பேமென்ட் வங்­கிகள் ஒரு ஒப்­பீடுபேமென்ட் வங்­கிகள் ஒரு ஒப்­பீடு ... எஸ்பிஐ.,ன் புதிய சேவை கட்டணம் : 10 அம்சங்கள் எஸ்பிஐ.,ன் புதிய சேவை கட்டணம் : 10 அம்சங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் நிதி வாழ்க்கை எளி­மை­யாக இருக்­கட்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
05:10

மற்­ற­வர்கள் செய்­வதை பார்த்து, அதே போல செய்ய வேண்டும் எனும் நிர்ப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­திக்­ கொள்ளும் நிதி அழுத்தம், பொரு­ளா­தார நோக்கில் பாதிப்பை உண்­டாக்கும்.

கோடை விடு­மு­றையை குதுா­க­ல­மாக கழித்­த­வர்கள், தங்கள் பயண அனு­ப­வத்தை நண்­பர்­களிடமும், சகாக்­க­ளிடம் உற்­சா­க­மாக பகிர்ந்து கொள்­வது இயல்­பா­னது தான். அதிலும் குறிப்­பாக சிறுவர், சிறு­மியர் தாங்­களின் சுற்­றுலா அனு­ப­வத்தை கண்கள் விரிய, பெரு­மி­தத்­துடன் தங்­க­ளுக்குள் பேசிக்­கொள்­ளலாம். அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்­வது என்­பது வழக்­க­மா­னது தான் என்­றாலும், இதனால் ஏற்­ப­டக்­கூடிய தாக்கம், ஒரு­வரின் நிதி வாழ்க்­கை­யையும் பாதிக்­கி­றது என்­பதை அறிய வேண்டும். மற்­ற­வர்கள் சென்று வந்த இடங்­க­ளுக்கு நாமும் செல்ல வேண்டும் என்ற நிர்ப்­பந்­தத்தை இவை உரு­வாக்­கு­கின்­றன.இணையம் உள்­ளிட்ட வச­தி­களால் பய­ணங்­களை திட்­ட­மி­டு­வதும் எளி­தாகி இருக்­கி­றது. பயண அனு­ப­வங்­களை மற்­ற­வர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­வதும் சுல­ப­மாக உள்­ளது.

சுற்­றுலா போட்டி
சுற்­றுலா அனு­ப­வங்­களை ஆர்­வ­மாக பகிர்ந்து கொள்­வ­தோடு, யார் சிறந்த இடத்­திற்கு சுற்­றுலா சென்று வந்­தது என, பெரு­மிதம் கொள்­வ­திலும் பிள்­ளைகள் மத்­தியில் போட்டி நில­வு­கி­றது. இந்த போட்­டிக்கு பெரி­ய­வர்­களும் விதி­வி­லக்­கல்ல. எனினும், இந்த போட்­டியை தீவி­ர­மாக எடுத்­துக் ­கொண்டு, மற்­ற­வர்கள் சென்று வந்­தது போன்ற இடங்­க­ளுக்கு நாமும் ஆடம்பர சுற்­றுலா செல்ல வேண்டும் எனும் எண்ணம் பல­ருக்கு உண்­டாக வாய்ப்­புள்­ளது. இந்த ஆண்டு தவ­ற­விட்­டாலும், அடுத்த ஆண்டு பெரிய அளவில் சுற்­றுலா சென்று வர­வேண்டும் என, அவர்கள் நினைக்­கலாம்.சுற்­றுலா என்­றில்லை, டி.டீ.எச்., சேவை, மொபைல்போன், ஆடைகள், கல்வி, ரெஸ்­டா­ரென்ட்கள், சொகுசு கார் என, மேலும் பல விஷ­யங்­களில் மற்­ற­வர்கள் செய்­வதை பார்த்து செய்யும் பழக்கம் பர­வ­லாக இருக்­கி­றது. இத்­த­கைய நிர்ப்­பந்­தத்தை அலட்­சியம் செய்ய முடி­யாமல் நிறை­வேற்ற முற்­படும் போது, அவை நிதி அழுத்­த­மாக மாறி­வி­டு­வ­தாக நிதி வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.

சொகுசு கார் விருப்பம்
மற்­ற­வர்­க­ளுடன் ஒப்­பிட்டு பார்ப்­பது தவிர்க்க இய­லா­தது என்­றாலும், இத­ன­டிப்­ப­டையில் வாழ்க்­கைத்­ தே­வை­களும் அமையும் போது நிதி அழுத்தம் ஏற்­ப­டு­கி­றது. சொந்­த­மாக கார் வைத்­தி­ருப்­பவர் சிறிய காரில் திருப்தி அடை­யாமல், அலு­வ­லக சகா போல ஆடம்­ப­ர­மான பெரிய கார் வாங்க நினைத்தால் அவ­ரது பட்­ஜெட்டில் துண்டு விழலாம். அதே போலவே, டி.டீ.எச்., சேவையில் திருப்தி கொள்­ளாமல், நண்­பர்­களை பார்த்து இணைய ஸ்டீரிமிங் சேவைக்கு சந்தா செலுத்­தி­னாலும் கூடுதல் செல­வாகும்.

ஆடம்­ப­ர­மான ரெஸ்­டா­ரென்ட் ­களை நாடு­வது, சொகுசு அம்­சங்கள் கொண்ட வீடு வாங்க நினைப்­பது என, மற்­ற­வர்­களை பார்த்து ஏற்­படும் நிர்ப்பந்தம் பல விதங்­களில் பாதிக்­கி­றது.வீடு மற்றும் அலு­வ­லகம் என, இரண்டு இடங்­க­ளி­லுமே இத்த­கைய தாக்கம் ஏற்­ப­டலாம். ஆனால், மற்­ற­வர்கள் வாழ்க்கை முறையை பார்க்கும் ஒருவர், அதன் பின்னே இருக்கும் நிஜத்தை அறிந்து கொள்ள முயற்­சிப்­ப­தில்லை. ஆடம்­பர சுற்­று­லா­வுக்கு சென்று வந்­தவர் அதற்­காக தனி­நபர் கடன் வாங்­கி­யி­ருக்­கலாம்.

எப்­படி தவிர்ப்­பது?
மற்­ற­வர்கள் வாழ்க்கை முறை தாக்­கத்தின் கார­ண­மாக, நிதி முடி­வுகள் அமை­யாமல் இருக்க நிதி வல்­லு­னர்கள் சில யோச­னை­களை முன் வைக்­கின்­றனர். செலவு செய்யும் போது ஆடம்­ப­ரத்தை பார்க்­காமல், அதனால் ஏற்­படும் அனு­ப­வத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்­கின்­றனர். 50,000 ரூபாய் செலவு செய்து, அக்­கம்­பக்­கத்­தினர் வியக்க பிறந்­தநாள் விழா கொண்­டா­டு­வதை விட, பல ஆண்­டுகள் கழித்தும், பிள்­ளைகள் நினைத்து மகி­ழக்­கூ­டிய வகையில், அந்த கொண்­டாட்டம் அமை­வதே சிறந்­த­தாக இருக்கும்.

அதே போல மற்­ற­வர்­களை எட்­டிப்­பி­டிக்க வேண்டும் என நினைக்­காமல் இருக்க வேண்டும் என்­கின்­றனர். மாறாக குடும்­பத்தின் தேவை அறிந்து, அவற்றை நிறை­வேற்­றிக் ­கொள்ள முயற்­சிக்க வேண்டும். செல­வு­களை மேற்­கொள்ளும் போது பட்­ஜெட்டை மனதில் கொள்ள வேண்டும். சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­படும் புகைப்­படம் மற்றும் தக­வல்கள் தாக்கம் செலுத்­தவும் அனு­ம­திக்க கூடாது. தேவை­யில்­லாத செல­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நிகழ்­வுகள் மற்றும் அழைப்­பு­களை நிரா­க­ரிக்கும் பக்­கு­வம் வேண்டும். மற்­ற­வர்கள் போல வாழ்­வதை விட, ஒருவர் தான் விரும்பும் வகையில் வாழ்­வ­தற்­கான வழி­களை தேடினால், அவ­ரது நிதி வாழ்க்­கையும் சிறப்­பாக அமையும்.

நிதி அழுத்தம் பாதிக்­காமல் இருக்க...
* தேவை மற்றும் விருப்­பங்­க­ளுக்­கான வேறு­பாட்டை அறிய வேண்டும்.
* ஆடம்­ப­ரத்தை விட, அனு­ப­வமே முக்­கியம் என உணர வேண்டும்.
* வாழ்க்­கைத்­ தே­வைகள் நிதி நிலை மற்றும் இலக்­கு­க­ளுக்கு ஏற்ப அமைய வேண்டும்.
* சமூக ஊடக கருத்­துக்கள் அடிப்­ப­டையில் வாழ்க்கைத் தேவைகள் அமை­யக்­கூ­டாது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)