விவசாயிகளுக்கு டெபிட் கார்டு; வட்டி இல்லாமல் கூடுதல் பற்றுவிவசாயிகளுக்கு டெபிட் கார்டு; வட்டி இல்லாமல் கூடுதல் பற்று ... வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்ய விரும்பும் ஊழியர்கள்; விரும்பாத நிறுவனங்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்ய விரும்பும் ஊழியர்கள்; விரும்பாத ... ...
‘இந்திய நிறுவனங்களை தவிர்க்கும் எந்த நாடும் இங்கு முதலீடு செய்ய முடியாது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2017
23:46

புதுடில்லி : ‘‘இந்­திய நிறு­வ­னங்­கள் வர்த்­த­கம் புரிய தடை­யாக உள்ள நாடு­க­ளுக்கு, இந்­தி­யா­வில் முத­லீடு செய்ய அனு­மதி கிடை­யாது,’’ என, மத்­திய மின் துறை அமைச்­சர் பியுஷ் கோயல் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்து உள்­ளார்.

சீனா­வைச் சேர்ந்த, மின் நிறு­வ­னங்­களின் முத­லீ­டு­க­ளுக்கு தடை விதிப்­பது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­வ­தாக, சமீ­பத்­தில் தக­வல் வெளி­யா­னது. இந்­நி­லை­யில், அமைச்­ச­ரின் பேச்சு, மின் துறை­யில் சீனா­வின் யதேச்­ச­தி­கா­ரத்­திற்கு விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­யாக கரு­தப்­ப­டு­கிறது. சீனா, பாது­காப்பு கார­ணங்­களை சுட்­டிக்­காட்டி, மின் முனை­யம் மற்­றும் மின் வினி­யோக திட்­டங்­களில், அன்­னிய முத­லீட்டை அனு­ம­திக்க மறுத்து வரு­கிறது. இந்­தியா, இதே திட்­டங்­க­ளுக்கு, 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அத­னால், இத்­திட்­டங்­களில், சீன நிறு­வ­னங்­கள் பங்­கேற்று வரு­கின்றன.

இது குறித்து, டில்­லி­யில், மின் நுகர்­வோர்­க­ளுக்­கான, ‘சேவா’ என்ற மொபைல், ‘ஆப்’ வெளி­யீட்டு விழா­வில், பியுஷ் கோயல் பேசி­ய­தா­வது: இந்­திய மின் துறை­யில், அன்­னிய நிறு­வ­னங்­கள் தாரா­ள­மாக முத­லீடு செய்ய அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. அது போல, இந்­திய நிறு­வ­னங்­களும், அயல்­நா­டு­களில் வர்த்­த­கம் புரிய அனு­மதி அளிக்க வேண்­டும். பொதுத் துறை­யில், பவர் கிரிட் போன்ற, மின் வினி­யோக நிறு­வ­னங்­கள் எந்த நாட்­டி­லும் முத­லீடு செய்­யவோ அல்­லது மின் வினி­யோக திட்­டங்­களை மேற்­கொள்­ளவோ முடி­யாது என்­றால், அந்த நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களும், இந்­தி­யா­வில் அது போன்ற முத­லீ­டு­க­ளையோ, திட்­டங்­க­ளையோ மேற்­கொள்ள அனு­ம­திக்க மாட்­டோம். இந்­தியா, பரஸ்­பர வர்த்­த­கத்­தையே விரும்­பு­கிறது. குறிப்­பிட்ட நாட்­டின் முத­லீட்­டிற்கு தடை விதிக்க வேண்­டும் என்ற எண்­ண­மெல்­லாம், இந்­தி­யா­விற்கு கிடை­யாது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)