‘ஜி.எஸ்.டி., அமலாகும் முன் விலையை உயர்த்தினால் நடவடிக்கை’‘ஜி.எஸ்.டி., அமலாகும் முன் விலையை உயர்த்தினால் நடவடிக்கை’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.80 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.80 ...
அரசுக்கு ரூ.400 கோடி இழப்பிற்கு வாய்ப்பு: ‘ஆர்ஜியோ’ நிறுவனம் குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2017
03:35

புதுடில்லி : ‘தொலை தொடர்பு சேவை உரி­மத்­திற்­கான முன்­கூட்­டிய தவ­ணைத் தொகையை, குறை­வாக செலுத்­தி­ய­தன் மூலம், ஏர்­டெல், வோட­போன், ஐடியா ஆகிய மூன்று நிறு­வ­னங்­கள், மத்­திய அர­சுக்கு, 400 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான இழப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வாய்ப்­புள்­ளது’ என, முகேஷ் அம்­பா­னி­யின், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம், தொலை தொடர்பு அமைச்­ச­கத்­தி­டம் புகார் அளித்­துள்­ளது.

அதன் விப­ரம்: தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­கள், ஒவ்­வொரு காலாண்­டி­லும், மொத்­தம் ஈட்­டப்­படும் உத்­தேச வரு­வாயை மதிப்­பிட்டு, அதன் அடிப்­ப­டை­யில், தொலை தொடர்பு சேவை உரி­மத்­திற்­கான தவ­ணையை, முன்­கூட்­டியே செலுத்த வேண்­டும். அவ்­வாறு செலுத்­தும் தொகை, முந்­தைய காலாண்டை விட, குறை­வாக இருக்­கக் கூடாது என, தொலை தொடர்பு சட்­டம் கூறு­கிறது. ஆனால், ஏர்­டெல் நிறு­வ­னம், 2016 – 17ம் நிதி­யாண்­டின், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், உரிம கட்­ட­ண­மாக, 950 கோடி ரூபாய் தான் செலுத்தி உள்­ளது. இது, மூன்­றா­வது காலாண்­டில் செலுத்­தப்­பட்ட, 1,099.50 கோடி ரூபாயை விட, 150 கோடி ரூபாய் குறை­வா­கும்.

இதே காலத்­தில், வோட­போன் நிறு­வ­னம், 746.80 கோடி ரூபா­யில் இருந்து, 200 கோடி ரூபாய் குறைத்து, 550 கோடி ரூபாய் என்ற அள­விற்கே உரிம கட்­ட­ணம் செலுத்தி உள்­ளது. ஐடியா செல்­லு­லார் நிறு­வ­ன­மும், மூன்­றா­வது காலாண்­டில் செலுத்­திய தொகையை விட, 60 கோடி ரூபாய் குறைத்து, 609.40 கோடி ரூபாய் மட்­டுமே செலுத்தி உள்­ளது. ஆக, இந்த மூன்று நிறு­வ­னங்­களும், ஒரு­த­லை­பட்­ச­மாக, வேண்­டு­மென்றே திட்­ட­மிட்டு, முன்­கூட்டி செலுத்த வேண்­டிய உரிம கட்­ட­ணத்தை குறை­வாக செலுத்தி உள்ளன. இதன் மூலம், இந்­நி­று­வ­னங்­கள், மத்­திய அர­சுக்கு, 400 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான இழப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வாய்ப்பு உள்­ளது.

ஆர்­ஜியோ நிறு­வ­னம், விதி­மு­றைப்­படி, உரிய உரிம கட்­ட­ணத்தை முன்­கூட்­டியே செலுத்தி உள்­ளது. ஆகவே, தொலை தொடர்பு சேவை உரிம கட்­டண விதி­மு­றை­களை மீறிய நிறு­வ­னங்­கள் மீது, உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இதில், தாம­தம் காட்­டு­வது, தவ­றான முன்­னு­தா­ர­ணம் ஆகி­வி­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

மறுப்பு:ஆர்­ஜியோ குசும்­புத்­த­ன­மாக, அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­ சாட்டை சுமத்­தி­யுள்­ளது. தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­கள், தற்­போது நெருக்­க­டி­யில் உள்ளன. அவற்­றின் நிதி நில­வ­ரம் கார­ண­மாக, மூன்­றாம் காலாண்டை விட, நான்­காம் காலாண்டு வரு­வாயை அதி­கம் மதிப்­பி­டா­மல், உள்­ள­ப­டியே மதிப்­பிட்டு, அதன் அடிப்­ப­டை­யில், உரிம கட்­ட­ணத்தை செலுத்த அனு­மதி கோரி, தொலை தொடர்பு துறை­யி­டம் விண்­ணப்­பித்­தோம்; அதற்­கான ஆதா­ரங்­க­ளை­யும் அளித்­துள்­ளோம். அந்த கோரிக்­கை­யில், நடப்பு காலாண்­டிற்­கான உரிம கட்­ட­ணத்தை, ஏப்., 15க்குள் செலுத்தி விடு­வ­தா­க­வும், உறுதி அளித்­தி­ருந்­தோம். அசல் வரு­வாய் அடிப்­ப­டை­யில், உரிம கட்­ட­ணம் செலுத்­தப்­பட்டு உள்­ளது. இதில், மத்­திய அர­சுக்கு எந்­த­வித இழப்­பும் இல்லை.-ராஜன் எஸ்.மேத்­யூஸ், தலைமை இயக்­கு­னர், இந்­திய மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)