பீம் செய­லிக்கு வழி­காட்டும் இணை­ய­தளம்பீம் செய­லிக்கு வழி­காட்டும் இணை­ய­தளம் ... வரி சேமிப்பு முத­லீடு சிறப்­பாக திட்­ட­மி­டு­வது எப்­படி? வரி சேமிப்பு முத­லீடு சிறப்­பாக திட்­ட­மி­டு­வது எப்­படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அவ­சர கால நிதி சேமிப்புக்கு பின் செய்ய வேண்டியவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
00:19

நிதி திட்­ட­மி­டலில் அவ­சர நிதியின் முக்­கி­யத்­து­வத்தை குறைத்து மதிப்­பி­டு­வ­தற்­கில்லை. ஆறு மாத காலத்­திற்­கான அடிப்­படை செல­வு­க­ளுக்கு தேவை­யான தொகையை அவ­சர கால நிதி­யாக சேமித்து வைத்­தி­ருக்க வேண்டும். எதிர்­பா­ராமல் ஏற்­படும் நெருக்­க­டியின் போது இந்த நிதி பாது­காப்­பாக அமையும். நிதி திட்­ட­மி­டலில் முதல் தேவை­யாக இது அமை­கி­றது. சரி, அவ­சர கால நிதியை சேமித்த பின் என்ன செய்ய வேண்டும்…

ஓய்­வூ­திய பாது­காப்பு:
அவ­சர கால நிதியை வெற்­றி­க­ர­மாக உரு­வாக்­கி­ய­தற்­காக, முதலில் உங்­க­ளுக்கு நீங்­களே சபாஷ் போட்­டுக்­கொள்­ளுங்கள். இனி மற்ற நிதி தேவை­களில் கூடுதல் கவனம் செலுத்­துங்கள். சேமிப்பின் ஒரு பகு­தியை ஓய்­வூ­திய நிதியில் செலுத்­துங்கள். ஏற்­க­னவே ஓய்­வூ­திய திட்­டத்தில் இணைந்­தி­ருந்தால் அதற்­கான பங்­க­ளிப்பை அதி­க­மாக்­கவும். இல்லை எனில், பொருத்­த­மான ஓய்­வூ­திய திட்டம் ஒன்றில் இணை­யவும்.

இல்லம் சங்­கீதம்!
சொந்த வீடு வாங்கும் திட்டம் இருந்தால், அதற்­கான திட்­ட­மி­டலை துவங்கி, சேமிக்­கத்­ து­வங்­குங்கள். வீட்­டுக்­கடன் பெறும் போது செலுத்த வேண்­டிய முன் பணத்­திற்­காக சேமிக்­கவும். ஏற்­க­னவே வீட்­டுக்­கடன் பெற்­றி­ருந்தால், முன் கூட்­டியே ஒரு பகு­தியை செலுத்தி, கடன் சுமையை குறைப்­பதில் கவனம் செலுத்­தலாம். சிறுக சேமித்து ஒரு குறிப்­பிட்ட தொகையை செலுத்­து­வதன் மூலம் வட்­டியை குறைக்­கலாம்.

பிள்­ளைகள் கல்வி:
உங்கள் பிள்­ளைகள் உயர் கல்­விக்­கான திட்­ட­மி­டலை ஆரம்­பத்­தி­லேயே துவக்­கு­வது நல்­லது. உங்­களால் முடிந்த தொகையை, உயர் கல்வி நிதி­யாக சேமிக்­கவும். இதற்­கேற்ற முத­லீட்டு வாய்ப்­பு­க­ளையும் நாடலாம். உயர் கல்­விக்கு தேவைப்­ப­டக்­கூ­டிய தொகையை, துல்­லி­ய­மாக கணக்­கிட முடி­யாது என்­றாலும், பண­வீக்­கத்தின் பாதிப்பை மனதில் கொண்டு சேமிப்­பது நல்­லது.

உங்கள் இலக்கு:
சேமிப்பு முக்­கியம் என்­றாலும், உங்­க­ளுக்­கான உற்­சா­கமும் அவ­சியம். உள்ளம் விரும்­பி­ய­படி செயல்­பட வேண்டும் என, உங்­க­ளிடம் சில விருப்­பங்கள் இருக்­கலாம். வெளி­நாட்டு விடு­முறை சுற்­றுலா செல்­வது, கார் வாங்­கு­வது போன்ற விருப்­பங்கள் இருக்­கலாம். இதற்­கென குறு­கிய கால இலக்கு நிர்­ண­யித்­துக் ­கொண்டு சேமிக்கத் துவங்­குங்கள். விருப்­பங்­க­ளுக்கு ஏற்ப நீண்ட கால இலக்­கிற்­கா­கவும் சேமிக்­கலாம்.

முத­லீடு செய்­யுங்கள்!
இனி சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்­தினால் போதாது. சேமிக்கும் பணத்தை முறை­யாக முத­லீடு செய்ய வேண்டும். முத­லீடு செய்­வதன் மூலமே உங்­க­ளுக்­கான செல்­வத்தை சேர்க்க முடியும். அதோடு வேலையில் கிடைக்­கக்­கூ­டிய ஊதிய உயர்­வுக்கு ஏற்ப சேமிப்பை அதி­க­மாக்கி முத­லீட்­டையும் அதி­க­மாக்க வேண்டும். செழிப்­பான காலத்தில் அதிகம் முத­லீடு செய்­வது முக்­கியம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)