­லது தங்கள் குடும்­பத்­தி­ன­ருக்கோ, மருத்­துவ சிகிச்­சைக்­காக முன்­பணம் பெற, மருத்­துவர் சான்­றி­த­ழுடன், ஏரா­ள­மான சான்­று­க­ளையும், விண்­ணப்­பங்­க­ளையும் சமர்ப்­பிக்க வேண்­டி­யுள்­ளது. அத்­துடன், இ.பி.எப்., உறுப்­பி­னர்கள் அல்­லது அவர்­களின் குடும்­பத்­தினர், இ.எஸ்.ஐ., எனப்­படும், தொழி­லாளர் அர­சினர் ஈட்­டு­றுதி திட்­டத்தில் இடம் பெற­வில்லை என, பணி­பு­ரியும் நிறு­வ­னத்­திடம் சான்று பெற வேண்டும்.
அது போல, மாற்­றுத்­தி­ற­னா­ளிகள், தங்­க­ளுக்குத் தேவை­யான சாத­னங்­களை வாங்க, தொழி­லாளர் சேம நல நிதி­யத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அதி­காரி அல்­லது பயிற்சி மருத்­து­வ­ரிடம் சான்­றிதழ் பெற வேண்டும். இது போன்ற நடை­மு­றை­களால், இ.பி.எப்., உறுப்­பி­னர்­க­ளுக்கு, தேவை­யற்ற அலைச்சல், பணம், நேரம் வீணா­வதை கருத்தில் கொண்டு, மருத்­துவ சிகிச்­சைக்கு முன்­பணம் பெறு­வ­தற்கு, மருத்­துவர் சான்­றிதழ் கோரும் சட்ட விதி­மு­றை­களில், திருத்தம் செய்­யப்­பட்டு உள்­ளது.
அது போல, மாற்­றுத்­தி­ற­னா­ளிகள், தங்­க­ளுக்கு தேவை­யான சாத­னங்கள் வாங்­கு­வ­தற்கு, மருத்­துவ சான்று பெறு­வ­தற்­கான விதி­யிலும், மத்­திய தொழி­லாளர் அமைச்­சகம் திருத்தம் செய்­துள்­ளது. அத்­துடன், ஏரா­ள­மான விண்­ணப்ப படி­வங்­க­ளுக்கு பதி­லாக, இ.பி.எப்., உறுப்­பி­னர்கள், தங்­களின் சுய சான்­றுடன், ஒரே விண்­ணப்ப படி­வத்தை பூர்த்தி செய்து, முன்­பணம் பெறவும் வசதி செய்­யப்­பட்டு உள்­ளது.
எதற்கு?இ.பி.எப்., உறுப்­பி­னர்கள், எலும்­பு­ருக்கி நோய், தொழுநோய், பக்­க­வாதம், புற்­றுநோய், மன­நிலை பாதிப்பு, இதய நோய் உள்­ளிட்ட நோய்­க­ளுக்கு சிகிச்சை பெற, தங்கள் கணக்கில் இருந்து, முன்­பணம் பெறலாம். மருத்­து­வ­ம­னையில், ஒரு மாதம் அல்­லது அதற்கு மேற்­பட்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெறு­வ­தற்கும், அறுவை சிகிச்சை உள்­ளிட்ட செல­வு­க­ளுக்கும் பணம் கோரலாம்.
எவ்­வ­ளவு?இ.பி.எப்., உறுப்­பி­னர்கள், ஆறு மாதங்­க­ளுக்கு மிகாத, தங்­களின் அடிப்­படை ஊதியம் மற்றும் அக­வி­லைப்­ப­டியை, மருத்­துவ சிகிச்­சைக்கு, முன்­ப­ண­மாக பெறலாம் அல்­லது தங்­களின் சொந்த பங்­க­ளிப்­பையும், அதற்­கான வட்டித் தொகையை பெறலாம்.
எத்­தனை?இ.பி.எப்.,பில் நான்கு கோடிக்கும் அதி­க­மானோர் உறுப்­பி­ன­ராக உள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)