ஆயுள் காப்­பீடு மீது கடன் பெற முடி­யுமா?ஆயுள் காப்­பீடு மீது கடன் பெற முடி­யுமா? ... உங்கள் நிதி வாழ்க்கை எளி­மை­யாக இருக்­கட்டும்! உங்கள் நிதி வாழ்க்கை எளி­மை­யாக இருக்­கட்டும்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பேமென்ட் வங்­கிகள் ஒரு ஒப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
05:09

டிஜிட்டல் வாலெட் சேவை நிறு­வ­ன­மான பேடிஎம், பேமென்ட் வங்­கியை துவக்­கி­யுள்­ளது. ஏற்­க­னவே ஏர்டெல் மற்றும் இந்­தியா போஸ்ட் சார்பில் பேமென்ட் வங்கி துவக்­கப்­பட்­டுள்ள நிலையில், இந்த வரி­சையில் பேடிஎம் பேமென்ட் வங்­கியும் சேர்ந்­துள்­ளது. பேமென்ட் வங்­கிகள் புதிய வகை வங்­கி­க­ளாகும். இவை அதி­க­பட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை ‘டிபாசிட்’ ஏற்­கலாம். டெபிட், ஏ.டி.எம்., கார்டு வழங்­கலாம். கடன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்க முடி­யாது. புதிய வங்­கிகள் வழங்கும் சேவைகள் பற்றி ஒரு பார்வை:
வட்டி விகிதம்
பேடிஎம் பேமென்ட் வங்கி4 சத­வீதம்
ஏர்டெல் பேமென்ட் வங்கி7.25 சத­வீதம்
இந்­தியா போஸ்ட் பேமென்ட் வங்கி5.5 சத­வீதம் வரை

இணைய வழி பண பரி­மாற்றம்
பேடிஎம் பேமென்ட் வங்கி இணைய வழி பண பரி­வர்த்­த­னையை இல­வ­ச­மாக வழங்­கு­கி­றது. இந்­தியா போஸ்ட் கிளையில் நிகழும் பரி­வர்த்­த­னைக்கு கட்­டணம் வசூ­லிக்­கி­றது. நெப்ட் கட்­டணம் பரி­வர்த்­த­னைக்கு, 2.5 முதல் 5 ரூபாய். ஐ.எம்.பி.எஸ்., கட்­டணம் பரி­வர்த்­த­னைக்கு, 5 ரூபாய். ஏர்டெல் வங்கி கணக்­கு­க­ளுக்கு இடை­யி­லான பரி­வர்த்­தனை இல­வசம். மற்ற வங்கி கணக்­கு­க­ளுக்கு பரி­வர்த்­தனை தொகையில், 0.5 சத­வீதம்
டெபிட் கார்டு வசதி
ஏர்டெல் பேமென்ட் வங்கி, விர்ச்­சுவல் மாஸ்டர் கார்டு வழங்­கு­கி­றது. பேடிஎம் ரூபே டெபிட் கார்டு, விர்ச்­சுவல் கார்டு வழங்­கு­கி­றது. ஆண்டு கட்­டணம், டெலி­வரி கட்­டணம் உண்டு. இந்­தியா போஸ்ட் டெபிட் கார்டை இல­வ­ச­மாக அளிக்­கி­றது. இரண்டாம் ஆண்டு முதல் பரா­ம­ரிப்பு கட்­டணம் உண்டு. ஆட் ஆன் கார்­டுக்கும் கட்­டணம் உண்டு.
ஏ.டி.எம்., பரி­வர்த்­தனை
பேடிஎம் பேமென்ட் வங்கி மெட்ரோ அல்­லாத நக­ரங்­களில் மாதம், 5 முறை இல­வ­ச­மாக பணம் எடுக்க அனு­ம­திக்­கி­றது. மெட்­ரோக்­களில் இது மூன்று முறை. அதன் பிறகு ஒரு முறை பணம் எடுக்க, 20 ரூபாய் கட்­டணம். ஏர்டெல் மையங்கள் மூலம் பணம் எடுக்கும் போது, அந்த தொகையில், 0.65 சத­வீதம் கட்­டணம் உண்டு. இந்­தியா போஸ்ட் தனது மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி, ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால், இல­வ­ச­மாக அனு­ம­திக்கும். மற்ற வங்கி, ஏ.டி.எம்.,கள் எனில் மெட்­ரோக்­களில் மாதம், 3 முறை மற்றும் மெட்ரோ அல்­லாத நக­ரங்­களில் மாதம், 5 முறை கட்­டணம் இல்லை.
குறைந்தபட்ச தொகை
‘பேடி­எம்’மில் குறைந்தபட்ச தொகை இல்லை. ஏர்­டெல்லில், 100 ரூபாய் துவக்க டிபாசிட் செலுத்த வேண்டும். இந்­தியா போஸ்ட்டில், 100 ரூபாய் டிபாசிட் செய்து கணக்கு துவக்க வேண்டும். ஆனால், குறைந்­த­பட்ச தொகை கிடை­யாது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)